24 special

அதெல்லாம் அடிப்படை உரிமையில்லை..! கொட்டு வைத்த நீதிமன்றம்...! தமிழகத்தில் செயல்படுமா?

Yogi adityanath
Yogi adityanath

அலஹாபாத் : உத்திரபிரதேச மாநிலம் முழுவதுமுள்ள வழிபாட்டுத்தலங்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் காவல்துறை உதவியுடன் அகற்றி வருகிறது. இதை எதிர்த்து அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 60 ஆயிரத்திற்கும் மேலான அங்கீகரிக்கப்படாத ஒலிபெருக்கிகள் இதுவரை அகற்றப்பட்டிருப்பதாக மாநில டிஜிபி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் தோரன்பூர் கிராமத்தில் அமைந்துள்ள நூரி மசூதியில் மீண்டும் ஒலிபெருக்கி அமைக்க போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். 

2021 டிசம்பரில் பதாவுன் மாவட்ட சப் டிவிசனல் மாஜிஸ்திரேட் நூரி மசூதியில் ஒலிபெருக்கிகள் அமைக்க கூடாது என உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து இர்பான் என்பவர் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் விழாக்காலத்தை முன்னிட்டு மீண்டும் ஒலிபெருக்கியை அமைக்க அனுமதி கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் விவேக் குமார் பிர்லா மற்றும் நீதிபதி விகாஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பென்ச் முன்னர் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் "மசூதிகளில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவது அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை என சட்டம் சொல்கிறது. மசூதிகளில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவது ஒன்றும் அடிப்படை உரிமையில்லை" என கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சமீபத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மதவழிபாட்டு தலங்களில் அமைந்திருக்கும் ஒலிபெருக்கிகளில் இருந்துவரும் ஒலி வளாகத்திற்கு வெளியே கேட்கக்கூடாது. வழிபாட்டுத்தலங்களில் அனுமதியுடன் ஒலிபெருக்கியை பயன்படுத்தலாம் என கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் அங்கீகரிக்கப்படாத ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இந்து ஆலயங்களை இடிப்பதில் காட்டும் அக்கறையை ஒலிபெருக்கிகளை அகற்றும் பணியில் கொஞ்சமாவது காட்டுமா என தமிழக அரசை நோக்கி பொது மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.