24 special

#BREAKING அடப்பாவமே திருமுருகன் காந்தி அடித்து கூறி 6 வருஷம் கடந்தது... இன்றுவரை நடக்கவில்லை !

Modi, thirumurugan gandhi
Modi, thirumurugan gandhi

ரேஷன் கடைகள் அனைத்தையும் மோடி அரசு மூடி விடும் என திருமுருகன் காந்தி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் வீடியோ வெளியிட்டார் அது பெரும் வைரல் ஆகியது, இது சாமானிய மக்கள் மனதில் அதிர்ச்சியை உண்டாக்கியது இந்த சூழலில் வைரல் ஆகும் வீடியோ குறித்து மத்திய அரசு விளக்கம் கொடுத்தது அதில்,


 “இது முற்றிலும் பொய் . அவர் கூறும்விதமான ஒப்பந்தம் எதிலும் கையெழுத்திடவில்லை.ரேஷன் கடைகளை மூடும் திட்டமும் இல்லை, வேளாண் மானியத்தைக் கைவிடும் திட்டமும் இல்லை, உணவுப்பொருட்களை இறக்குமதி செய்யும் யோசனையும் இல்லை.

இது குறித்து திருமுருகன் காந்தி கூறும்போது ஒப்பந்தம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்பதில் எந்த வித அடிப்படை உண்மையும் இல்லை. உலக வர்த்தக அமைப்புடனான ஒப்பந்த நடைமுறைகள் பற்றிய அவரது தவறான பார்வைகளையே இது அறிவுறுத்துகிறது.

உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளின் படி உணவுப் பாதுகாப்பு விஷயத்தில் அது தலையிடாது. எனவே உணவு விஷயத்தில் எதிர்காலத்தில் கூட நம் நாடு உலக வர்த்தக அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை.

மேலும் நம் நாட்டின் பொது விநியோக முறை, உணவுப்பொருள் சேகரிப்பு முறை ஆகியவற்றை எந்த ஒருநாடும் கேள்வி கேட்க இடமில்லை. இந்தியா பொது விநியோக முறையின் கீழ் அரிசி மற்றும் பிற உணவுப்பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையை நிர்ணயித்து நடத்தி வருகிறது. எனவே உலக வர்த்தக அமைப்பு மாநாட்டில் எடுக்கப்பட்ட எந்த ஒரு முடிவும் நம் பொதுவிநியோக முறையையோ, உணவுச் சேமிப்பு திட்டத்தையோ பாதிக்காது.

எனவே விவசாயிகளுக்கு மானிய நீக்கம், மின்சார மானியம், உர மானியம் அளிப்பது நிறுத்தப்படும் என்ற கூற்றில் எள்ளளவும் உண்மையில்லை. இப்படிப்பட்ட ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவும் இல்லை.

அரசின் பிரதான முன்னுரிமை விவசாயத்துறைதான், விவசாயிகளின் நலன்களுக்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மானியங்கள் அதற்கு தகுதியானவர்களிடத்தில் உரிய முறையில் சேர்ப்பிக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது” என்று தனது அறிக்கையில் வர்த்தக்கத்துறை அமைச்சகம் கூறியது, ஆனால் அதனை மறுத்த திருமுருகன் காந்தி குறித்து வைத்து கொள்ளுங்கள் ரேஷன் கடைகள் மூடப்படும் என அடித்து கூறி இருந்தார்.

இந்த சூழலில் திருமுருகன் காந்தி சொன்னது போல் எதுவும் நடக்கவில்லை மாறாக ஒரே ரேஷன் கார்டு மூலம் நாடு முழுவதும் எங்கு சென்றாலும் பொருள்களை வாங்கி கொள்ளலாம் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. மொத்தத்தில் திருமுருகன் காந்தி சொல்லிய ரேஷன் கடை பொய் மீண்டும் அம்பலமாகி இருக்கிறது. இதற்கும் திருமுருகன் காந்தி என்ன கதை விட போகிறார் என்பது பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.