24 special

இந்துவை பத்தியா தப்புத்தப்பா பேசி சவால் விடுறீங்க? தூண்டில் போட்ட பாஜக... புழுவாய் துடிக்கும் ஆ.ராசா!

Arasa, bjp
Arasa, bjp

2ஜி வழக்கையே லேசாகப்பார்த்தவன் நான்... சவால் விட்டு பேசிகொண்டே இருக்கிறேன்...மிரட்டி பார்த்தால் எதையும் சந்திக்க தயார் என நெஞ்சை நிமிர்த்துகிறார் திமுக எம்.பியும், அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளருமான ஆ.ராசா. இந்து சர்ச்சைப் பேச்சுக்கு பிறகு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, ஈரோடு பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளை கலந்து கொண்டு சென்னை திரும்பினார். அவருக்கு சேலம் அயோத்தியாபட்டினம் அடுத்த மின்னாம்பள்ளி பகுதியில் திமுக சார்பில் தடபுடல் வரவேற்பு அளித்து வரவேற்றது நிர்வாகம்.


ஆண்டிமுத்து. ராசா, இந்துக்களை குறித்து இழிவாக பேசியதற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை என காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்ககறிஞர் மூலம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து கைது நடவடிக்கை எடுக்கக் கைவிரிக்கிறது மாநில அரசு.ஒருபுறம் தடபுடல் வரவேற்பு, மறுபுறம் நடவடிக்கை எடுக்க கைவிரிப்பு..  இந்தப்பூனைக்கு யார் மணிகட்டுவது என இந்து அமைப்புகள் கொத்தித்தெழுந்து வந்த நிலையில், பழைய வழக்கை சிபிஐ தூசி திட்டி எடுத்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது ஆ.ராசாவுக்கு இப்போது சிக்கலோ சிக்கல். 

இதுகுறித்து இந்து அமைப்பு சார்பாகவும், சிபிஐ தரப்பில் சிலரிடமும் பேசினோனோம். அவர்கள், ‘’ 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஆ.ராசா உட்பட பலர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 2ஜி வழக்கின் குற்ற பத்திரிகையில் உண்மையில்லை என்றும் தேவையான சாட்சியங்கள் நீதிமன்றத்தில் முன் நிறுத்தப்படவில்லை எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார். நீதிமன்றத்தில் இந்த தீர்ப்புக்கு எதிராக சிபிஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல் முறையீட்டு வழக்கில் தினசரி விசாரணைக்கு அனுமதி கூறி சிபிஐ வலியுறுத்தியது.

இது திமுக எம்.பி., ஆ.ராசாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் 1999 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. 1999 -ல் பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்தது.

அப்போது பாஜகவுடன் திமுக கூட்டணியில் இருந்தது.மத்திய ஊரக வளர்ச்சிக்கான இணை அமைச்சர், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் ஆகிய பதவிகளை ஆ.ராசா அப்போது வகித்து வந்தார். அப்போது வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக புகார் வந்ததை அடுத்து சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.

மேலும், இதனை  தூசிதட்டிய வழக்கில் கிடைத்த சில ஆவணங்களின் அடிப்படையிலும் இந்த ரெய்டுகளை அமலாக்க துறை, சிபிஐ  மேற்கொண்டன. மொத்தம் 16 பேர் மீது அப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ரூ.5.53 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்ததாக ஆ.ராசா உட்பட ஐந்து பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்குகள் வேகம் எடுக்கும் ’’ என்ற பெரும் விளக்கமளித்தனர்.

இதுகுறித்து ஆ.ராசாவுக்கு நெருக்கமான  திமுகவினர் கூறுகையில், ‘’இது பழிவாங்கும் நடவடிக்கை.தனித் தமிழ்நாடு தொடர்பாக ஆ.ராசிய பேசிய சர்ச்சை பேச்சுகள் அடங்குவதற்குள் இந்து மதம் குறித்தும் சனாதனம் குறித்தும் அவர் பேசியதை சர்ச்சையாக மாற்றி விட்டனர். ’இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்...  சூத்திரனாக இருக்கும் வரை நீ வேசியின் மகன்..’’ என்று பேசிய அந்த ஒற்றை வரி தான் தற்போது பாஜக- ஆர்.எஸ். எஸ் ., இந்து முன்னணி உள்பட இந்து அமைப்புகளை கொந்தளிக்க செய்துள்ளது.

ஆ.ராசா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் பல்வேறு போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். இந்துக்கள் குறித்து ஆ.ராசா பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தனர்.

ஆனால், ராசா தான் பேசியது சரியானதுதான் என்ற பாணியில் மீண்டும் அழுத்தம் திருத்தமாக விளக்கம் அளித்திருந்தார். எனவே எம்பி ஆக ஆராசா பதவிப் பிரமாணம் இருக்கும்போது செய்த உறுதி மொழியை மீறி விட்டதாகவும் இதனால் அவரை எம்பி பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் மத்திய அரசை வலியுறுத்தி இருந்தன.’’ என்கின்றனர்.

இந்த நிலையில் தான் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இது குறித்து பாஜக முக்கிய நிர்வாகிகளிடம் பேசினோம், ‘’திரிணாமும் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி, அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் மத்திய பாஜகவிற்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும் வகையில் செயல்பட்டு வந்தனர். எனவே திரிணாமும் காங்கிரஸ் நிர்வாகி அபிஷேக் பாலாஜி , பார்த்தா சட்டர்ஜியின், வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை மூலம் ரெய்டு நடத்தி, கட்டுக் கட்டாக பணத்தை கைப்பற்றிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுத்தது.

இதனை அடுத்து மம்தா பானர்ஜி தற்போது கடுமையாக பாஜக மீது எதிர்ப்பு காட்டுவதில்லை. அதேபோல ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவரும், புது டெல்லி சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஜெயினை சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. மேலும் அக்கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வர் மணி சிசோடியா மீது மதுபான ஊழல் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேசியக் கட்சியை தொடங்கியுள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு செக் வைக்கும் வகையில், அவரது மகளான கவிதாவை கலால் வரி விவகாரத்தில் மத்திய அரசு குறி வைத்துள்ளது. என்று பாஜகவிற்கு தொடர்ந்து எதிர்ப்பு காட்டிவரும் ஆ,ராசா சார்ந்த்துள்ள திமுகவிற்கு செக் வைக்கும் வகையில் அவர் மீதான மீதான சிபிஐ வழக்கை 7 ஆண்டுகளுக்கு பிறகு தூசி தட்டி எடுத்து அதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது. இதன் மூலம் தங்களுக்கு எதிரான செயல்பாடுகளில் திமுக வேகத்தை குறைக்க முடியும்’’ என நம்புகிறார்கள் பாஜக வினர்.ஆக மொத்தத்தில் வசமாகன் சிக்கவுள்ளார் ஆண்டிமுத்து ராசா..!