24 special

அஜித்குமார் வழக்கு.... அம்பலமான தமிழக நடிகர்கள் இனி எவன் படமும் ஓடாது இனி சூர்யா நிலைமை தான் அனைவரருக்கும்

MKSTALIN,AJITHKUMAR
MKSTALIN,AJITHKUMAR

தமிழகத்தை தற்போது புரட்டி போட்டுள்ள சம்பவம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அரங்கேறியிருக்கும் கோயில் காவலாளி அஜித்குமாரின் காவல் மரணம் தான் இது  தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தலைமுதல், கால் விரல் வரை அஜித்குமாரின் உடலில் இருந்த 40க்கும் அதிகமான காயங்கள், அவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன


மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துவிட்டதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேதனை தெரிவிக்கும் அளவிற்கு அஜித்குமார் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கேட்டும், காரணமான காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அதிமுக – பாஜக போன்ற எதிர்க்கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

கடந்த காலங்களில்  வழக்கமாகவே தமிழகத்தில் ஒரு குற்றச்சம்பவம் நிகழ்கிறது என்றால் வரிசையாக பொங்கி  எழும் திரை பிரபலங்கள் திமுக ஆட்சியில் நடக்கும் சம்பவங்களுக்கு  மவுனமாகக் கடந்து செல்வதாக விமர்சனம் எழத் தொடங்கியுள்ளது.   கடந்த 2020 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்காலத்தின் போது நடைபெற்ற சாத்தான்குளம் தந்தை- மகன் காவல் மரணத்தின் போது திரைபிலங்கள் ஒன்று திரண்டு வெகுண்டெழுந்து தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

மக்கள் நீதிமய்யம் கமல்ஹாசன் தொடங்கி நடிகர்கள் சூர்யா, விஷால், விஜய்சேதுபதி, ரவிமோகன், ஜி.வி,பிரகாஷ், சத்தியராஜ், சித்தார்த், ஜோதிகா என ஆட்சிக்கு எதிராகப் பொங்கி எழுந்த பலரும் தற்போது மவுனம் காப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அனைத்திலும் நடிகர்களின் கருத்தை நாம் எதிர்பார்ப்பதில்லை என்றாலும், ஒரு நேரத்தில் மட்டும் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பினர். ஆனால், இப்போது ஏன் ஒன்றுமே கூறவில்லை என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுந்துள்ளன.

அதிமுக ஆட்சி என்றால் சிறு பிரச்சனைகளாக இருந்தாலும் வெகுண்டெழுந்து கருத்துச் சொல்வதும், திமுக ஆட்சியாக இருந்தால் அண்ணா பல்கலை பாலியல் சம்பவம், தாம்பரம் அரசு விடுதியில் பாலியல் சம்பவம், ஒரு  பட்டியிலன கட்சியின் தலைவர் கொலை, கள்ளக்குறிச்சி  கள்ளச்சாராய குடித்து 6க்கும் மேற்பட்டோர்  மரணம் 24  லாக்கப் டெத்கள்  என அனைத்துக்கும் அமைதியாகக் கடந்து சென்று வருகிறார்கள். இதன் மூலம்  தமிழில் சில புரட்சி நடிகர்களின் உண்மை முகம் வெளிவந்துவிட்டதாக நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கிவிட்டனர்.

கடந்த  ஆட்சியின்போது  அதிமுக அரசை கண்டிப்பதற்கு வரிசையாக சாராய் சாரையாக நடிகர்கள் கண்டனத்தை தெரிவித்து வந்தார்கள் இந்த சினிமா நடிர்களும் இயக்குனர்களும்.திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டும் இவர்களுக்கு கண்கள் தெரிவதில்லை, காதுகள் கேட்பதில்லை, மூளையும் சிந்திப்பதில்லை. இது ஒரு பட்டவர்த்தமான ஓரவஞ்சனை இல்லையா?.

தமிழக நடிகர் நடிகைகளுக்கு பிடிக்காத கட்சி ஆட்சியில் இருந்தால் மட்டும், தாம் துாம் என்று ‛‛மைக்''குகள் தெறிக்க ‛‛சவுண்டு'' விடுவார்கள். பிடித்த கட்சி ஆட்சியில் இருந்தால் என்ன அநியாயம் நடந்தாலும் ஆழ்கடல் அமைதி காப்பார்கள். நடிகர்கள் சத்யராஜ், சூர்யா, கார்த்தி, விஜய்சேதுபதி, சித்தார்த், ஜோதிகா, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் பா.ரஞ்சித், நாட்டுப்புற பாடகர் கோவன், கானா பாடகி இசைவாணி போன்றவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?.

ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது.சினிமாநடிகர்களுக்கு தேவை பணம் மட்டுமே.இதற்காக மக்களிடையே  பிடிக்காத ஆட்சி மேல் கோவத்தை துாண்டிவிட்டு அதில் குளிர் காய்பவர்கள்..இவர்களையும் தங்கள் ‛‛ஹீரோ''க்களாக நினைத்துக்கொண்டு இருக்கும் தமிழகமக்கள் தான் பாவம். இந்த ஹீரோக்களின் முகமூடி மீண்டும் கிழிந்திருக்கிறது என்பதை இனிமேலாவது இந்த மக்கள் உணர்ந்துகொள்வார்களா? இனி எவன் படமும் ஓடாது என நெட்டிசன்கள் கூறி வருவதனால் கோலிவுட் தரப்பு அதிர்ச்சியில் உள்ளது. ஏற்கனவே சூர்யா படம் எதுவும் தமிழகத்தில் ஓடுவதில்லை அதே போல் தான் இனி அனைவரின் படமும் என கூறியவருகிறார்கள். தற்போது இந்த வரிசியில் சிக்கியுள்ளது விஜய் சேதுபதி.