24 special

பேய் கிட்ட தப்பிச்சு பிசாசு கிட்ட மாட்டியாச்சு மொத்தமும் வெளிவந்தது இதுக்கு தான் ஒட்டு போட்டோமா விஜயை கிழிக்கும் தமிழக மக்கள்

VIJAY
VIJAY

“தூய்மை அரசியல்”, “மாற்றத்தின் ஆட்சி”, “புதிய தலைமுறை நிர்வாகம்” என்று மக்களிடம் மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கி ஆட்சிக்கு வந்த விஜய் தலைமையிலான அரசு, இன்று தனது அமைச்சர்களின் குற்றப் பின்னணிகளாலேயே கடுமையான விமர்சனத்தில் சிக்கியுள்ளது. பழைய அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்து வந்த இந்த ஆட்சி, தற்போது அதைவிட பெரிய சர்ச்சைகளில் சிக்கிய நபர்களையே அமைச்சர்களாக வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


குறிப்பாக இந்து மதத்தை கடுமையாக விமர்சித்த வன்னியரசுக்கு அமைச்சர் பதவி வழங்கியிருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இரட்டைக் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பின்னணி கொண்டவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது “இது தான் விஜய் சொன்ன புதிய அரசியலா?” என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. “மத நல்லிணக்கம்” பேசிக்கொண்டே, இந்து உணர்வுகளை அவமதித்தவர்களுக்கு உயர்ந்த பதவி வழங்கப்படுவது ஏன் என்று பலர் கேட்க ஆரம்பித்துள்ளனர்.

அதேபோல் சூலூர் தொகுதி MLA திரு. என்.எம். சுகுமார் குறித்து வெளியாகியுள்ள விவரங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலி ஆவணங்கள் தயாரித்து கார்ப்பரேட் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ள நபர் இன்று ஆட்சியில் இடம்பிடித்திருப்பது, “நேர்மையான நிர்வாகம்” என்ற விஜயின் பேச்சையே கேள்விக்குறியாக்கியுள்ளது. “ஊழல் இல்லாத அரசு” என்று கூறியவர்கள், போலி ஆவண சர்ச்சையில் சிக்கியவர்களை எப்படி முக்கிய இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்று மக்கள் கேட்கிறார்கள்.

மதுரை கிழக்கு தொகுதி MLA திரு. எஸ். கார்த்திகேயன் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகள் பேசப்பட்டு வருகின்றன. போலி பத்திரங்கள், போலி உயில் ஆவணங்கள் தயாரித்து, அடியாட்களை பயன்படுத்தி மக்களின் நிலங்களை பலவந்தமாக அபகரித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. “நில அபகரிப்பு அரசியலை முடிவுக்கு கொண்டு வருவோம்” என்று பேசியவர்கள், இன்று நில மோசடி குற்றச்சாட்டு கொண்டவர்களையே ஆட்சியில் வைத்திருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன.

காட்பாடி தொகுதி MLA டாக்டர் எம். சுதாகர் குறித்த தகவல்களும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் சட்டவிரோதமாகக் கூடி, பொதுமக்களை சிறைபிடித்து, ஆபத்தான ஆயுதங்களால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படும் பின்னணி, “இப்படிப்பட்டவர்கள்தானா புதிய தமிழகத்தை உருவாக்கப் போகிறார்கள்?” என்ற கேள்வியை மக்களிடம் உருவாக்கியுள்ளது.

நிதியமைச்சர் திரு. மரியம் வில்சன் குறித்த சர்ச்சைகளும் தற்போது பெரிதாக பேசப்படுகிறது. 2012ஆம் ஆண்டு இவர் நிர்வகித்த கல்லூரி மைதானம் இடிந்து விழுந்ததில் 10 அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூரில் நீதித்துறை நடுவர் முன்னிலையில் PRC வழக்கு எண் 4/2014 கீழ் இந்த விவகாரம் நிலுவையில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள், “மக்கள் உயிரிழந்த சம்பவத்திலும் பெயர் வந்தவருக்கு நிதியமைச்சர் பதவி தேவையா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.இவை அனைத்தையும் மக்கள் இன்று ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்துள்ளனர். “சினிமாவில் நல்லவன் வேடம் போடுவது வேறு; அரசியலில் நல்லவர்களை தேர்வு செய்வது வேறு” என்பதே மக்கள் மத்தியில் உருவாகும் கருத்தாக உள்ளது.