24 special

சைக்கிள் கேப்பில் பந்து போட்ட விசிக வன்னியரசு..! நேர்காணலில் நைசா பிட்டு போட்ட விவகாரம்!

Rajiv gandhi
Rajiv gandhi

ராஜீவ் கொலையாளிகள் ஆறு பேர் விடுதலை  சுப்ரீம் கோர்ட் தீர்ப்பும் சலசலப்பும். 1991-ல்  மே 21 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்த முன்னாள் பிரதமரும்,  காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலால் ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார். அந்த குண்டுவெடிப்பில் ராஜீவ் காந்தி மட்டுமல்லாமல் பொதுமக்களில் 15  பேரும். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 


இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் நளினி, முருகன் உட்பட 26 பேருக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை அளித்து தீர்ப்பளித்தது.  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் பேரறிவாளனுக்கு மட்டும் தூக்கு தண்டனையை உறுதி செய்து சாந்தன் மற்றும் மற்றவர்களுக்கு  ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. அவர்களும் ஆயுள் தண்டனையை அனுபவித்து வந்த நிலையில் பேரறிவாளன் உட்பட ஆறு பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு பரிந்துரைத்தது. கவர்னர் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தியதால் பேரரிவாளன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, கடந்த மே மாதம் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அவரின் நன்னடத்தை, 30 ஆண்டுக்கும் மேலான சிறைவாசம் பரோல் காலங்களில் செயல்பாடுகளை கணக்கிட்டு, அரசியல் சாசனத்தில் 142 ஆவது பிரிவின் கீழ் விடுதலை செய்தது. 

பேரறிவாளன் விடுதலை செய்தி வந்த உடனே பல அரசியல் வல்லுனர்களும் போல மற்ற ஆறு பேரும் விடுதலை ஆவார்கள் என தனது யூகங்களை சொல்லி வந்தனர், பேரறிவாளன் விடுதலைப் போலவே தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆறு பேரும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த நிலையில் , தமிழக அரசும் அவர்களின் நன்னடத்தை குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு  நீதிபதிகள் பி ஆர்.கவாய்,பி.வி நாகரத்தினம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு  வந்தது ஆறு பேரும் பேரறிவாளனை போலவே, நன்னடத்தை உடல் நலக்குறைவு, மற்றும் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கைள் காரணமாக விடுதலை செய்யப்பட்டனர்.

தீர்ப்பு வெளிவந்த உடனேயே  காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயராம் ரமேஷ் உச்ச நீதிமன்றத்தின் ராஜீவ் கொலையாளிகள் விடுதலை தீர்ப்பை ஏற்க முடியாது, இந்திய உணர்வோடு உச்ச நீதிமன்றம் ஒத்துப் போகாதது துரதிஷ்டமானது , இது பெரும் பிழை  என அறிக்கை வெளியிட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்  தலைவர் அழகிரி,  அவர்களை குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் சொல்லவில்லை, குற்றவாளிகளாகவே அவர்கள் வாழ்க்கையில் உலா வருகின்றனர். அதுவும் தண்டனை தானே. ராஜீவ் கொலையுடன் சேர்த்து மற்றவர்கள் குடும்பமும் மீளா துயரில் ஆழ்ந்திருக்கிறது. அவர்களுக்கு ஆறுதல் சொல்வோம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். 

தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். இவர்கள் விடுதலை குறித்து முதல்வர் என்ற முறையில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் வலியுறுத்தினோம், மாநில அரசின் அமைச்சரவை தீர்மானத்தை கவர்னர் கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.

மாநில அமைச்சரவை உரிமையை நிலைநாட்டும் வகையில்  தீர்ப்பு அமைந்துள்ளது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தீர்மானங்களை முடிவுகளை நியமன பதவிகளில் இருக்கும் கவர்னர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பும் ஆதாரமாக அமைந்திருக்கிறது என்று கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தீர்ப்பு வெளிவந்தவுடன் காங்கிரஸ் அரைமனதாக கண்டித்து இருக்கிறது, பேரறிவாளன் விடுதலை ஆனவுடன் தமிழக முதல்வர் பேரறிவாளனை கட்டிப்பிடித்து வரவேற்றதை கண்டிக்க முதுகில்லாத காங்கிரஸ், மேலும் அவரது பிள்ளைகள் குற்றவாளிகளை கடிதம் மூலமாகவும் நேரில் சந்தித்திம் மூலமாகவும் தமிழக அரசியலுக்காக நாடகம் வருகின்றனர். முதல்வர் மு.க ஸ்டாலினும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் உள்ள கட்சிகள் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும், எதிர்ப்பதாகவும் கூறியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பிரபல மூத்த ஊடகவியாளரின் நேரலையில்  கலந்து கொண்ட வீசிகா கட்சியின் வன்னியரசுவிடம், கொளத்தூர் மணி போன்றவர்கள் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை, விடுதலை செய்ததை போல 1998 இல் நடந்த கோவை  குண்டுவெடிப்பில் சிறையில் உள்ளவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்துக்கு, உடன்படுகிறீர்களா என்ற கேள்விக்கு ஆம்,ஆதரிக்கிறோம் என்றது.

அரசியல் வட்டாரத்தில் காங்கிரஸ் கட்சி  மேலும் திமுக கூட்டணியில் தொடருமா? அல்லது தன்மானத்துடன் கழன்று கொள்ளுமா என்ற விவாத பொருளாகி,  அரசியல்  அதிர்வலைகளை எழுப்பி உள்ளது. நடக்கும் அரசியல் கூத்தை எல்லாம் வேடிக்கை பார்க்கும் மக்கள், ஓட்டு அரசியலுக்கு கட்சி கொள்கைகளை அடகு வைத்து கூட்டணி வைத்தால் திரிசங்கு சொர்க்கம் தான் என தலையில் அடித்துக் கொள்வதை பார்க்க முடிகிறது.