24 special

புலிகள் வந்தால் நரிகள் தெறிக்கும்..! பஞ்ச் அடிக்கும் பிஜேபி..!

Modi, chandrasekhar
Modi, chandrasekhar

தெலுங்கானா : கடந்த ஆறுமாதங்களில் பாரதபிரதமர் மோடி தெலுங்கானாவிற்கு மூன்று முறை விஜயம் செய்துள்ளார். மூன்றாவது முறையாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பிரதமரை வரவேற்கும் நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளார். இது மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது பிரதமர்பதவியையே அவமதிக்கும் செயல் என பிஜேபியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 


2023ல் தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரவுள்ளது. தேர்தலுக்கான பணிகளில் பண்டி சஞ்சய் குமார் தலைமையிலான மாநில பிஜேபி மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் மத்தியில் பிஜேபி 2014ல் ஆட்சியமைத்த பிறகு டெல்லியை தாண்டி தேசிய கூட்டம் நடத்துவது இது நான்காவது முறையாகும். இதற்க்கு முன்னர் 2016ல் கேரளா 2017ல் ஒடிசா 2015ல் பெங்களூர் என மூன்று தேசிய கூட்டங்களை நடத்திய பிஜேபி தெலுங்கானாவில் நான்காவது கூட்டத்தை நடத்துகிறது.

தெலுங்கானா சுற்றுப்பயணத்திற்காக ஹைதராபாத் வந்தடைந்த பிரதமர் மோடியை மாநில முதல்வராக சந்திரசேகர் ராவ் வரவேற்காமல் புறக்கணித்துவிட்டார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய தெலுங்கானா பிஜேபி மாநில தலைவர் பண்டி சஞ்சய் " புலிகள் வந்தால் நரிகள் ஓடிவிடும். இப்போது புலி வந்திருக்கிறது.

கேசிஆர் ஏன் பயந்து ஓடுகிறார். அவர் ஏன் இப்படி செய்கிறார் என்பது தெரியவில்லை. இனி வரும் நாட்களில் மாநிலம் முழுவதும் காவிக்கொடிகளும் பிஜேபி கொடிகளும் ஏற்றப்படும்" என பண்டி தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி கூறுகையில் " பிரதமர் கூட்டுறவு மற்றும் கூட்டாட்சிக்கான தெளிவான அழைப்பை விடுத்துள்ளார். 

கடந்த எட்டாண்டுகளில் அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து மரியாதையுடன் பணிவுடன் நடந்துகொண்டார். அரசியலமைப்பு ரீதியாக கூட்டாட்சி முறையை கேசிஆர் சீர்குலைத்துள்ளது அவரது குணத்தை பிரதிபலிக்கிறது" என கட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். இதனிடையே பிஜேபியின் தேசிய செயற்குழு கூட்டம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்கள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.