24 special

'நாய் கூட" ஒவைசியை பங்கமாய் கலாய்த்த முன்னாள் முதல்வர்..!


மும்பை : கடந்த இருதினங்களுக்கு முன்னர் AIMIM  தலைவரும் அசாதுதீன் ஒவைசியின் சகோதரருமான அக்பருதீன் ஒவைசி அவுரங்கசீப் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தினார். இது பலதரப்பினரிடமிருந்து  கண்டங்களை பெற்றது. இந்த சம்பவத்தை MNS தலைவர் ராஜ் தாக்கரே மற்றும் பிஜேபியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.


இந்நிலையில் கடந்த ஏப்ரல் 12 அன்று ராஜ்தாக்கரே மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்றவேண்டும் என்றும் அப்படி அகற்றவில்லையெனில் ஹனுமான் சாலிசா மற்றும் பக்திப்பாடல்கள் மாநிலம் முழுவதும் பாடப்படும் என அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து அரசியல் தம்பதிகளான எம்பி நவநீத் ராணா மற்றும் எம்.எல்.ஏ. ரவி ராணா இருவரும் முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லத்தின் முன் ஹனுமான் சாலிசா பாட முயன்றனர்.

தம்பதிகள் இருவர்மீதும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124ஏ தேசத்துரோகம் 153 ஏ இருபிரிவினருக்குமிடையே பகைமையை ஊக்குவித்தல் என இருவழக்குகள் பதியப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இதை எதிர்த்து ராணா தம்பதியருக்கு ஆதரவாக பிஜேபி களமிறங்கியுள்ளது. இதனிடையே முன்னாள் முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் மும்பையில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசுகையில் " மஹா விகாஸ் அகாதி கூட்டணியின் பாபர் கட்டமைப்பை வீழ்த்தும் வரை நான் ஓயமாட்டேன். நாங்கள் ஹனுமான் சாலிசா கோஷமிட்டோம். பாலசாஹேப் தாக்கரே தனது வாரிசின் ஆட்சிக்காலத்தில் ஹனுமான் சாலிசா பாடுவது தேசத்துரோகமாக இருக்கும் எனவோ அல்லது அவுரங்கசீப்பின் கல்லறைக்கு செல்வது அரசின் நெறிமுறையாக இருக்கும் என்றோ எப்போதாவது நினைத்திருப்பாரா.

அசாதுதீன் ஒவைசி தொடர்ந்து அவுரங்கசீப்பின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார். அதை  தொடர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறீர்கள். அதற்க்கு நீங்கள் வெட்கப்படவேண்டும். கேளுங்கள் ஒவைசி அவுரங்கசீப்பின் அடையாளத்தை பார்த்து நாய் கூட சிறுநீர் கழிக்காது" என கடுமையாக தேவேந்திர பட்நாவிஸ் விமர்சித்தார். மேலும் ராணா தம்பதிகள் மேல் போடப்பட்ட பொய்யான வழக்குகள் குறித்தும் விமர்சித்தார்.