24 special

உலக அரசியலில் திடீர் திருப்பம்! இந்தியாவின் மாஸ்டர் பிளான் ஆட்டம் காணும் அமெரிக்க டாலர்! பிரதமர் மோடியின் மாஸான புரட்சி

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கத்திற்கும் அதன் பொருளாதார அடாவடித்தனத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், இந்தியா தற்போது எடுத்துள்ள புவிசார் அரசியல் நகர்வு உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டிரம்பின் கடுமையான எச்சரிக்கைகளையும் தடைகளையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, ஈரான் நாட்டிடம் இருந்து சுமார் 2 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா தற்போது இறக்குமதி செய்துள்ளது. சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்தப் பிரம்மாண்ட வர்த்தகத்தில்,அமெரிக்க டாலரை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாகச் சீனக் கரன்சியான ‘யுவான்’ (Yuan)  என்னும் ஆயுதத்தை ஏந்தி டாலரின் ஆதிக்கத்தை இந்தியா வேரோடு அசைக்கத் தொடங்கியுள்ளது.


இந்தியா தனது ஐசிஐசிஐ வங்கியின் ஷாங்காய் கிளை மூலமாக, சீன யுவான் கரன்சியில் இந்தப் பணத்தைச் செலுத்தியிருப்பது ஒரு நுட்பமான பொருளாதார வியூகமாகும். பொதுவாக அமெரிக்காவின் கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்கும் டாலர் கட்டமைப்பு மற்றும் அதன் மூலம் நடைபெறும் வர்த்தகங்களை அமெரிக்காவால் எளிதில் முடக்க முடியும். ஆனால், இந்த முறை இந்தியா அந்தப் பாதையைத் தவிர்த்து, சீனா மற்றும் இந்திய வங்கிகளை நேரடியாக இணைத்து ஒரு புதிய மாற்றுப் பாதையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம், மேற்குலக நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ள ‘சுவிஃப்ட்’ (SWIFT) எனப்படும் சர்வதேச பணப்பரிமாற்ற அமைப்பு இனி நமக்குத் தேவையில்லை என்பதையும், இந்தியாவால் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும் என்பதையும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உலகிற்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.

இது அமெரிக்காவிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, சர்வதேசச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு இருந்த தனிப்பெரும் மதிப்பைக் குறைக்க வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வழக்கமாக மேற்கத்திய நாடுகளால் தடை விதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் பெறப்படும் போது, இந்திய அரசுக்குச் சொந்தமான சுத்திகரிப்பு ஆலைகள் அதற்கான தொகையை விநியோகம் செய்யும் போதோ அல்லது சரக்கை ஆர்டர் செய்யும் போதோ உடனடியாகச் செலுத்தி விடுகின்றன. அந்த வகையில் ஈரானிடமிருந்து ஆர்டர் செய்த எண்ணெய்க்கு இந்தியா காலதாமதமின்றி உடனடியாகப் பணம் செலுத்தி தனது வர்த்தக நேர்மையை உறுதிப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஹோர்மோஸ் நீரிணையை கடக்கும் கப்பல்களிடமிருந்து ஈரான் நாடானது, அமெரிக்க டாலரை நிராகரித்துவிட்டு சீன யுவானிலேயே கட்டணம் வசூலித்து வருகிறது. இந்தச் சூழலில், உலகின் மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோ நாடுகளில் ஒன்றான இந்தியாவும் கச்சா எண்ணெய் வாங்க டாலருக்குப் பதிலாகச் சீனக் கரன்சியைப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பது அமெரிக்காவின் பொருளாதாரப் பிடிக்கு விழுந்த பேரிடியாகவே பார்க்கப்படுகிறது