24 special

அங்க அடித்தால் இங்க வேலை செய்யுது... சற்றுமுன் நடந்த அதிரடி ... எங்க இப்போ காட்டுங்க பார்ப்போம்..!

Annamalai and Rn ravi
Annamalai and Rn ravi

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை எனவும், ஆதின நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது அவரது பாதுகாப்பை மீறி ஆர்ப்பாட்ட காரர்கள் கருப்பு கொடி வீசியது முற்றிலும் பாதுகாப்பு குறைபாடு காரணம் எனவும், தமிழக காவல்துறை இதற்கு காரணமான அனைவரையும் கைது செய்யவேண்டும் என தெரிவித்தார்.


அத்துடன் ஆளுநர் பாதுகாப்பு அதிகாரி, தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கு ஆளுநர் பாதுகாப்பு விவகாரத்தில் இடையூறு செய்தவர்கள் மீது பிரிவு 124 ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்து இருந்தார், இந்த சூழலில் ஆளுநர் இன்று கோவை செல்லும் போது அவருக்கு கருப்பு கொடி காட்டப்படும் என தந்தை பெரியார் திராவிட கழகம் அறிவித்தது.

தமிழக ஆளுநர் மாளிகை சனாதான கூடமாக மாற்றியுள்ளது. அண்மையில் ஆளுநர் மாநில உரிமையை பறிக்கும் வகையிலும், மாநிலங்கள் வலிமை பெற கூடாது என ஒடுக்கும் கருத்துகளை ஆளுநர் கூறி வருகிறார். 

மேலும் பல்கலைகழகங்களை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, தமிழக அரசு தலையிட முடியாத அளவிற்கு நடத்தி வருகிறார். இவற்றை கண்டிக்கும் விதமாக ஊட்டி செல்வதற்காக ஆளுநர் ஆர். என். ரவி நாளை கோவை விமான நிலையம் வரும் போது தமிழக மக்களின் உணர்வுகளை காட்டும் வகையில் விமான நிலையம் வரும் அவருக்கு அனைத்து முற்போக்கு இயக்கம் சார்பில் கருப்பு கொடி காட்ட உள்ளோம்.

கோவை திணறும் என தெரிவித்தார் ஆனால் அவர் தெரிவித்த சில மணி நேரங்களில் தனது அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளார்  கோவை வரும் ஆளுநருக்கு முற்போக்கு அமைப்புகள் சார்பில் கருப்புக் கொடி போராட்டம் அறிவித்திருந்தோம்; காவல்துறை அனுமதி மறுத்த காரணத்தால் போராட்டத்தை ரத்து செய்கிறோம் என சோகமான முகத்துடன் கூறிவிட்டு சென்றார்.

தமிழக காவல்துறை தெளிவாக சொல்லி விட்டதாம் ஆளுநர் கருப்பு கொடி போராட்டத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால் முழுக்க முழுக்க நீங்கள் பொறுப்பு ஏற்கவேண்டும், மேலும் பிரிவு 124 கீழ் வழக்கு பதிவு செய்யப்படும், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி தெளிவாக எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார் ஒரு வேலை ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தை அனுமதியில்லாமல் நடத்தினால் சட்டம் தன் கடமையை செய்யும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து என்னடா வம்பா போச்சு என ஆளுநருக்கு எதிரான கருப்பு கொடி காட்டும் போராட்டத்தை ரத்து செய்துள்ளது ராமகிருஷ்ணன் தலைமையிலான அமைப்பு, கடந்த முறை ஆளுநரும் அண்ணாமலையும் அடித்த அடி இப்போது கோவையில் எதிரொலிக்கிறது, ஆளுநர் யார் என்பது புரிய வேண்டியவர்களுக்கு புரியும் நேரம் வந்து விட்டது.