24 special

ஆ.ராசா எதிர்பாராத சம்பவம் அரங்கேறியது! சற்றும் எதிர்பாராத திருப்பம்!

Arasa, stalin
Arasa, stalin

ஆ. ராசா பேசிய பேச்சு பொதுமக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது போன்று இப்போது நீண்ட காலமாக திமுகவில் இருக்கும் உறுப்பினர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது இதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் எழுதிய கடிதம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.


திமுகவை சேர்ந்த எம்பி ராசா, ஒரு சமூகத்தை தவறாக பேசி, மற்றவர்களை திருப்திப்படுவதற்காக பேசி கொண்டிருப்பது மாற்றுக் கட்சியினரையும் கோபம் கொள்ளச் செய்துள்ளது. தமிழகம் தங்களுக்கு சொந்தம் என்று நினைக்கும் இத்தகைய தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று பாஜக தலைவர் அண்ணாமலை வெகுண்டெழுந்துள்ளார்.

ஆ.ராசாவின் பேச்சு விவாதங்களை கிளப்பி விட்டு வருகிறது.இந்துக்களின் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் வன்மத்தை கக்குவது சரியா? திராவிட மாடல் என்றால், இந்துக்களுக்கும் பொருந்தாதா? இவர் தவறாக பேசும் இந்துக்களின் வாக்குகள் திமுகவிற்கு வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் மக்கள் மன்றத்தில் சொல்ல தயாராக இருக்கிறாரா? ஏற்கனவே, பலமுறை சர்ச்சையாக ஆ.ராசா பேசிய நிலையில், ஒருமுறைகூட முதல்வர் ஸ்டாலின், அவரை கண்டித்ததாக தெரியவில்லை..

மாநில முதல்வர் என்றும் பாராமல், அவரை மேடையில் வைத்துக் கொண்டே பேசிய ராசா மீது என்ன நடவடிக்கை? இப்போது பேசியிள்ள அவதூறு குறித்து, ஸ்டாலின் விளக்கம் அளிப்பாரா? என்ற பல கேள்விகள் கிளம்பி வருகின்றன.

இதனையடுத்து திமுகவை சேர்ந்தவர்களே ஆ.ராசாவின் பேச்சுக்கு கடும் பதிலடிகளை கொடுத்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் ராஜமூர்த்தி என்பவர் ஆ.ராசாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஆ.ராசாவுக்கு எழுதியுள்ள பகிரங்க மடலில்,

‘’அண்ணன் ஆண்டி முத்து ராஜா அவர்களுக்கு வணக்கம்!.. தீப திருநாள் வாழ்த்துகள்!. உங்களுக்கு சாதாரன இயக்க தொண்டனின் மனம் திறந்த மடல்! இந்த மடல் என் அறிவின்மையாக கூட இருக்கலாம், ஏன் தேவையாற்றதாக கூட இருக்கலாம். சாதாரன தினக்கூலியாக மக்களிடையே வலம் வரும்போது அங்காடியில், பேருந்து நிலையங்களில், ரயில் நிலையங்களில்,திருமண மண்டபங்களில், மாற்று கட்சியினரின் பொதுக்கூட்டங்களில் பகிர்ந்து கொண்ட, விவாதம் செய்த, ஆச்சரியத்துடன் பேசிக்கொண்ட வார்த்தைகளை தான் இங்கே உங்கள் முன் வைக்கிறேன்!.

சரியான சந்தர்ப்பம் கிடைக்குமேயானால் சாதாரண மனிதன் கூட அறிவாளியாகிடுகிறான். அறிவாளியான உங்கள் பேச்சு மிகுந்த சர்ச்சையினை உருவாக்கி அது திமுகவின் வாக்கு வங்கியினை பதம் பார்க்கும் துப்பாக்கி தோட்டாவாய் மாறிவிட்டதே!.மீண்டும் மீண்டும் இந்து மதம் குறித்த பேச்சுகள்,கோவில்களின் சிற்பங்களை குறித்த பேச்சுகள், கோவில்களின் பண்பாட்டு முறைகளை குறித்த பேச்சுகள், பக்தர்கள் கூட்டம் குறித்த பேச்சுகள், திமுகவிற்கு  எத்தகைய  அழிவுகள் உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன என்பது நீங்கள் அறியாததா? இல்லை அறிந்தும் அதை விரும்புகிறீர்களா?.இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சுகளை யார் பேசினாலும் அது திமுகவினையே பலி கேட்கிறது.

அதனால் வெகு ஜன மக்களிடம் ஆற்றாமை அழுகையாகவும், இயலாமை கோபமாக  மாறி திமுகவினை பதம் பார்க்கிறது! ஒன்றே குலம் ஒருவனே தேவன் என அண்ணா ஏன் சொல்லவேண்டும்?. அண்ணாவைவிட. நீங்கள் அறிவாளியா? இன்றைய சூழலில் விபச்சாரியின் மகனாக இருக்க விருப்பமா? என்று ஏன் கேட்க வேண்டும்? அதன் அவசியம் எங்கு வந்தது? ஏன் வந்தது? இன்றைய தினத்தில் மனுதர்மம் நூல் சொன்ன வழியில் தான் மக்கள் நடக்கிறர்களா? 

மனுதர்மம் என்கிற நூல் இப்படி சொல்கிறது. அப்படி சொல்கிறது. என்கிற பேச்சுக்கே இடமேயில்லை. வேலையற்றவன்தான் அதெல்லாம் நோண்டிக்கொண்டிருப்பான். உங்களுக்கு வேலையில்லையா? இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறையில் இல்லையா? தேர்தல் நேரத்தில் எடப்பாடியின் தாயினை பற்றிய பேசிய பேச்சால் தானே கொங்கு மண்டலத்தில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெறமுடியவில்லை! நீங்கள் மெத்த படித்த அறிவாளி.

யாகாவாராயிணும் நாகாக்க என்று பாடம் எடுத்த தலைவர் கலைஞரின் முதன்மை சீடன் அல்லவா நீங்கள். தீதும் நன்றும் பிறர் தரவாரா என்பது நீங்கள் அறியாததா? இன்றைய சூழலில் நடைபெற்ற பொதுக்குழுவில் தலைவர் தளபதி பேசிய பேச்சுகளை உற்று நோக்கினீர்களா? தந்தையினை இழந்து, அவர் இல்லாத பொதுக்குழு, அவர் அமர்ந்திடாத.. தலைவர் நாற்காலி இந்த மண்டபத்தில் எத்தனை முறை தலைவர் அமர்ந்திருப்பார் என்ற எண்ணற்ற நினைவுகளோடு தளபதி இருக்கும் நேரத்தில் பொது இடங்களில் உங்களை போன்றோர் பேசிய பேச்சின் விளைவே தளபதி அன்றைத்தினம் தனது உள்ளக்கிடங்கை கொட்டித்தீர்த்து விட்டார்.

தளபதியினை பார்க்கும் போது உங்களுக்கு அவரின் உழைப்பு, அவர் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் போன்றவை நினைவில் வரவில்லையா? அண்ணாவும், தலைவர் கலைஞரும் கட்டிக்காத்த திமுக என்ற மாபெரும் இயக்கத்தை அழிக்க துடிக்கும் சிறுமதிகொண்டோர் எண்ணிக்கை நீங்கள் அறியாததா? தலைவர் கலைஞரும் ஐம்பது ஆண்டுகாலம் தலைவராக இருந்து இந்த தமிழகத்தை, தமிழனை, தமிழகத்தை வழி நடத்தியது போல் தளபதியும் வழிநடத்த அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டாமா? திமுகவின் துணை பொதுச்செயலர், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் தாங்கள்  இருக்கின்ற காரணத்தால் உங்கள் பேச்சு திமுகவின் குரலாக மாறிவிடுகிறது!நீங்கள் பேசியது தி க வின் மேடையாக இருந்தாலும் உங்கள் குரல் திமுகவின் குரலாக பார்க்கப்படுகிறது!இந்த காலகட்டத்தில் இந்து மத எதிர்ப்பு தேவையா?

2024 நாடாளுமன்ற தேர்தலில் அதன் பாதிப்பு இருக்காதா? இலவச கலர் டிவி, மினிபஸ், 2 ஏக்கர் நிலம், பெரியார் சமத்துவபுரம்,உழவர் சந்தை போன்று 

எண்ணற்ற திட்டங்கள் தந்து மக்கள் நாம் கொடுத்த திட்டங்கள் வெற்றியினை தேடித்தரும் என்று நினைத்த வேளையில் நீங்கள் மத்தியமைச்சராக இருந்த தகவல் தொடர்பு துறையில் 2ஜி ஊழல் என்ற பொய் பிரச்சாரம் திமுகவின் வெற்றியினை பாதித்ததா இல்லையா? அது போல் இந்த விபச்சாரியின் மகன் என்று நீங்கள் பேசிய பேச்சால்..

விபச்சாரியின் மகன் என்று சொன்ன திமுகவிற்கா உங்கள் ஒட்டு ? சிந்தீப்பீர் ? வாக்களிப்பீர் என்றால் வெகுஜன மக்களின், அன்றாட காய்ச்சிகளின், கிராமப்புற மக்களின் மன நிலை என்னவாக இருக்கும்? முடிவும் என்னவாக இருக்கும் என நான் சொல்லி தெரிய வேண்டுமா? நீங்கள்லாம் எங்கிருந்து புறப்பட்டு வருகிறீர்கள்?

பின்குறிப்பு: எனக்கு பொறுப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் செஞ்ச தவற தட்டி கேட்காம இருக்க மாட்டேன் கலைஞர் வாழ்க.’’ எனப்பதிவிட்டுள்ளார் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் ராஜமூர்த்தி. கழகத்திற்குள் இருந்தே வரும் இத்தகைய எதிர்ப்பை எதிர்பார்க்காமல் மிரண்டு கிடக்கிறது திமுக தலைமை என்கின்றனர்.