Cinema

சினிமா துறையை பற்றி டெல்லி கணேஷ் கூறிய அதிர்ச்சு தகவல்....! சினிமா வட்டாரமே க்ளோஸ்...!

Pa ranjith , delhi ganesh
Pa ranjith , delhi ganesh

நாங்குநேரி  சம்பவத்தை தொடர்ந்து தற்போது மிக பெரிய அளவில் எதிர்ப்பு அலைகள் சினிமா துறையில் உள்ள சில இயக்குனர்களை நோக்கி எழுந்து வரும் நிலையில் சினிமா துறையை சேர்ந்த மூத்த நடிகர் டெல்லி கணேஷ் தெரிவித்து இருக்கும் கருத்து சினிமா வட்டாரத்தை மட்டுமின்றி அரசியல் வட்டாரத்தையும் உலுக்கி இருக்கிறது.


இந்நிலையில் டெல்லி கணேஷ் வான் மூன்று என்ற படம் குறித்து பேச செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், " பள்ளி, கல்லூரிகளில்கூட சாதி சண்டை வருகிறது. பீஸ் பீஸாக வெட்டிக்கொள்கிறார்கள். மாணவர்கள் எல்லாம் அரிவாளை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு போகிறார்கள்.

இது எப்படி உள்ளே வந்தது. சினிமா சமூகத்துக்கு ஏதாவது ஒரு நல்ல காரியத்தை செய்ய வேண்டும். அன்பு, பாசம், நேசம், ஒற்றுமை உள்ளிட்டவைகளை படங்களில் பேச வேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு வேறு எதையோ காண்பிக்கிறார்கள்  படங்களை பார்த்தாலே பயமாக இருக்கிறது. அதுபோன்ற படங்கள் நிச்சயம் ஓடும். ஏனென்றால் அதற்கு ஒரு க்ரூப் படம் எடுக்கும். அதை பார்த்து இன்னொரு க்ரூப் கோபப்பட்டு அது ஒரு படம் எடுக்கும்.

அதில் இவர்களை தாக்கி எடுப்பார்கள். அப்படியெல்லாம் தாக்கவே கூடாது. அனைவருமே ஒன்றுதான். எல்லோருக்குமே சர்வைவல் முக்கியம்தான். என்னிடம் ஒருவர், நீங்கள் ஏன் எல்லோரிடமும் உட்கார்ந்து சாப்பிடாமல் தனியாக உட்கார்ந்து சாப்பிடுகிறீர்கள் என கேட்டார்.அதற்கு நான் சொன்னேன். சார் நான் சைவம். அதனால்தான் தனியாக உட்கார்ந்து சாப்பிடுகிறேன். அதில் உங்களுக்கு என்ன வந்தது என்று கேட்டேன். மேலும், நான் பதிலுக்கு என்னை கேள்வி எழுப்பிய நபரிடம் ஏன் சார் உதவி இயக்குநர்கள், கேமராமேன் என எல்லோரும் செட்டில்தானே இருக்கிறார்கள். நீங்கள் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டியதுதானே. எதற்காக தனியாக சென்று சேர் போட்டு சாப்பிடுகிறீர்கள்.ஏனா தான் ஒரு இயக்குநர். தனித்துவமானவன்னு நீங்க நினைக்கிறீங்க. உங்களுக்கு இப்படி இருக்கும்போது இன்னொருத்தனுக்கு அது இருக்காதா.

நீங்கள் முதலில் எல்லோரிடமும் அமர்ந்து சாப்பிடுங்கள் என சொல்லிவிட்டேன். எல்லோரும் ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு அதை ஃபாலோ செய்யமாட்டார்கள். நல்ல கதைகள் ஏராளமாக இருக்கின்றன. அதையெல்லாம் படமா எடுக்கணும். சினிமா இன்ஸ்டஸ்ட்ரியவே மாற்ற வேண்டும்.""என்றார்.

பல ஆண்டுகள் திரைப்படத்துறையில் தடம் பதித்த டெல்லி கணேஷ் தமிழகத்தில் சினிமா துறை மாறவேண்டும் பிரச்சனைக்கு காரணமாக சினிமா துறை விளங்குகிறது என தெரிவித்து இருப்பது தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வரும் ப. ரஞ்சித் மாரி செல்வராஜ் போன்றோரை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது.