கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கிய லியோ படம் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் கடந்து இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது, ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் படங்கள் வெற்றியைத் தொட்ட காரணத்தினாலும், எப்போதும் விஜய் திரைப்படம் வசூலை அதிகமாக வாரிக் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பின் காரணத்தினாலும் லியோ திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இது எல்லாவற்றிற்கும் மேல் காரணமாக லோகேஷ் கனகராஜ் உருவாக்கி வைத்துள்ள எல் சி யு கதைய களத்தில் லியோ வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது, இதன் காரணமாக லியோ திரைப்படம் வெளியானதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் வேறு எந்த திரைப்படமும் திரையிடப்படவில்லை. லியோ படம் மட்டுமே திரையிடப்பட்டது,
ரசிகர்கள் காலை முதலே பேனர், போஸ்டர் என திரையரங்குகளில் அதகளப்படுத்தினர். ஒரு சில இடங்களில் நேற்று இரவு முதல் ரசிகர்கள் குவிந்து டிக்கெட் வாங்கிய படத்தை பார்த்தனர், அப்படி படம் பார்த்த ரசிகர்கள் மத்தியில் எந்த மாதிரியான விமர்சனங்கள் வருகின்றது? படம் எப்படி இருக்கிறது என தகவல்களை சேகரித்த பொழுது LCU கதை களத்தில் ரசிகர்களுக்கு ஏமாற்றமும் படத்தில் லோகேஷ் கனகராஜ் செய்த காரியமும் தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக லியோ திரைப்படம் வெளியாவதற்கு சில மாதங்கள் முன்பு லோகேஷ் கனகராஜுக்கும், விஜய்க்கும் ஒரு சிறு மனஸ்தாபம் அதன் காரணமாக லியோ படத்தை இயக்குவதில் இருந்து அவர் விலகிவிட்டார் என சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது, அதற்கு தகுந்தார் போல் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் ப்ரோபைலில் லியோ திரைப்படத்தை குறிப்பிடாமல் இருந்தார், இது மட்டும் அல்லாமல் லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்படத்தில் விஜய்யுடன் ஏற்பட்ட மனசார்பின் காரணமாக கதையை மெருகேற்ற வில்லை, அவர் படத்தை இயக்குவதில் ஆர்வம் காட்டவில்லை எனவே படம் வேறு ஒரு இயக்குனரை வைத்து இயக்கப்பட்டது என தகவல்கள் பரவியது.
தற்பொழுது படம் பார்த்த ரசிகர்களும் அது போன்ற கருத்தை சொல்கிறார்கள், அதாவது முதல் பாதி நன்றாக இருக்கிறது லோகேஷ் இயக்கிய படம் போல் இருக்கிறது! இரண்டாம் பாதியில் சற்று தொய்வு ஏற்படுகிறது, அது லோகேஷ் இயக்கிய படம் போல் இல்லை என்பது போன்று ரசிகர்கள் தங்கள் கருத்தினை முன்வைத்து வருகின்றனர்.
இது எல்லாவற்றிற்கும் மேலாக லோகேஷ் இயக்கிய படம் என்றால் அதில் எல் சி யு கதை களம் கண்டிப்பாக இருக்கும், ஆனால் இந்த திரைப்படத்தில் LCU கதை களத்தில் வரும் கதாபாத்திரங்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் அப்படி எதுவும் இல்லை, கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் ஒரு இடத்தில் கமலின் வாய்ஸ் ஓவர் கேட்பது மட்டுமே LCU கதைக்களம் என காட்டப்படுகிறது, மற்றபடி இந்த திரைப்படத்தில் எல் சி யு கதைக்களம் வரும் என எதிர்பார்த்து சென்ற எங்களுக்கு ஏமாற்றமே என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
நேற்று இரவு வரை லியோ திரைப்படம் சில திரையரங்குகளில் வெளியாகுமா? ஆகாதா என்ற எதிர்பார்ப்பு எல்லாவற்றையும் தாண்டி இன்று காலை லியோ திரைப்படம் வெளியானதும் அதற்கு தகுந்தார் போல் படத்தில் கலவையான விமர்சனங்கள் வருவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் நேற்று சினிமா விமர்சனம் செய்யும் விமர்சகர்கள் இது குறித்து கூறும் பொழுது 'லியோ திரைப்படம் அதிகமாக பொருள் செலவில் எடுக்கப்பட்டது, அதனை எப்படியும் முதல் வாரத்தில் அதாவது ஆயுத பூஜை விடுமுறை நாளுக்குள் எடுத்து விட வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர் கொடுத்த விளம்பரங்கள் தான் இது போன்ற சர்ச்சைகள், மற்றபடி லியோ திரைப்படம் ஒரு ஆவரேஜான விஜய் படம் தான்' எனக் கூறியதும் குறிப்பிடத்தக்கது. எது எப்படி இருந்தாலும் விஜய் நடித்த லியோ திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடுகிறார்கள்... விஜய் வரும் காட்சிகளில் எல்லாம் திரை தீப்பிடிக்கிறது...