24 special

ஒரே நாளில் அடுத்தது விழுந்த அடி! வெளுத்து வாங்கிய உச்சநீதிமன்றம்... ஸ்டாலினின் தூக்கத்தை கெடுத்த உத்தரவுகள்! டெல்லி ஆட்டம் ஆரம்பம்

MKSTALIN,COURT
MKSTALIN,COURT

ஒரே நாளில், நான்கு வெவ்வேறு முக்கிய வழக்குகளில், தி.மு.க பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இது அறிவாலயத்துக்கு பெரும் இடியை இறக்கியுள்ளது. மேலும் தமிழக அரசின் முகத்திரையை கிழித்து எடுத்துள்ளது நீதிமன்றங்கள்.  ஆளும் அரசில்  இருக்கிறோம் என நினைத்து எதுவேண்டுமானாலும் செய்யலாம் என திமுக ஆட்சிக்கு நீதிமன்றம் சவுக்கடி கொடுத்துள்ளது என அரசியல் கட்சி தலைவர்கள் கூறியுள்ளார்கள்.இதை விட மோசமான ஒரு நாள் தி.மு.க-விற்கு நிச்சயம் இருக்க முடியாது.


உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவை நேற்று   கிட்னி திருட்டு விவகாரம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரம், கரூர் கூட்டநெரிசல் விவகாரம் மற்றும் திருப்பரங்குன்றம் வழக்கு ஆகியவற்றில் திமுக   அரசுக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள உத்தரவுகள் தான் திமுகவை நிலைகுலைய செய்துள்ளது.  இது குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் கூறியுள்ளதாவது; 

கிட்னி திருட்டு விவகாரம்

அதில் முதலாவதாக, "திமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான மருத்துவமனைகளுடன் தொடர்புடைய கிட்னி திருட்டு குறித்து விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்றம் அமைக்கக் கூறிய சிறப்புப் புலனாய்வுக் குழுவில், தாங்கள் பரிந்துரைக்கும் அதிகாரிகளையே நியமிக்க வேண்டும் என்ற திமுக அரசின் நிபந்தனையை ஏற்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. திமுக எம்எல்ஏவுக்கு எதிரான விசாரணைக் குழுவில், திமுக அரசு பரிந்துரைக்கும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற திமுகவின் நிபந்தனை எவ்வளவு வெட்கக்கேடானது" என குறிப்பிட்டுள்ளார். 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

இரண்டாவதாக, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குறித்து, "பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகிய திமுகவுக்கு, அந்த வழக்கிலும் பின்னடைவே ஏற்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தடை செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு ஏன் பயப்படுகிறது?" என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

கரூர் கூட்டநெரிசல் சம்பவம்

தொடர்ந்து, கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை குறிப்பிட்ட அண்ணாமலை, "கரூர் தவெக பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கில், தமிழக அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு மதுரை பெஞ்சில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அதை எவ்வாறு விசாரித்தது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது" என சுட்டுக்காட்டினார்.

கடைசியாக, "திருப்பரங்குன்றம் வழக்கில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளில், இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்புக்குப் பிறகு, நீதியரசர் ஸ்ரீமதி அவர்களின் கருத்துக்களுடன் உடன்பட்டு, சிக்கந்தர் தர்காவில், விலங்குகளை பலியிடுவதை தடை செய்து 3வது நீதிபதியான நீதியரசர் விஜய் குமார் உத்தரவிட்டார். இந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே தொடர்ந்து அழைக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரே நாளில், டெல்லி முதல் மதுரை வரை, திமுகவின் மனசாட்சியை விட வேகமாக, நீதியும் தர்மமும் திமுகவைத் துரத்திக் கொண்டிருக்கின்றன என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

மேலும் இனி டெல்லியின் ஆட்டம் மிகத்தீவிரமாக இருக்கும் என  டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது அமைச்சர்களின் ஊழல்  வழக்குகளை தீவிரப்படுத்தவும் டாஸ்மாக் வழக்கு டான் பிக்சர் வழக்கு ஆகியவை அடுத்தடுத்து வரவுள்ளது.