24 special

பாக்கிற்கு விழுந்த அதே மிதி வங்கதேசத்திற்கு வறட்சியாகும் வங்கதேசம் கங்கை நதி நீர் ஒப்பந்தத்தில் கைவைக்கும் இந்தியா

INDIA,PAKISTAN
INDIA,PAKISTAN

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் உடன்படிக்கையை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. அடுத்த கட்டமாக வங்கதேசம் உடனான கங்கை நதி நீர் பங்கீட்டு உடன்படிக்கை தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தி சில மாற்றங்களைக் கொண்டு வர இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவில் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதில் குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பாகிஸ்தான் முழுக்க பாலைவனம் ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது.


இதன்மூலம் பாகிஸ்தானின் கதையை நம் நாடு முடித்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக தான் நம்மை சீண்டி வரும் இன்னொரு நாடான வங்கதேசத்துக்கு ‛செக்' வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தவரை நம் நாட்டுடன் நட்பாக இருந்தார். கடந்த ஆண்டு நடந்த வன்முறையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்தார்..தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடக்கிறது. இடைக்காலஅரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். இவர் நம்மை சீண்டி வருகிறார். சீனா, பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளுடன் சேர்ந்து நம்நாட்டை எதிர்க்க தொடங்கி உள்ளார். அங்கு வாழும் இந்துக்களையும் சீண்டி வருகிறது.

இதனால் வங்கதேசத்துக்கு பாடம் புகட்ட நம் நாடு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு எப்படி சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து நம் நாடு பதிலடி கொடுத்ததோ அதேபோல் தான் வங்கதேசம் - இந்தியா இடையேயான 30 ஆண்டு கால கங்கை நதி நீர் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இமயமலையில் உருவாகும் முக்கிய நதிகளில் ஒன்று கங்கை நதி. . இந்த நதி மொத்தம் 2,525 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து கடலை அடைகிறது. இந்த நதி நம் நாட்டில் கங்கை என்றும் வங்கதேசத்தில் பத்மா என்றும் அழைக்கப்படுகிறது.இதற்கிடையே தான் கடந்த 1975ம் ஆண்டில் கங்கை நதியின் பாதையில் மாற்றம் செய்யப்பட்டது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா துறைமுகத்தில் போக்குவரத்து வசதிக்காக, ஃபராக்கா என்ற இடத்தில் அணை கட்டப்பட்டது. இந்த அணை மூலம் கங்கை நதி நீர் ஹூக்ளி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டது. இதனால் கங்கை நதி நீர் கிடைக்காமல் வங்கதேசம் வறட்சியை எதிர்கொண்டது

இதனை தொடர்ந்து வறட்சி காலம் கணக்கிடப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 11ம் தேதி முதல் மே 11-ம் தேதி வரை 10 நாட்களுக்கு 35,000 கன அடி நீர் இரு நாடுகளுக்கும் மாறி மாறி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த தண்ணீரை பெற வசதியாக வங்கதேச எல்லையிலிருந்து 10 கி.மீ தொலைவில் கங்கை நதியின் கிளை நதியான பகீரதி ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டது. இதன்மூலம் வங்கதேசம் கங்கை நதி நீர் பகிர்வு மூலம் பயனடைந்து வந்தது. இந்த ஒப்பந்தம் என்பது 30 ஆண்டுகளுக்கானது.இதனால் ஒப்பந்த காலம் அடுத்த ஆண்டு முடிவுக்கு வர உள்ளது. தற்போது வங்கதேசம் நம் நாட்டை தொடர்ந்து சீண்டி வரும் நிலையில் அந்த ஒப்பந்தத்தில் முக்கிய மாற்றங்கள் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது நம் நாட்டில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. கூடுதலாக 30,000 முதல் 35,000 கனஅடி தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால் இந்த கங்கை நதி நீர் ஒப்பந்தத்தை நம் நாட்டுக்கு ஏற்ப மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது நடக்கும் பட்சத்தில் வங்கதேசத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.