24 special

சென்னை டூ டெல்லியா வாய்ப்பு இல்லை....மீண்டும் நெஞ்சை பிடித்த செந்தில் பாலாஜி!

senthil balaji
senthil balaji

அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்தததாக வழக்கு தொடரப்பட்டது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்டு சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட உடன் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி சிறை செல்லாமல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஹார்ட் சர்ஜரி செய்து காணொளி மூலம் நீதிமன்றத்தில் விளக்கமளித்தார். உடல்நிலை தேறி வந்த நிலையில்  அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் இருந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.அதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுத்தார். அந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது அமைச்சரவையில் துறை இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவார் என்று ஆணை பிறப்பித்தார்.


செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்து நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு அளித்தார். ஆனால் செந்தில் பாலாஜி மீது குற்ற வழக்கு உறுதி செய்யப்பட்டதால் ஜாமின் மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 30ம் தேதி எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு., எதிராக வழக்கு விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சிவகுமாரிடம் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான 3 வழக்குகளில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். கடந்த செப்., 29ம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு  செந்தில் பாலாஜி காணொளி வாயிலாக புழல் சிறையில் இருந்து ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி மேலும் அக்டோபர் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து உத்தரவிட்டார். தொடர்ந்து 100 நாட்களுக்கு மேல் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சர்க்கரை அளவு, ரத்த கொதிப்பு அதிகமாக இருப்பதால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தியள்ளனர். அடுத்த கட்ட விசாரணை இந்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், குற்ற பத்திரிகை தாக்கல் மூலம் செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் இருந்து டெல்லி திகார் ஜெயிலுக்கு மாற்றப்படலாம் என்று தகவல் கூறப்பட்டது. மத்திய சிறைக்கு மாற்றப்பட்டால் செந்தில் பாலாஜி உட்பட திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிக்கலாம் என்று தெரியவந்தது. இதன் காரணமாக செந்தில் பாலாஜி மீண்டும் நெஞ்சு வலி கூறி தப்பிக்க முயற்சிகிறார் என்று கூறப்படுகிறது.  ஏற்கனவே உடல்நிலையை கரணம் காட்டி, ஜாமின் கோரிய அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது செந்தில் பாலாஜி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.