
தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் விவகாரம், அரசியல், சமூக, மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் புயலை கிளப்பியுள்ளது. இந்த ஊழலில் மையப் புள்ளியாக விளங்குபவர், உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் என்று அறியப்படும் தொழிலதிபர் ரத்தீஷ். அமலாக்கத்துறையின் சோதனைகளால் தலைமறைவாகியிருக்கும் இவர், ஊழல் பணத்தை ஆடம்பரமாக செலவு செய்த விதம் குறித்து, பிரபல யூடியூபர் மாரிதாஸ் தனது வீடியோவில் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டார்
மார்ச் 2025 முதல் தொடங்கிய சோதனைகள், சென்னையில் டாஸ்மாக் தலைமையகம், மதுபான ஆலைகள், மற்றும் தொடர்புடையவர்களின் இடங்களில் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனைகளில், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன், தொழிலதிபர் ரத்தீஷ், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரின் இடங்கள் முக்கிய இலக்காக இருந்தன. இந்த முறைகேடுகளில், ரத்தீஷ் முக்கிய பங்கு வகித்துள்ளார் , உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பராக இருப்பதால், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தியயுள்ளார்.அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டது அமலாக்கத்துறை.
மேலேயும் ரத்தீஷ் கடந்த மூன்று ஆண்டுகளில் ஊழல் மூலம் சம்பாதித்த பணத்தை ஆடம்பரமாக செலவு செய்துள்ளார். சென்னையில் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பிரம்மாண்ட பங்களாஇதற்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மார்பிள், கிரானைட், பாத்ரூம் பொருட்கள், மற்றும் லைட் பிட்டிங்ஸ் வாங்கப்பட்டுள்ளது. இந்த பங்களாவின் கட்டுமானப் புகைப்படங்களை மாரிதாஸ் வெளியிட்டார்.
இதற்கிடையில் முதல்வர் குடும்பத்தின் உறவினரும் துணை முதல்வர் உதயநிதியின் நண்பரான ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி திரைத்துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனையின் போது பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்ததாக சொல்லப்படுகிறது.
ஆகாஷ் பாஸ்கரன் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. தற்போது வரை ஆகாஷ் பாஸ்கரன் ஆஜர் ஆகவில்லை. டாஸ்மாக் துறை உயர் அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜர் ஆன நிலையில், இந்த விவகாரத்தில் முக்கிய நபராக பார்க்கப்படும் ஆகாஷ் பாஸ்கரன் ஆஜர் ஆகவில்லை.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் திமுகவை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன் என்றும், அவருக்கும் திமுகவின் உயர்மட்ட புள்ளிகளுக்கும் என்ன தொடர்பு என்றும் அனைத்து தரப்பிலும் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,, செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டபோது நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அவரை பார்க்கச் சென்றார் உதயநிதி ஸ்டாலின். அப்போது ஆகாஷ் பாஸ்கரனை உள்ளே அழைத்துச் சென்றது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது
இதுதொடர்பான வீடியோவை எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளஎதிர்கட்சிகள் , "தியாகி செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை சோதனையின் போது மருத்துவமனையில் நடத்திய நெஞ்சு வலி நாடகத்தை காண்பதற்கு சென்றார் துணை முதலமைச்சர் உதயநிதி. கையோடு ஆகாஷ் பாஸ்கரனை உள்ளே அழைத்துச் சென்றது ஏன்?
செந்தில் பாலாஜிக்கும் பராசக்தி தயாரிப்பாளருக்கும் என்ன தொடர்பு?உதயநிதி ஆகாஷ் பாஸ்கரனை தேடித் தேடி அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குள் செல்வது எதற்கு? மொத்தத்தில் TASMAC வருமானத்தில் DAWN PICTURES இயங்கியதா என கேள்விகள் எழ தொடங்கி உள்ளது. அரசியலில் இல்லாத ஒரு நபரை செந்தில் பாலாஜி கைதான நேரத்தில் சென்று பார்த்தது ஏன் ? இந்த வழக்கில் இந்த வீடியோ முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகிறது.