Cinema

ஒரு சீட் "வைரலாகும்" ட்ரைலர்.. விசிகவினரை கிண்டல் செய்யும் நெட்டிசன்ஸ்...!

Idoit movie
Idoit movie

சினிமாவும் அரசியலும் தமிழகத்தில் பிரிக்க முடியாத இடத்தில் இருப்பவை தமிழகத்தின் பல முதல்வர்கள் MGR, கருணாநிதி, ஜெயலலிதா என பலரும் திரை துறையில் இருந்தே அரசியலுக்கு வந்து பின்பு முதல்வர் சீட்டில் அமர்ந்தனர், அப்படி தமிழ் சினிமாவிற்கும் தமிழக அரசியலுக்கும் ஒரு கெமிஸ்ட்ரி உள்ளது.


இது தவிர்த்து முன்னணி நடிகர்கள் தொடங்கி புதுமுக இயக்குனர்கள் வரை தங்கள் திரைப்படங்களில் அரசியல் வசனம், ஏதேனும் ஒரு கட்சியை விமர்சனம் செய்வது அல்லது பாராட்டுவது என திரைக்கதையை அமைத்து இருப்பர் சில மாதங்கள் முன்னர் அமேசானில் வெளியான சார்பட்டா பரம்பரை எனும் படத்தில் முழுக்க முழுக்க திமுகவிற்கு ஆதரவாக திரைக்கதையை எடுத்து இருப்பார் பா ரஞ்சித்.

இப்படி ஒன்று என்றால் ஏப்ரல் 1-ஆம் தேதி திரையில் வெளிவரவிருக்கும் படம் ‘இடியட்’. இதனையொட்டி இப்படத்தினுடைய ஸ்னீக் பீக் அதாவது முன்னோட்ட காட்சி வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில், ஒரு சீட்  குடுத்தவுனே திமிரு வந்துடுச்சு பாத்தியா…என்று இடம்பெற்றுள்ள வசனம்  ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. இந்த வசனம் யாரையோ குறிப்பிட்டு கலாய்ப்பது போல உள்ளது என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறிவருகின்றனர்.

குறிப்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக கட்சிக்கு ஒரு சீட் மட்டுமே ஒதுக்கப்பட்டது அதன் மற்றொரு வேட்பாளர் ரவிக்குமார் திமுகவில் இணைந்து திமுக சின்னத்தில் போட்டியிட்டார், திருமாவளவன் மட்டுமே விசிக சார்பில் போட்டியிட்டார்.

இதை குறிப்பிட்டு சிலர் விசிகவை இந்த படம் கலாய்கிறதா என கேள்வி எழுப்புகின்றனர்,  விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் அடிக்கடி திருமாவளவன் முதல்வர் ஆவார் என கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

இடியட் இப்படத்தை லொள்ளு சபா, தில்லுக்கு துட்டு பாகம் 1 மற்றும் 2 படங்களை இயக்கிய ராம் பாலா இயக்குகிறார். நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனந்த ராஜ், ஊர்வசி, மயில்சாமி, சிங்கமுத்து, ரவி, அக்ஷரா கௌடா போன்ற ஒரு பெரிய பட்டாளமே நடித்துள்ளனர். காமெடி கலந்த திகில் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது.