24 special

சி.பி.ஐ போட்ட உத்தரவு .. ஒரே நாளில் ஏற்பட்ட தலைகீழ் திருப்பம்...ஸ்டாலினுக்கு ஷாக் மேல் ஷாக்... விஜய்க்கு கை கொடுத்த காங்கிரஸ்

MKSTALIN, CBI
MKSTALIN, CBI

கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது.  கரூர் துயரச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட நான்கு பேர் டிசம்பர் 29 அன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லியில் ஆஜராக உள்ள நிலையில் விஜய்க்கு ஆதரவாக ராகுலின் ரைட் ஹேண்ட் ஒருவர் களமிறங்க உள்ளாராம். இது தான் தமிழக அரசியலை புரட்டி போட்டுள்ளது. ராகுலின் ரைட் ஹேண்ட் என்று அழைக்கப்படும் முன்னாள் எஸ்பிஜி அதிகாரி ஒருவர்தான் விஜய்க்கு அறிவுரை வழங்க உள்ளாராம். சிபிஐ விசாரணையில் என்ன பேச வேண்டும்? என்ன ஆதாரங்களை கொடுக்க வேண்டும்? என்று முக்கியமான ஆலோசனைகளை வழங்க உள்ளாராம்.


ஆளும் திமுக அரசுக்கு எதிரான ஆதாரங்களை விசாரணையில் சமர்ப்பிக்க தவெக திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான உதவிகளை அந்த ரைட் ஹேண்ட் செய்வார் என்று கூறப்படுகிறது. ராகுலுக்கு தெரிந்தேதான் விஜய்க்கு ஆதரவாக இவர் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சமூக ஊடகப் பொறுப்பாளர் நிர்மல் குமார், ஈரோடு மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் சி.பி.ஐ. சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தியது. எனினும், விசாரணை முழுமையடையாததால், மறுநாள் கரூரில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் கேள்விகள் தொடர்ந்தன. இது விசாரணையின் தீவிரத்தைக் காட்டுகிறது.

இதனைத் தொடர்ந்து, விசாரணை மேலும் முன்னேறும் நிலையில், மேற்படி புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், மதியழகன் ஆகியோர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ. அறிவுறுத்தியுள்ளது. மேலும்  டெல்லியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் கூடுதல் விசாரணை நடைபெறும்.இதற்கிடையே  விஜய்க்கு கை கொடுக்க காங்கிரஸ் இறங்கியுள்ளது. ஏற்கனவே திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு, தவெக ஆதரவு விவகாரங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் தவெக மற்றும் அதன் தலைவர் விஜயை பாராட்டிப் பேசுவதும், தொகுதிப் பங்கீட்டில் அதிக இடங்களைக் கேட்பதும் திமுக தரப்பிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் ஏஐசிசி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ராகுல் காந்தியின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர். இவர் ஸ்டாலினைச் சந்தித்து, காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 70 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும், தேர்தலில் வெற்றி பெற்றால் மாநில ஆட்சியில் அதிகாரப் பங்கீடு வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். முந்தைய தேர்தல்களில் காங்கிரஸ் வெறும் 25 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட நிலையில், இந்த முறை அதிக இடங்களைக் கேட்பது ஸ்டாலினுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சியில் பங்கு தர தயாராக இருக்கிறது என்பதை மறைமுகமாக உணர்த்தும் விதமாக கிரிஷ் சோடங்கர் இப்படி கேட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கரூர் சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவாக ராகுல் இறங்கியுள்ளது தான் திமுகவுக்கு பெரிய இடியை இறக்கியுள்ளது. மேலும் திமுக தற்போது வரை கூட்டணியை நம்பி தான் இருக்கிறது, 2026 ஆம் ஆண்டு தேர்தல் பெரும் சவாலாக இருக்கும் நிலையில் தற்போது காங்கிரஸ் எடுத்திருக்கும் முடிவு ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இதற்கிடையே தான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு அவசியம் என்ற கிரிஷ் சோடங்கரின் கருத்து தமிழ்நாடு காங்கிரஸின் கருத்து தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ஆக மொத்தம் திமுகவை கை கழுவுகிறது கை.