கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழர்களுக்கு எதிரான வேலையை துவக்கியுள்ளது தமிழர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை காங்கிரஸ் கட்சி பதிவு செய்தது. கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் அங்கு எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 66 இடங்களில் வெற்றி பெற்றது.
காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதனை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்றனர். பிரமாண்டமான முறையில் நடந்த பதவி ஏற்புவிழாவில் இருந்து முதல்வர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் சென்று கலந்துகொண்டனர்.
குறிப்பாக கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அமர திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சென்று தீவிரமாக பிரச்சாரம் செய்தன. குறிப்பாக கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்ற ஒற்றை காலில் நின்றது மட்டுமல்லாமல் திருமாவளவன் கர்நாடகத்திற்கு சென்று தீவிரமாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரித்தார். விதி வீதியாக "காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் ஓட்டு போடுங்கள்", "காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் ஓட்டு போடுங்கள்" என்றெல்லாம் கூவி கூவி வாக்குகளை கேட்டார்.
இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் மக்களுக்கு எதிரான தனது வேலையை காட்டத் துவங்கி விட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நீர்ப்பாசனத்துறை உயர் அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது டி.கே.சிவக்குமார் பேசியதாவது, 'கர்நாடக அரசின் நீர்ப்பாசன திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதியை பெற நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இது தான் நான் உங்களுக்கு விதிக்கப்படும் இலக்கு. மேகதாது, மகதாயி திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்
மேகதாது திட்டத்திற்கு அரசு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கியது. அதை நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு பயன்படுத்தாதது ஏன்?. ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள தீவிரமாக உழைக்க வேண்டும். எனக்கு எந்த விரோதமும் இல்லை. ஆனால் பணிகள் முறையாக நடைபெற வேண்டும். உங்களுக்கு பதவி வழங்கியர்களுக்கு விசுவாசமாக இருந்தால் அதை சகித்துக்கொள்ள மாட்டேன். பிரதமர் உள்பட சம்பந்தப்பட்ட மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து பேசுவோம். இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.
இப்படி கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் விதத்தில் தமிழக விவசாயிகளை தண்ணீருக்கு கண்ணீர் சிந்த வைக்குமாறு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக டெல்டா விவசாயிகள் காவிரி ஆற்றில் வரும் நீரை நம்பித்தான் தாங்கள் வருடத்தில் இருமுறை விவசாயம் செய்கின்றனர், ஆனால் இப்படி மேக்கேதாட்டூவில் அணை கட்டிவிட்டால் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் காவிரி நீர் கேள்விக்குறியாகி விடும் போதுமான அளவிற்கு நீர் கிடைக்காது இதன் காரணமாக தற்பொழுது விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து வருகிறார்கள். இப்படி கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வந்து வைத்துவிட்டு எங்களுக்கு துரோகம் இழைத்து விட்டீர்களே என திமுக கூட்டணியை நோக்கி எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.