24 special

கேமராக்கள் எப்படி பழுதாச்சு..? தமிழகத்தில் நடக்கும் அடுத்தடுத்த அதிர்ச்சி..!

CCTV
CCTV

தமிழகத்தில் கடந்த மாதம் ஏப்.,19ம் தேதி நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் நான்காம் தேதி வெளியாகவுள்ளது. தேர்தல் முடிந்த நிலையில், மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


நாடு முழுவதும் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டமாக நடந்து முடிந்த நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு பதிவு இயந்திரங்களை பாதுகாக்கும் மையங்களில் துணை ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்களை கொண்டு 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணிக்கப்படுகின்றனர். இந்த தேர்தலை பொறுத்தவரையில் திமுக நாற்பதுக்கு நாற்பதும் வெற்றி என்ற நிலையில், தனியார் நிறுவனம் அரசு உளவுத்துறை அதிகாரிகள் எடுத்த சர்வேயில் திமுக 20 முதல் 25 வரை மேட்டுமே வெற்றி பெரும் என திமுக தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக 5 தொகுதிகளை வரை கைப்பற்றலாம் என கூறப்படும் நிலையில், அதிமுக இரண்டு அல்லது மூன்று தொகுதி வரை அதிமுக கைப்பற்றலாம் என தகவல் கூறுகிறது. இந்த சூழ்நிலையில், திமுகவுக்கு போட்டியாக இருக்கும் தொகுதிகளில் திமுக தனது வேலையை செய்ய தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. அதாவது, சமீப நாட்களாக நீலகிரி தொகுதியில் உள்ள வாக்கு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி விட்தாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து, ஈரோடு, தென் காசி பகுதிகளில் கேமராக்கள் பழுதாகின. அதுபோல் தேனி தொகுதியில், கேமராக்கள் பழுதானது அங்கு இளைஞர் ஒருவர் உள்ளே செல்வதற்கு முயன்றதாக தகவல் வெளியானது.

உடனடியாக, சரி செய்யப்பட்டாலும் மக்களிடம் நம்பகத்தன்மை கேள்வி எழுந்துள்ளது. இந்த தொகுதிகள் எல்லாம் திமுகவுக்கு சாதகமாக இல்லாத சூழ்நிலை நிலவுவதால் திமுகவினர் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக அரசியல் வட்டாரத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி தொகுதியில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் அவர்களுக்கு சாதகமாக இருப்பதாலும், தேனீ தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளர் டிடிவி தினகரன் சாதகமாக இருப்பதால் அங்கும் இது போன்ற செயல் ஏற்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் காசியில் பாஜக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக இருப்பதால் அங்கும் இது போன்ற செயல் நடந்ததால் தொடர்ந்து சந்தேகத்தை அளிக்கிறது.

இந்நிலையில், அரசியல் தலைவர்கள் தெரிவிப்பது கேமராக்கள் பழுதானால் அடுத்த 5 மணி நேரம் கழித்து சரி செயப்பட்டாலும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என கூறுகின்றனர். அரசியல் விமர்சகர்கள் கூறுவது திமுக விடம் தான் இந்த கேள்வியை எழுப்பனும். இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேட்கக்கூடாது என கூறுகின்றனர்.