24 special

அடேங்கப்பா 50,000 கோடி ஊழல் சிக்கும் கோபாலபுர குடும்பம் அறிவாலயத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் தொடங்கியது

VIJAY,UTHAYANIDHI
VIJAY,UTHAYANIDHI

தமிழக அரசியலில் ஊழல் எப்போதும் ஒரு பழக்கமான கதையாக இருந்து வருகிறது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டார். மற்றொரு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இல்லங்களில் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. டாஸ்மாக் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் பல கோடி ரூபாய் முறைகேடுகள் அம்பலமாகின. இவை எல்லாம் வெறும் முன்னோடிகள் மட்டுமே.அதுமட்டுமா  ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை 10 லட்சம் ரூபாய்க்கு கணக்கு காட்டியதாகக் கூறப்படும் முறைகேடு மூலம் மட்டும் சுமார் 400 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கலாம் என்கின்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டிரான்ஸ்பார்மர் ஊழல், நிலக்கரி ஊழல் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.


சுகாதாரத் துறையில் மா.சுப்பிரமணியன் அமைச்சராக இருந்தபோது அரசு கட்டிடங்கள் கட்டும் பணிகளில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. அறநிலையத் துறையின் கீழ் வரும் சுவாமி மலை லிப்ட் பணிக்கு அதிகபட்சம் 60 லட்சம் ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்ட நிலையில், 3 கோடி ரூபாய்க்கு கணக்கு காட்டப்பட்டிருப்பதாக வரும் தகவல்கள் ஊழலின் ஆழத்தை புரிய வைக்கின்றன.ஆட்சி முடிவுக்கு வரும் முன்பே ஆதாரங்களை அழிக்கும் முயற்சிகள் நடந்ததாகவும், அதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்றதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

கடந்த பல தசாப்தங்களாக திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சி அமைத்தபோது ஒரு மறைமுக ஒப்பந்தம் இருந்ததுபோல் தெரிந்தது. திமுக செய்த ஊழலை அதிமுக கண்டுகொள்ளாது, அதிமுக செய்ததை திமுக கண்டுகொள்ளாது. இரு கட்சிகளும் ஒன்றையொன்று பாதுகாத்துக் கொண்டன என்ற குற்றசாட்டுகள்உள்ளது.

ஆனால் இப்போது சூழல் மாறியிருக்கிறது. பொருளாதார நிபுணர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்களின் மதிப்பீட்டின்படி, கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளை நேர்மையான அதிகாரிகளுடன் தீவிரமாக விசாரித்தால், அடுத்த மூன்று மாதங்களுக்குள்சில துறைகளில் மட்டும்  50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் அம்பலப்படுத்த முடியும் என்கின்றனர்.இந்த ஊழல் சங்கிலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன் உள்ளிட்ட குடும்பத்தின் பங்கு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டால், ஒட்டுமொத்த குடும்பமும் சட்டத்தின் முன் நிற்கும் நிலை உருவாகும் வாய்ப்பு அதிகம் என்று அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன.

இப்போது முக்கிய கேள்வி இதுதான்: திமுக கூட்டணி கட்சிகளை துணைக்கு வைதுகொண்டு ஆட்சி நடத்தும் விஜய் தலைமையிலான தவெக அரசும் மௌனம் காக்குமா? அல்லது ஊழலைத் துருவி எடுத்து, மக்கள் வரிப்பணத்தை மீட்டெடுக்கும் துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்குமா?  ஊழல் ஒழிப்பு என்பது வெறும் வாக்குறுதியாக மட்டும் இருக்கக்கூடாது. அது நடைமுறைப்படுத்தப்படும் செயலாக மாற வேண்டும். அப்படி மாறினால் மட்டுமே தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும். வெறும் பஞ்ச் டயலாக் தனா.. இல்லை ஆக்ட்டிவ் முதல்வரா விஜய் என பொறுத்திருந்து பாப்போம்!