24 special

அண்ணாமலைக்கு நடிகர் கொடுத்த முத்தத்தின் பின் உள்ள அரசியல் ..!

Annamalai, rk suresh
Annamalai, rk suresh

வருங்கால முதல்வர் அண்ணாமலை வாழ்க என திடீரென எமோஷனாக முழக்கமிட்டார் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த பாஜக மாநில தலைவரை பார்த்தவுடன் மிகவும் உற்சாகமாக காணப்பட்டார் நடிகர் ஆர் கே சுரேஷ். 


பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் அறுபதாவது குருபூஜை மற்றும் 115 ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் நடந்த குருபூஜை நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் தலைவர்கள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் தொடர்ந்து படை எடுத்து வந்து மரியாதை செலுத்தினர்.

பொதுமக்களும் ஆயிர கணக்கில் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மொத்தத்தில் விழா கோலமாக காணப்பட்டது இந்த குரு பூஜை. பலத்த போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பாஜக தலைவர் அண்ணாமலை மூத்த தலைவர்களான எச்.ராஜா, சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராஹிம் உள்ளிட்டவரும் தேவரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தி வந்தனர். அப்போது வழங்கப்பட்ட திருநிறை அண்ணாமலை நெற்றியில் அழுத்தமாக பட்டை அடித்துக் கொண்டார்.

இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் இதற்கு முன்னதாக பிரதமர் அவர்கள் இந்த நிகழ்ச்சியில்  பங்கு பெறுவார் என்று சலசலப்பு ஏற்பட்டது. இப்படியான நிலையில் அடுத்து வரும் சில நாட்களில் திண்டுக்கல் வரும் பிரதமரை பசும்பொன் அழைத்து வர திட்டமிட்டு உள்ளோம் என அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார். இதன் காரணமாக பாஜகவினர் மட்டுமின்றி ராமநாதபுரம் மாவட்ட மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

இதுகுறித்து அண்ணாமலை தெரிவிக்கும் போது மதுரை விமான நிலையத்திற்கு தேவர் திருமகனாரின் பெயரை சூட்டுவதில் பாஜகவிற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ஆணித்தரமாக குறிப்பிட்டார். அதற்கான நடவடிக்கையை பிரதமர் மூலமாக எடுக்கப்படும் என்று குறிப்பிட்டு பேசினார். மேலும் சமுதாய அமைப்பினரை பிரதமர் வரும்போது நேரடியாக சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டு உள்ளார். 

இதன் மூலம் ஏற்கனவே தமிழகத்தில் பாஜக காலூன்றி விட்டது என கதறும் எதிர்கட்சிகளுக்கு மேலும் ஷாக் கொடுக்கும் விதமாக சமுதாயத் தலைவர்களை பிரதமருடன் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என குறிப்பிட்டது பெரும் ஆளுங்கட்சிக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி இருக்கின்றது. காரணம் வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தேவர் குரு பூஜையை திருவிழாவாக கொண்டாடும் மக்கள் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்பு இருக்கின்றது என இப்போது அரசியல் விமர்சகர் விமர்சனத்தை தொடங்கி இருக்கின்றனர். 

இப்படியான நிலையில்தான், நிகழ்ச்சிக்கு வந்த அண்ணாமலையை நடிகர் ஆர் கே சுரேஷ் வரவேற்று உற்சாகமாக கோஷம் எழுப்பினார். அப்போது வருங்கால முதல்வர் அண்ணாமலை வாழ்க என முழக்கமிட்டு கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். ஆனாலும் அப்படி எல்லாம் சொல்லாதீங்க.. என ஆர்கே சுரேஷின் கையைப் பிடித்து சரி சரி என்பது போல கண்ட்ரோல் செய்தார் அண்ணாமலை. இருந்தாலும் உற்சாகத்தின் உச்சியில் இருந்த ஆர் கே சுரேஷ் வருங்கால முதல்வர் அண்ணாமலை என தொடர்ந்து முழக்கமிட்டார்.

அப்போது ஆதரவாளர்களும் ஆரவாரத்தை எழுப்பினர்.. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் பொதுவாக தமிழ் நடிகர் நடிகைகள், எங்கு பட வாய்ப்பு பறி போகுமோ என்ற எண்ணத்தில் அவ்வளவு சீக்கிரம் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க முன்வருவதில்லை.

இப்படியான நிலையில் தான் மிகவும் தைரியமாகவும் உற்சாகமாகவும்  பிரபல தயாரிப்பாளரம், நடிகருமான ஆர் கே சுரேஷ் பாஜகவுக்கு ஆணித்தரமான ஆதரவை தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கூடுதலாக அண்ணாமலைக்கு இவர் கொடுத்த முத்தம் தான் ஹைலைட்.