24 special

என்ன திருமா நிலை இப்படி ஆகிவிட்டது?

mk stalin, thirumavalan
mk stalin, thirumavalan

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சங்கரன் கோவிலில் பேசிய பேச்சுக்கள் பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது குறிப்பாக, விடுதலை சிறுத்தை என்றால் முதலில் போலீஸ் காரன் லத்தியை வைத்து அடிப்பான் சீரு சீரு என்று கிண்டல் செய்வான் அதனை தாண்டி தான் இந்த இடத்திற்கு வந்துள்ளோம்.


ஆனால் நீ கொடி கம்பம் ஊரில் வைக்கவே யோசிக்கிறாய், ஒருவன் மீதும் 10 வழக்குகள் இருக்கனும் என திருமாவளவன் பேசியது மிக பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது, இதை அடுத்து திருமாவளவன் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு ஏற்பாட்டிற்கு சென்ற காவல்துறையினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏற்கனவே தமிழகத்தில் கள்ளக்குறிச்சி கலவரம், pFI தடையை தொடர்ந்து மாநிலத்தின் பல பகுதிகளில் பெட்ரோல் வெடிகுண்டு கலாச்சாரம் என  அடுத்தடுத்த சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் அரங்கேறி வந்தன, இந்த சூழலில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள மாநில காவல்துறைக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டது.

அந்த வகையில் திருமாவளவன் பேச்சு தமிழகத்தில் சாதி ரீதியான கலவரத்தை உண்டாக்கும் எனவும் அவர்  தொடர்ந்து மத ரீதியாக பேசினால் இரு தரப்பு இடையே தென் மாவட்டங்களில் மோதல் உண்டாகலாம் எனவும் அக்டோபர் மாதத்தில் திருமாவளவன் சொந்த கட்சியினரை உசுப்பு விட காரணம் என்ன எனவும் காவல்துறை உயர் அதிகாரிகள் முதல்வர் அலுவலகம் வரை கவனத்தில் கொண்டு சென்று இருக்கிறார்களாம்.

இதையடுத்து திமுகவில் திருமாவவனுக்கு நெருக்கமான அமைச்சர் ஒருவர் திருமாவை சந்தித்து பேசி இருக்கிறார் இதையடுத்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முழுமையான பல்டியை திருமாவளவன் அடித்துள்ளார். நாங்கள் இந்துக்களுக்கு எதிரியல்ல எனவும், சனாதானா கூட்டத்தை விமர்சனம் செய்தால் தாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர் போன்று சித்தரிப்பதாக திருமாவளவன் பேசினார்.

தொடர்ச்சியாக இந்து மதத்தை மதமே இல்லை எனவும், இந்து கடவுள்கள் குறித்து எல்லாம் ஏளனம் செய்யும் வகையில் பேசிய திருமாவளவன் நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என பல்டி அடித்துள்ளார்.

திருமாவளவன் பல்டி அடித்தன் பின்னணியில் இரண்டு சம்பவங்கள் இருக்கிறதாம் ஒன்று பாராளுமன்றத்தில் திருமாவளவன் மீது பல்வேறு புகார்கள் நிலுவையில் இருக்கின்றன திருமாவளவன் பதவியை பறிக்க வேண்டும் எனவும் அவரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனவும் வேறு மாநிலத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கொடுத்த புகார் காரணமாக பார்க்க படுகிறது.

இரண்டாவது விசிக கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களே ஏன் இந்து மதம் குறித்து பேசவேண்டும் இதனால் பாஜகவிற்குதான் லாபம் எனவும் திருமாவிற்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்கள்.. போதாத குறைக்க முன்பு போல் தமிழக அரசியல் களம் இல்லை இப்போது இந்து குறித்து தவறாக கருத்து தெரிவித்தால் சொந்த கட்சி தொண்டர்களே ஏன் தலைவர் மற்ற மதத்தை விமர்சனம் செய்ய மறுத்து இந்து மதத்தை மட்டும் பேசுகிறார் என நமது கட்சி நிர்வாகிகளே கேட்க தொடங்கி இருக்கின்றனர் என போன் போட்டு கூறியுள்ளார்.

இதையடுத்து தான் சென்னை கொரட்டூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நாங்கள் இந்துக்களுக்கு எதிரான கட்சியல்ல எங்கள் கட்சியில் அதிகமாக இருப்பது இந்துக்கள்தான் என பல்டி அடித்து இருக்கிறாராம் திருமா என்கின்றனர் அரசியல் அறிந்தவர்கள்.