Tamilnadu

வெளியானது கோபாலபுரம் எக்ஸ்பிரஸ். திமுக என்றால் என்ன தெரியுமா? மொத்தமாக பங்கம் செய்த அண்ணாமலை.! காட்டு தீயாக வைரல்

mk stalin annamalai
mk stalin annamalai

வெளியானது கோபாலபுரம் எக்ஸ்பிரஸ். திமுக என்றால் என்ன தெரியுமா? மொத்தமாக பங்கம் செய்த அண்ணாமலை.! காட்டு தீயாக வைரல் 



உலக அளவில் மகளிர் தினம், நண்பர்கள் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், குழந்தைகள் தினம், தொழிலாளர்கள் தினம் என்று மக்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. அது தான் ஏப்ரல் 1 இந்த நிலையில் திமுக குறித்து பாஜக மாநில தலைவர் வெளியிட்டுள்ள கோபாலபுர எக்ஸ்பிரஸ் எனும் புகைப்படங்கள் இணையத்தில் கடும் வைரலாகி வருகிறது. மேலும் மூன்று மொழி கொள்கையை எதிர்த்து வரும் திமுகவுக்கு பதிலடியாக மூன்று  மொழிகளில் கோபாலபுர எக்ஸ்பிரஸ் பகுதியை வெளியிட்டுள்ளர். இதில் திமுக மக்களை ஏமாற்றிய செய்திகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. 


அதில் யுனெஸ்கோ மன்றத்தின் '21ஆம் நூற்றாண்டின் சிறந்த தலைவர்”, ஏப்ரல் 1, 2025 - தமிழ் பெருமையும், சர்வதேச அழகும் ஒன்றாய் இணைந்த ஒரு மாபெரும் விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு "21ஆம் நூற்றாண்டின் சிறந்த தலைவர்" என்ற விருது யுனெஸ்கோ மன்றத்தால் வழங்கப்பட்டது. 


இந்த படத்தை அண்ணாமலை வெளியீடுவதற்கு காரணம்  பெரியாருக்கு தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என யுனெஸ்கோ பட்டம் கொடுத்ததாக பொய்யை பரப்பி வந்ததுதிமுகவும் திராவிடர் கழகமும். தெற்கு ஆசிய நாடுகள் பட்டியலில் இந்தியா இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், இந்தத் தவறான தகவலை வேண்டுமென்றே 9 ஆம் வகுப்புபாடப் புத்தகத்தில் சேர்த்து தமிழக மக்களை முட்டாளாக்கியது திராவிட மாடல். 


அடுத்தது தமிழகத்தை போதையில்லாத மாநிலமாக அறிவித்தது போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு : திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் விருது பெறுகிறார் போதை பொருள் கடத்தல் மன்னன் முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்குடன் முதல்வர் துணை முதல்வர் இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளார். இதறகு காரணம்  தமிழகத்தில் தற்போது போதை பொருள் கலாச்சாரம் மேலோங்கியுளளது மேலும் அதனால் குற்றங்கள் அதிகமாகி வருகிறது ஆனால் முதல்வரோ தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது போதை பொருள் கடத்தல் குறித்து தமிழக மக்களை முட்டாளாக்கியது திராவிட மாடல். 


அடுத்தது.. மதுவை ஒழித்த தமிழகத்திற்கு விருது கொடுக்கும் உலக சுகாதார அமைப்பு முன் எப்போதும் இல்லாத சாதனையாக மது இல்லாத மாநிலம் என்ற விருதை  பெற்றது தமிழ்நாடு ஜெனிவாவில் உள்ள மாபெரும் மது சந்தையில்  இந்த அறிவிப்பு வெளியானது என  முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது என  செய்தியை வெளியிட்டுளது.. இதற்கு காரணம்  திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொண்டுவரப்படும் என தேர்தலுக்கு முன்னர் கூறி வந்தார்கள் ஆனால் தேர்தல் வந்த பிறகு டாஸ்மாக்கில் ஆயிரம் கோடிக்கும் மேல் ஊழல் தான் தற்போது நடந்துள்ளது மேலும் மது விற்பனையால் தமிழகத்தில் அதிக இளம் விதவைகள் இருப்பதாக கனிமொழி சொன்னார் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு என்றார் ஆனால்  இவ்வாறு சொல்லி  தமிழக மக்களை முட்டாளாக்கி  ஆட்சியை பிடித்துள்ளது என்பதை விளக்குவதற்காக இந்த  செய்தியை குறிப்பிட்டுள்ளது தமிழக பாஜக


மேலும் தமிழகத்தில் தொடர்ந்து 4வது ஆண்டாக குறையும் பெண்களுக்கு எதிரான  குற்றங்கள் என குறிப்பிட்டு அண்ணாபல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் படத்தை வெளியிட்டுள்ளது. அடுத்ததாக சென்னை, ஏப்ரல் 1, 2025 சன்ஷைன் பள்ளி உட்பட அனைத்து தனியார் பள்ளிகளிலும் இருமொழிக் கொள்கையை கட்டாயமாக்கி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் மொழி கொள்கை வரலாற்றில் தனது பெயரைப் பொறித்துள்ளார் முதல்வர்.


அரசு பள்ளியில் படிக்கும் ஏழை  மாணவர்களுக்கு மூன்று மொழி தேவை இல்லை ஆனால் முதல்வர் மற்றும் திமுக அமைச்சர்கள் நடத்தும் பள்ளியில் மூன்று மொழிகள் கற்றுத் தருவார்கள் என்பதை விளக்குவதற்காக இந்த செய்தியை பதிந்துள்ளர்கள்