24 special

மோடி அரசின் அதிரடி பானு கோம்ஸ் பாராட்டு!

modi and banu gomes
modi and banu gomes

அரசியல் பார்வையாளர் பானு கோம்ஸ் மத்திய அரசின் கலால் வரி குறைப்பை வெகுவாக பாராட்டி இருக்கிறார் மேலும் மாநில அரசுகளும் முன் வரவேண்டும் எனவும் அவர்க்குறிப்பிட்டுள்ளார் இது குறித்து பானு கோம்ஸ் தெரிவித்த தகவல் பின்வருமாறு :-


உலகெங்கும் பொருளாதார வீழ்ச்சி..recession  என்று மீண்டுமொரு bubble burst குறித்து உலக நாடுகள் அனைத்தும் எதிர்கொள்ளும் இந்த நேரத்தில் பெட்ரோல், டீசல் -க்கான கலால் வரியை மத்திய அரசு குறைத்திருக்கிறது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி இழப்பு எனினும் மிகச் சரியான நேரத்தில் சாமானிய பொது மக்களுக்கான மிகச் சரியான பொருளாதார முடிவை எடுத்திருக்கிறது மத்திய மோடி அரசு.

பாராட்டுகள்.இதற்கு முந்தைய பெட்ரோல் டீசல் விலை குறைப்பின் போது தங்கள் பங்கிற்கு விலையை குறைக்காத மாநில அரசுகள் இந்த முறை குறைத்து  சாமானிய மக்களுக்கு உதவிட  வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் கூறி இருப்பது கவனிக்க தக்கது.

இதற்கு முந்தைய கொரோனா பெருந்தொற்றின் அடுத்தடுத்த lockdown  காலத்திலும் மிகக் கவனமுடன் மிகச் சரியான முறையில் அமல் படுத்திய இலவச உணவு தானிய விநியோகத்தால் பயனடைந்த  இந்தியாவின் 80% மக்கள் தொகைக்கு  நீடித்த பொது முடக்கத்தால் நிகழ்ந்த பாதிப்புகளை கடந்து வர அடிப்படையான பேருதவியாக இருந்தது என பானு கோம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.