24 special

வெள்ளயங்கிரி மலை!

vellaingiri hills
vellaingiri hills

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையை பற்றி அறிந்திடாத சிவ பக்தர்களே இருக்க முடியாது! ஏனென்றால் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த கோவில் ஏழு மலைகளைக் கொண்டது என்பதும் அந்த மலையில் ஏறி இறங்குவது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல என்பதும் அந்த மலைக்கு சென்று வந்த சிவ பக்தர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதோடு இந்த கோவிலின் கிழக்கு பகுதியிலேயே முருகனின் ஏழாவது படை வீடு என்று போற்றப்படுகின்ற மருதமலை அமைந்துள்ளதும் மற்றுமொரு சிறப்பாகும், பூலோகத்தில் உள்ள கைலாயம் என்று போற்றப்படுகின்ற இமய மலைக்கு இணையாக பக்தர்களால் புகழப்படுகின்ற தென் கயிலேயே இந்த வெள்ளியங்கிரி மலை! இந்த மலை முழுவதும் பல அதிசயங்களும் அற்புதங்களும் பல வகையான மூலிகை பொருட்களும் கிடைக்கக்கூடிய இடமாகும்! அதோடு இங்குள்ள ஏழு மலைகளுமே ஒவ்வொரு விதமான சிறப்புகளையும் வரலாற்று கதைகளையும் தாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 


அப்படிப்பட்ட ஏழுமலையையும் கடந்து ஏழாவது மலையின் உச்சியில் உள்ள சிவபெருமானை தரிசிப்பது சிவனை கைலாயத்திற்கே சென்று தரிசித்ததற்கு இணையான பயனை தரும் என்றும் கூறப்படுகிறது. இந்த பயனை அடைவதற்கு முன்பு சிவ பக்தர்களும் சரி பொதுமக்களும் சரி தன் உடலை தயார் படுத்திக் கொண்டு மலை ஏற செல்ல வேண்டும். ஏனென்றால் வெள்ளிங்கிரி மலை என்பது ஒன்று இரண்டு மலைகளை மட்டும் கொண்டது அல்ல கிட்டத்தட்ட ஏழு மலைகளைக் கொண்டது அந்த மலைக்கு உண்மையிலேயே சென்று சிவனை தரிசித்து வந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அந்த மலையில் ஏறி இறங்குவது என்பது எவ்வளவு கடினமானது என்று! வழியில் செல்லும் பொழுது எந்தவித இடத்திலும் கழிப்பறைகளோ தங்கும் விடுதிகளோ சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரோ கிடையாது அந்த மழையில் இருக்கும் சுனைகளில் கிடைக்கும் தண்ணீரை மட்டுமே பருக வேண்டும்.

அதனால் இந்த மலையில் ஏறுவதற்கு முன்பு பக்தர்கள் தங்களுக்கு வேண்டிய தண்ணீரையும் உணவு பொருட்களையும் எடுத்து சொல்வது மிகவும் நல்லது அதேபோன்று ஒவ்வொரு மலையைக் கடந்த பிறகு சற்று ஓய்வு எடுத்து செல்வது மிகவும் நல்லது, முதல் முறை இந்த மழையில் ஒருவர் ஏறுகிறார் என்றால் கிட்டத்தட்ட ஏழு முதல் எட்டு மணி நேரம் கூட ஆகலாம் என்று கூறப்படுகிறது அதோடு மலையின் உச்சிக்கு சென்ற பிறகு அங்கு நாம் சிறிது நேரம் அமர்ந்து உட்காருவதற்கு பந்தல் போட்டு வைத்திருப்பார்களா என்றால் அதுவும் கிடையாது சிவபெருமானை தரிசித்து விட்டு உடனடியாக நாம் கீழே இறங்கித்தான் ஆக வேண்டும் அப்படிப்பட்ட ஒரு நிலைதான்  அங்கு உள்ளது. இப்படி வெள்ளையங்கிரி மலையில் நாம் கவனிக்கப்பட வேண்டியது பல விஷயங்கள் இருக்கிறது. ஆனால் அவை எதையும் அறியாமல் instagram மற்றும் பேஸ்புக்கில் பதிவிடப்படும் வீடியோக்களை மட்டுமே நம்பி பலர் இந்த வெள்ளங்கிரி மலையை எளிதில் ஏறிவிடலாம் என்று சொல்கிறார்கள் ஆனால் அப்படி செல்பவர்களின் சிலர் மரணத்தை தழுவியுள்ளார்கள் என்ற செய்தியும் தற்போது வெள்ளிங்கிரி மலை ஏற வேண்டும் என்று ஆர்வத்தில் இருந்த அனைவருக்கும் பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது மகா சிவராத்திரிக்கு முன்பாக வெள்ளிங்கிரி மலையில் ஏறிய சில இளைஞர்கள் பாதியிலேயே மூச்சு திணறலும் இதய கோளாறும் ஏற்பட்டு இறந்தது செய்திகளில் பரபரப்பாக வெளியானது அது மட்டும் இன்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளரான ஒருவர் வெள்ளிங்கிரி மலைக்கு சென்று வந்து தன்னுடைய அனுபவங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் அவற்றை பார்த்தாலே தெரியும் வெள்ளையங்கிரி மலை எப்படி அவரை அலற வைத்துள்ளது என்பது, இதனால் தற்போது சமூக வலைதளங்களில் வெள்ளியங்கிரி மலை ஏற விரும்புபவர்கள் இதனை மேற்கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகள் தற்போது பதிவிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று வெள்ளிங்கிரி மலை ஏற சென்ற கிரன் என்ற 22 வயது இளைஞன் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளது செய்தி கோவை பகுதி முழுவதையும் அதிர வைத்துள்ளது. பெரியவர்களும் உடல் நிலை சரியில்லாத நிலை ஏறும் போது தான் பல நடவடிக்கைகளையும் சிலர்  வெள்ளிங்கிரி மலை ஏறுவது தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இளைஞர்களும் இப்படி மரணித்துப் போன செய்தி வெள்ளையங்கிரி மலையில் உள்ள கடினத்தை புலப்படுத்துகிறதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.