
தமிழகம் முழுவதும் மிக பெரிய அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது அண்ணாமலை இன்று தொடங்க இருக்கின்ற நடைபயணம் 1700 கிலோ மீட்டர் நடைபயணமாகவும் 900 கிலோ மீட்டர் வாகனத்திலும் இந்த பயணம் 5 கட்டங்களாக நடக்க இருக்கிறது.இந்த சூழலில் அண்ணாமலை நடை பயணம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என ஆளும் கட்சியான திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கணக்கு போட்டு இருந்தன மேலும் தென் மாவட்டத்தில் நடை பயணம் தொடங்குவதால் கூட்டமும் இருக்காது என அண்ணாமலை நடை பயணம் குறித்து மேலும் சில கட்சிகளும் கணக்கு போட்டு காத்து இருந்தன.
இந்த சூழலில் தான் தற்போது தமிழகம் முழுவதும் இருந்து பாஜக தொண்டர்கள் இராமேஸ்வரம் நோக்கி தங்கள் சொந்த செலவில் குவிந்து வருகின்றனர், வாகனம் நிறுத்தவும், எந்த ஓட்டளிலும் ரூம் இல்லாத நிலையை ராமநாதபுரம் தொடங்கி ராமேஸ்வரம் வரை நடக்கிறது.குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் லட்ச கணக்கான பாஜகவினர் ராமேஸ்வரம் நோக்கி குவிந்து இருப்பதும் இன்னும் தொடர்ச்சியாக வாகனங்களில் வந்து கொண்டு இருப்பதும் ஆளும் கட்சியான திமுகவை அதிர செய்து இருக்கிறது.
பாஜக என்றால் எங்கே இருக்கிறது என கேட்டவர்கள் எல்லாம் அண்ணாமலை நடை பயணம் தொடங்கும் நாளில் தென் மாவட்டமான ராமநாதபுரமே அதிர்வதை பார்த்து வாயடைத்து போயிருக்கிறார்கள்.அண்ணாமலை நடைபயணத்தில் குறைந்தது 1 லட்சம் பேர் தாண்டாது என நினைத்து இருக்கும் சூழலில் தற்போது மிக பெரிய அதிர்வலைகளை இந்த சம்பவம் உண்டாக்கி இருக்கிறது நடை பயணம் தொடங்கும் முன்னரே இப்போது 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொண்டர்கள் குவிந்து இருக்கின்றனர்.
என்னடா இது 50 ஆயிரம் நபர்கள் கூட கூட மாட்டார்கள் என நினைத்த இடத்தில் நடைபயணம் தொடங்கும் முன்னரே லட்ச கணக்கான தொண்டர்கள் குவிய தொடங்கி இருக்கிறார்கள் என அதிர்ந்து போயிருக்கிறதாம் ஆளும் கட்சியான திமுக.என்ன நடக்கிறது இராமநாதபுரத்தில் என மாநில உளவுத்துறையினர் தொடங்கி ஒட்டு மொத்த திமுக கட்சியும் இராமேஸ்வரத்தை நோக்கியே தனது பார்வையை திருப்பி இருக்கிறது. இதற்கே இப்படி என்றால் வருகின்ற நாட்களில் என்னென்ன நடக்க போகிறதோ என ஆளும் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் மிரண்டு போயிருக்கிறார்களாம்.
யாத்திரையின் முதல் நாளே முதல் ட்விஸ்ட் கொடுத்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஆச்சர்யத்தை கொடுத்து இருக்கிறது அண்ணாமலை நடை பயணம்.அண்ணாமலை நடை பயணம் முழுவதும் ஏற்படுத்திய மாற்றம் என்ன மக்கள் கருத்து என்ன என்பதை நமது TNNEWS24 முழுமையாக ஒளிபரப்ப இருக்கிறது வேறு எந்த இணைய ஊடகத்தை காட்டிலும் களத்தில் இருந்து நேரடியாக செய்திகளை பெற இணைந்து இருக்கவும் உங்கள் TNNEWS24 உடன்.