24 special

பொறுப்பில்லாமல் இருந்தால் ரேப் தான்...! குட் ஹோம் மினிஸ்டர் !


ஆந்திரா : ஆந்திராவில் கற்பழிப்பு கொலை கொள்ளைகள் அதிகரித்து வருவதாகவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருப்பதாகவும் தெலுங்குதேசம் மற்றும் பிஜேபி கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் கற்பழிப்பு குறித்து உள்துறை அமைச்சரின் சர்ச்சையான பேச்சு தற்போது மக்களிடையே கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.


ஆந்திர மாநிலம் திருப்பதி வட்டம் ரெபெள்ளே ரயில்வே நிலையத்தில் கர்பிணிப்பெண் ஒருவர் கணவர் கண்முன்னரே மூன்று ஐந்தறிவு இரண்டு கால் மிருகங்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானார். இது ஆந்திரமாநிலத்தையே உலுக்கியது. தொடர் விசாரணையில் மூன்றுபேர் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

இதனிடையே ஆந்திர உள்துறை அமைச்சர் டி.வினிதா செய்தியாளர்களிடம் பேசுகையில் "குழந்தைகளை வளர்ப்பதில் தாய்மார்கள் பொறுப்பேற்றுக்கொள்ள மாட்டார்கள். தாய்மார்கள் தங்கள் பொறுப்பை சரியாக நிறைவேற்றாமல் இதுபோன்ற பாலியல் குற்றங்களுக்கு காவல்துறையையோ அல்லது அரசாங்கத்தையோ குற்றம் சுமத்துவது சரியல்ல.

பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் குடிபோதையில் இருந்தனர். அவர்கள் தனது கணவரை தாக்கும்போது அந்த பெண் அவரை பாதுகாக்க முயன்றார். இந்த நேரத்தில் அந்த மூன்று ஆசாமிகள் அவளை தள்ளிவிட்டு கட்டிவைத்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்படித்தான் நடந்தது" என கூறினார். உள்துறைஅமைச்சரின் இந்த பேச்சு மாநிலத்தில் பெரும் சலசலப்பை உண்டுபண்ணியுள்ளது.

பிஜேபி மாநில பொதுச்செயலாளர் எஸ்.விஷ்ணுவர்த்தன் கூறுகையில் "ஒரு பெண் உள்துறை அமைச்சராக இருந்துகொண்டு எவ்வாறு இப்படியான பொறுப்பற்ற கருத்துக்களை கூறமுடிகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் அரசின் பதில் திகைப்பூட்டுவதாக உள்ளது" என குறிப்பிட்டார். தெலுங்குதேசம் மாநில மகளிர் அணித்தலைவி வினிதா கூறுகையில்,

"குழந்தையின் நடத்தைக்கு தாய்மார்களே பொறுப்பு எனில் முதல்வர் ஜெகன் 14 வழக்குகளில் 16 மாதங்கள் சிறையில் இருந்தார்.அப்படியெனில் இந்த செயலுக்கு  முதல்வரின் தாயார் ஒய்.எஸ்.விஜயம்மா பொறுப்பில்லையா" என கேள்வியெழுப்பினார். மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.