24 special

தமிழகம் முழுவதும் பரபரப்பு ரெய்டு! தோண்ட தோண்ட வெளிவரும் பகீர் ஆதாரங்கள்..!

NIA
NIA

தீபாவளிக்கு  முதல் நாள் கோவையில் வெடித்த கார் வெடிகுண்டு வெடித்து தமிழகத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கியது. இந்த வழக்கின் தொடர்ச்சியாக NIA அமைப்பு  பதிவு செய்துள்ள வழக்கு தொடர்பாக ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் உள்ளவர்களின் சந்தேக பட்டியலில் இருப்பவர்களிடம் NIA யே மற்றும் போலீசார் தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றி பலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தமிழ்நாடு மற்றும் சென்னையில் கடந்த மாதம் 10 மற்றும் 15ஆம் தேதிகளில் பல இடங்கள் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தி செல்போன் கார்டுகள், ஐ எஸ் தொடர்புடைய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க்குகள், லேப்டாப்புகள் என்று கைப்பற்றி , கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்திய சூழ்நிலையில் மீண்டும் இந்த வழக்கின் தொடர்ச்சியாக  திருச்சியில் சர்புதீன் மற்றும் சாகுல் அமீது ஆகியோரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி, பென் டிரைவ் செல்போன் மெமரி சிப் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.

மேலும் சென்னை வேப்பேரியில் எஸ். எம்.புஹாரி என்பவர் வீட்டில் உதவி கமிஷனர் ஹரிகுமார் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல பென் டிரைவுகள், செல்போன்கள், கேமராக்கள், ஆவணங்கள் மற்றும் லேப்டாப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

சென்னை ஏழுக்கினறு பகுதியில் உமர் முக்தர், முகமது இசாக் ஆகியோர் வீடுகளிலும் NIAயே மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் பல ஆவணங்களையும், செல்போன்கள், பென் டிரைவுகள் மற்றும்  கணினிகளை கைப்பற்றியுள்ளனர்.   மேலும் இது போன்ற ரெய்டுகள் தொடரும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் இப்படி நூற்றுக்கணக்கான இடங்களில் போலீசார் மற்றும் NIAயே அதிரடி சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றுதல் மற்றும் கைது நடவடிக்கைகளை கண்டு தமிழகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

Gokulakrishnan S