24 special

இரு அமைச்சர்கள் பதவி பறிப்பா? நீதிமன்றம் கொடுத்த அதிரடி! கோபாலபுரத்தில் இறங்கும் இ.டி! அலறும் திமுக

MKSTALIN,DURAIMURUGAN
MKSTALIN,DURAIMURUGAN

திமுக அரசுக்கு வ்ரும் காலம் என்பது சற்று கடினமாக தான் இருக்கும் போலிருக்கிறது. அமைச்சர்களின் ஊழல் லிஸ்டுகளை கையில் எடுத்துள்ளது டெல்லி. அதே போல் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகளையும் வேகப்படுத்தி உள்ளது. இது தேர்தல் சமயத்தில் திமுகவின் கழுத்தை நெறிக்கும் . மேலும் கோபாலபுரத்தில் உள்ள முக்கியஸ்தரை அமலாக்கத்துறை சுற்றியுள்ளது. தண்ணீர் பிஸ்னஸ் முதல் வெளிநாடுகளில் குவித்துள்ள முதலீடுகள் வரை அனைத்தையும் சல்லடை போட்டு விசாரித்துள்ளது அமலாக்கத்துறை. அமைச்சர்கள் கொடுக்கும் கமிஷன்கள் முதல் அனைத்து ஆதாரங்களையும் கைப்பற்றியுள்ளது அமலாக்கத்துறை .விரைவில் கோபாலபுரம் குடும்பத்தின் முக்கியஸ்தர் கைது செய்யப்பட்டு திகாருக்கு அனுப்ப தயராகி வருகிறதாம் டெல்லி. 


இந்த நிலையில் சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பாக பாஜக கவுன்சிலர் தாக்கல் செய்த தனிநபர் புகார் மனுவுக்கு பதிலளிக்கும்படி, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்த், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வெறுப்புப் பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது

இந்த புகார் மனு, எம்.பி - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனு குறித்து அக்டோபர் 30-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது ஒருபுறம் என்றால் கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.40 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து இருந்தது.

திமுக பொதுச் செயலாளர் மற்றும் மூத்த அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு,இறுதி  கட்டத்தை நோக்கி நகர்கிறது.  கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் பொதுப் பணி மற்றும் சட்டத் துறை அமைச்சராக துரைமுருகன் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து, 2011ஆம் ஆண்டு, லஞ்ச ஒழிப்புத் துறை, அவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த வேலூர் முதன்மை நீதிமன்றம், 2017ஆம் ஆண்டு துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்த குமாரியை வழக்கில் இருந்து விடுவித்தது. இதனால், வழக்கில் துரைமுருகனுக்கு சட்ட ரீதியான ஒரு தற்காலிக நிம்மதி கிடைத்தது. ஆனால், இதை ஏற்றுக் கொள்ளாத லஞ்ச ஒழிப்புத் துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனால் துரைமுருகன் சொத்துக் குவிப்பு வழக்கின் இரண்டாம் அத்தியாயம் தொடங்கியது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமி நாராயணன், அக்டோபர் 22 ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை வேலூர் நீதிமன்றத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது ஏன்? என காவலதுறை விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் அமைச்சர்களின் வழக்கு முடிவுக்கு வரும் என நீதிமன்ற  தகவல்கள் தெரிவிக்கிறது. பதவிகள் பறிபோகலாம் எனவும் செய்திகள் கூறிவருகிறது