24 special

6 மாதத்தில் தேர்தலா அம்பலமானது திமுகவின் உள்ளடி! ஆளுநர் எடுத்த அதிரடி! கலக்கத்தில் அறிவாலயம்! உளவுத்துறையின் பகீர் ரிப்போர்ட்

MKSTALIN,VIJAY
MKSTALIN,VIJAY

தமிழக அரசியல் களம் தற்போது ஒரு அதிரடித் திருப்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசைத் தொடர்ச்சியாகக் குறை கூறி வரும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள்,  ஒரு மிக நுணுக்கமான அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. சட்டமன்ற தோல்விகளை ஜீரணிக்க முடியாமல், எப்படியாவது அடுத்த ஆறு மாதங்களுக்குள் மீண்டும் ஒரு தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் விஜய்யை அவர்கள் ஒரு கருவியாகப் பயன்படுத்தித் தூண்டிவிட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவுக்கரம் நீட்டுவது கூட, இந்தத் திரைமறைவுத் திட்டத்தின் ஒரு பகுதிதான் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன. மக்கள் மத்தியில் "நாங்கள் நல்லவர்கள்,  என்கிற 'சிம்பதி' பிம்பத்தை உருவாக்குவதற்காகவே கொளத்தூரில் நன்றி அறிவிப்புப் பேரணி போன்ற நிகழ்வுகளை ஸ்டாலின் முன்னெடுத்து வருகிறார்.


விஜய் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்திருந்தாலும், சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்கிற மெஜாரிட்டி அவரிடம் இல்லை. இந்தச் சூழலில், மிகப்பெரிய கட்சி என்ற அடிப்படையில் ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அழைத்தாலும், அவரால் 14 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. ஒருவேளை விஜய் ஆட்சி பொறுப்பேற்று பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும். அதன் பிறகு ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் தேர்தல் வரும்—இதைத் தான் திமுகவின் 'மாஸ்டர் பிளான்' என உளவுத்துறை டெல்லிக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது. 

விஜய்க்குப் போதுமான பலம் இல்லாதவரை அவரை ஆட்சியில் அமர்த்துவது, மீண்டும் திமுகவிற்கே சாதகமாக முடியும் என்பதை உளவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளது. இதனால்தான், விஜய்க்கு ஆதரவு தருவது போலப் பேசி, அதே சமயம் ஆளுநரையும் மத்திய அரசையும் வம்புக்கு இழுக்கும் இரட்டை வேடத்தை திமுக அரசு கச்சிதமாக ஆடுகிறது. 

அதிமுக வெளியிலிருந்து ஆதரவு தரத் தயாராக இருந்த சூழலில், காங்கிரஸ் முந்திக்கொண்டு விஜய்க்கு ஆதரவு தெரிவித்தது மிகப்பெரிய அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் 'ஆதவ்  அர்ஜுனா' போன்ற நிழல் அரசியல் ஆலோசகர்களின் கைவரிசை இருக்கலாம் எனத் தகவல்கள் கசிகின்றன. அதிமுகவின் மூத்த தலைவர், செங்கோட்டையன்  தற்போது அமைதி காத்து வருவதும்  ஆளுநரை நிதானமாக முடிவெடுக்கத் தூண்டியுள்ளது. "ஆறு மாதம் வரை விஜய் ஆளட்டும்" என முதல்வர் ஸ்டாலின் பேசுவது ஒரு தந்திரமான நடிப்பு என்றும், மக்களின் அனுதாபத்தைப் பெற்று மீண்டும் அரியணையில் ஏறுவதற்கான தேர்தலுக்கு அவர் தயாராகி வருகிறார் என்பதும் அம்பலமாகியுள்ளது. இந்த ஒட்டுமொத்த அரசியல் சதுரங்க ஆட்டத்தையும் உன்னிப்பாகக் கவனிக்கும் ஆளுநர், மிகுந்த நிதானத்துடன் காய்களை நகர்த்தி வருகிறார்.