
தமிழகத்தில் தூயசக்தி என சொல்லு புதிய ஆட்சி அமைந்து சில வாரங்களே ஆகியிருக்கும் நிலையில், மக்கள் எதிர்பார்த்த தூய்மையான அரசியல் மாற்றத்திற்கு பதிலாக பழைய லாபி வேலைகள் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியிருப்பது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. முந்தைய DMK ஆட்சியில் அமலாக்கத்துறை ரெய்டுகளில் சிக்கி, தலைமறைவு வாழ்க்கைக்கு தள்ளப்பட்ட ‘ சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், இப்போது புதிய ஆட்சியில் அமைதியாக லாபி செய்யும் பணியைத் தொடங்கியிருக்கிறார் என தலைமை செயலக வட்டாரங்கள் மத்தியில் பேசப்படுகிறது. . TASMAC முறைகேடு தொடர்பான ஆயிரம் கோடி ஊழல் வழக்கில் ED சோதனைகளை எதிர்கொண்ட இவர், உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் அன்பில் மகேசுக்கு உறவினர் பழைய ஆட்சியில் செல்வாக்கு செலுத்தியவர். இப்போது அவர், முதல்வர் விஜய்க்கு மிக நெருக்கமான சினிமா பிரமுகரை சந்தித்து, “உங்களுக்கு எந்தத் தொந்தரவும் வராமல் பார்த்துக் கொள்கிறேன்” என்ற உத்தரவாதத்தைப் பெற்றிருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கும் தகவல்.
இந்தச் சந்திப்பு வெறும் தற்செயலானது அல்ல. விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் தயாரிப்பாளரான வெங்கட் கே. நாராயணா (KVN Productions) போன்றோர், புதிய ஆட்சியில் அவரது “நிழல்” போன்ற நிலையில் செயல்படுவதாகப் பேசப்படுகிறது. ஆளுநரை சந்திக்கும் போது விஜய்யுடன் சென்றவர், பல அரசியல்-சினிமா இணைப்புகளில் முக்கியப் புள்ளியாக மாறியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு பின்னணியில், ED வழக்கில் சிக்கிய ஒரு பிரமுகர் நிழல் பிரமுகரை அணுகி பாதுகாப்பு உத்தரவாதம் பெறுவது, விஜய் தரப்பு வாக்குறுதியளித்த “தூய்மையான அரசியல்” மற்றும் “ஊழல் ஒழிப்பு”க்கு நேரடி இடியாக அமைந்துள்ளது. மக்கள் விஜய்யை நம்பி, DMK-வின் ஊழல் ஆட்சியை மாற்றி, புதிய நம்பிக்கையுடன் TVK-வை ஆதரித்தனர். ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற சில நாட்களிலேயே பழைய லீலைகள் தொடர்வது, இந்த அரசு எந்த அளவுக்கு உண்மையான மாற்றத்தை கொண்டு வரும் என்பதை சந்தேகத்திற்கு உள்ளாக்குகிறது.
DMK ஆட்சியில் இருந்த அதே லாபியிஸ்ட்கள், அதே சினிமா இணைப்புகள், இப்போது TVK ஆட்சியில் தொடர்வது என்பது, ஆட்சி மாறினாலும் அமைப்பு ரீதியான மாற்றம் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. மக்கள் வரி பணத்தில் நடைபெறும் அரசு இயந்திரத்தை, சில பிரமுகர்களின் தனிப்பட்ட லாபத்திற்கு பயன்படுத்த அனுமதிப்பது, விஜய் தலைமையிலான அரசுக்கு பெரும் களங்கம்.
தமிழ்நாட்டு மக்கள் பல தலைமுறைகளாக ஊழல் ஆட்சிகளைப் பார்த்து, இப்போது ஒரு புதிய நம்பிக்கையுடன் விஜய்யைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அந்த நம்பிக்கையை இப்படி சினிமா லாபி வேலைகளால் சிதைக்க அனுமதிக்கக் கூடாது. விஜய் அரசு இன்னும் தனது பாதையைத் தெளிவாக்க வேண்டிய நேரம் இது. இல்லையென்றால், பழைய ஆட்சியை விட இது வேறு எதுவும் இல்லை என்ற விமர்சனம் வலுக்கும். மக்களின் கண்காணிப்பும், ஊடகங்களின் வெளிப்படைத்தன்மையும் இந்த அரசை சரியான பாதையில் வைக்க உதவ வேண்டும்.
