24 special

இது தான் மோடி! அமெரிக்கா, சீனாவை ஓரம் கட்டிய பாரதம்! வாயடைத்து போன வல்லரசுகள்

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

உலக நாடுகள் பொருளாதார நெருக்கடிகளால் திணறிக்கொண்டிருக்கின்ற வேளையில், இந்தியா தனது வேகமான வளர்ச்சியால் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சர்வதேச நாணய நிதியம் (IMF) சமீபத்தில் வெளியிட்டுள்ள உலக பொருளாதார மதிப்பீட்டில், “வேகமாக வளர்ந்து வரும் முதல் 10 நாடுகளில்” இந்தியா முதலிடத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு சாதாரண புள்ளிவிவரச் செய்தி அல்ல — 140 கோடி மக்களின் உழைப்புக்கும், பிரதமர் நரேந்திர மோடியின் தெளிவான வழிநடத்தலுக்கும் கிடைத்த சர்வதேச அங்கீகாரம் என்பதில் சந்தேகமில்லை.


பொருளாதார மதிப்பில் 30.51 டிரில்லியன் டாலருடன் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளபோதும், அதன் வளர்ச்சியானது 1.8% என்ற அளவில்தான் உள்ளது. 19.23 டிரில்லியன் டாலர் மதிப்புடன் இரண்டாமிடத்தில் உள்ள சீனா, 4% வளர்ச்சியையே பதிவு செய்திருக்கிறது. 4.7 டிரில்லியன் டாலருடன் மூன்றாம் இடத்தில் உள்ள ஜெர்மனியோ, மைனஸ் 0.1%-ல்தான் வளர்கிறது. ஆனால், 4.19 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்புடன் 4-ம் இடத்தில் உள்ள இந்தியா... 6.2% வளர்ச்சியுடன் முன்னிலையில் உள்ளது. இத்துடன், ஒட்டுமொத்த உலக நாடுகளின் மொத்த சராசரி வளர்ச்சி விகிதத்தை விடவும் இரண்டு மடங்கு அதிகம் என்ற பெருமையும் சேர்ந்துள்ளது. இது இந்தியாவை “உலகின் நம்பிக்கையின் மையமாக” மாற்றியுள்ளது.

இந்தச் சாதனை திடீரென நிகழ்ந்ததல்ல. கடந்த 10 ஆண்டுகளில் மோடி தலைமையில் இந்தியா எடுத்த உறுதியான பொருளாதாரப் போக்குகள், மைக்ரோ லெவல் பிசினஸ் ஊக்குவித்தல், ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் மூலம் புதிய இளம் தலைமுறையினரை முதலாளி ஆக்கியது, தன்னம்பிக்கையுடன் வளர்ந்த உள்நாட்டு தொழில்துறை, வலுவான நுகர்வோர் சந்தை, சரியான வரி அமைப்பு, மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் அளவில்லா முதலீடுகள் — இவை அனைத்தும் சேர்ந்து உருவாக்கிய வெற்றிப் பாதையே இது.

“மேக் இன் இந்தியா ”, “டிஜிட்டல் இந்தியா”, “ஸ்டார்ட்அப் இந்தியா”, “ போன்ற மாபெரும் முயற்சிகள், நாட்டின் பொருளாதார நரம்புகளில் புதிய இரத்தத்தை பாய்ச்சியுள்ளது. ஒரே ஒரு மொபைல் போனில் இருந்து வங்கி சேவை வரை, அரசாங்கம் மக்களின் கைகளில் நேரடியாக சென்றடைந்துள்ளதுதான், வளர்ச்சியின் முக்கிய அடித்தளம்.

கொரோனா காலத்தில் உலகின் பெரும் சக்திகள் மந்தமடைந்தபோதும், இந்தியா தனது தன்னம்பிக்கையை இழக்கவில்லை. அதே சமயம், 120 கோடி  மக்களுக்கு தடுப்பூசி அளித்துத் தன்னைத்தானே பாதுகாத்தது; அடுத்த கட்டத்தில்,  மற்ற நாடுகளுக்கும் கொரானா தடுப்பூசி இலவசமாக கொடுத்து பல நாடுகளை வாழவைத்துள்ளது. இதை உலகமே பாராட்டியது. இதே மனப்பாங்கே பொருளாதார வளர்ச்சிக்கும் ஆதாரமாக மாறியுள்ளது.இன்று உலக நிதி அமைப்புகள் அனைத்தும் ஒரே குரலில் கூறுகின்றன — “இந்தியாவே உலக பொருளாதாரத்தின் பிரகாசமான நட்சத்திரம்” என்று. 

இன்றைய இந்தியா, உலக பொருளாதாரத்தில் ஒரு சாதாரண பங்குதாரி அல்ல — எதிர்காலத்தை வடிவமைக்கும் தலைசிறந்த சக்தி. தொழில்நுட்பத்தில் முன்னேற்றம், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி ஆராய்ச்சி, பசுமை ஆற்றல், ரயில் நவீனமயமாக்கல், சாலை இணைப்புகள் — அனைத்திலும் அதிவேக வளர்ச்சி நிகழ்கிறது.

இந்திய பொருளாதார வளர்ச்சி வெறும் கணக்குகள் அல்ல; இது 140 கோடி மக்களின் உழைப்பு, நம்பிக்கை, தேசபற்று ஆகியவற்றின் உயிர்த்துடிப்பு. நம் முன்னேற்றப் பாதை, மற்ற நாடுகளுக்கு ஒரு உதாரணம் ஆகும். இந்த வேகம் தொடர்ந்தால், விரைவில் உலக பொருளாதாரத்தின் உச்சியில் திருநாடு இந்தியா தனது தேசியக் கொடியை பறக்கவிடும் நாளும் மிகத் தொலைவில் இல்லை!