Technology

உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் ஜாக்கிரதை!

mobile phone
mobile phone

நாடு தற்போது முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது அதற்கு ஏற்ற வகையில் நாமும் நம் குடும்பத்தை முன்னேற்றிக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்திலும் அவசியத்திலும் இருந்து வருகிறோம். இந்த கால கட்டத்திலும் ஆணும் பெண்ணும் வேலைக்கு செல்வது அவசியமாக்கப்படுகிறது. அதோடு ஒரு குடும்பத்தை குடும்பத் தலைவன் மற்றும் தலைவி இருவரும் வேலைக்கு சென்றால் மட்டுமே இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் அவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான சுற்றுச்சூழலை கொடுக்க முடியும் என்று பெற்றோர்களும் நம்புகின்றனர். அதனால் காலையில் வீட்டு வேலை முடித்துவிட்டு ஆண் பெண் இருவரும் வேலைக்கு சென்று வருகின்றனர் வீட்டில் இருக்கும் குழந்தைகள் பள்ளி முடிந்து வந்த பிறகு வீட்டிலே தனிமையாக இருக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆனால் ஒரு குடும்பத்தில் குழந்தையின் தாய் தந்தையை தவிர பாட்டி தாத்தா போன்ற பலர் இருந்திருந்தால் அந்த குழந்தை பள்ளி முடிந்த பிறகு தனிமையை சந்திக்க நேரிடாது! இருப்பினும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவோ அல்லது தனிக் குடும்பங்களில் இருக்கும் குடும்பங்களில் உள்ள குழந்தைகள் தனியாகவே வளர்கின்றனர். 


இது குறித்து சில தரப்பிடம் கேட்கும் பொழுது அவர்கள் எங்கே தனியாக வளர்கிறார்கள் டிவி உள்ளது லேப்டாப் உள்ளது மொபைல் போன் உள்ளது அவர்களுக்கு வேண்டிய சுட்டி படங்களை பார்த்துக் கொண்டு விளையாட்டை விளையாடி கொண்டு இருக்கலாம் நாங்கள் சிறிது நேரத்தில் வேலை முடித்து வந்து விடுவோம் என்று கூறுகின்றனர். மேலும் குழந்தைகளுக்கு பள்ளி முடிந்த பிறகு சிறப்பு வகுப்புகளையும் ஏற்பாடு செய்து அதுவும் ஆன்லைன் மூலமாக ஏற்பாடு செய்கின்றனர். இதனால் இக்கால குழந்தைகளுக்கு மொபைல் போன் மற்றும் லேப்டாப் போன்ற சாதனங்களை பயன்படுத்துவது மிகவும் கடினமான வேலை அல்ல! கொரோனா காலகட்டத்தில் கூட பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் பொழுதும் ஆன்லைன் மூலமாகவே பள்ளி கல்லூரிகள் இயக்கப்பட்டது அதன் மூலமாகவே மாணவர்கள் மாணவிகள் அனைவரும் பயின்று வந்தனர் அந்த சூழ்நிலையில் குழந்தைகளுக்கு என்று தனி மொபைல் போன் வாங்கப்பட்டது.

விழும் குறிப்பாக இக்காலத்தில் பிறந்த குழந்தைகள் இரண்டு மூன்று மாதங்களிலேயே மொபைல் போனிற்கு அடிமையாக்கப்படுகின்றனர். மொபைல் போனை பயன்படுத்த ஆரம்பித்த சில நாட்களிலேயே குழந்தைகள் அந்த மொபைல் போனில் முழுவதுமாக பயன்படுத்த கற்றுக் கொள்கின்றனர். ஆனால் அதுவே தற்பொழுது பள்ளி குழந்தைகளை ஆபத்தில் தள்ளிவிடுகிறது. அதாவது, ஒரு பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய பெண் பேச்சாளர் மற்றும் சமூக ஆர்வலர் கூறிய விஷயம்தான் தற்போது வைரலாகிறது, அவர் கூறும்போது,  'மொபைல் போனில் தற்போது ஆண்களும் பெண்களும் பேசிக் கொள்வது நார்மலான விஷயமாக மாறிவிட்டது அதில் தவறு என்றும் இல்லை ஆனால் அதன் மேலே அமர்ந்து கொண்டு இது உனக்கு நல்லதல்ல நல்லதல்ல ஏதோ ஒன்று தவறாக உள்ளது என கூறிக் கொண்டே அந்த விஷயத்தில் இருந்து நம்மால் வெளிவர முடியாமல் அதற்குள்ளே மூழ்கி விடுகின்றனர்! அதுபோன்றே தற்போது உள்ள பெரும்பாலான பள்ளி குழந்தைகளின் மூளையில் தவறான வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்க்கும் எண்ணம் மேலோங்கி உள்ளது.

வீட்டு பாடங்கள் செய்து கொண்டிருக்கும் பொழுது மொபைல் போனில் வரும் தவறான மெசேஜ்கள் அவர்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்கிறது, அதிலும் எந்த ஒரு மனிதனுக்கும் காமம் குறித்த புரிதல் இல்லையோ அவனுக்கு அதை பார்ப்பதற்கு அந்த தவறான மெசேஜ்கள் வழி நடத்துகிறது! நான் பல பள்ளிகளுக்கு சென்று உரையாடுகிறேன் உரையாடி முடித்துவிட்டு கீழே இறங்கும் பொழுது பல பள்ளி மாணவர்களிடம் தனியாக பேச வேண்டும் தனியாக பேச வேண்டும் என்று அழைத்துச் செல்கிறார்கள் ஆனால் அதில் பெரும்பாலானவர்கள் இந்த தவறான வீடியோவால் அடிமைப்படுத்தப்பட்டு அதிலிருந்து வெளிவர முடியவில்லை எப்படி  நான் வெளிவருவது அதற்கு அறிவுரை கூறுங்கள்! வழி கூறுங்கள் என்று என்னிடம் கூறுகின்றனர் என்று பகீர் உண்மையை போட்டு உடைத்துள்ளார்.மொபைல் போன் எந்த அளவிற்கு பல நன்மைகளை மற்றும் பயன்களை கொண்டதோ அதே சமயத்தில் குழந்தைகளுக்கு அதிலும் 8, 9 படிக்கும் குழந்தைகளுக்கு தீமையான பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் பத்திரம்....!