24 special

ராகுல் காந்தியை பங்கம் செய்த ஸ்மிரிதி இராணி... வாய் திறப்பாரா ராகுல்...

Rahul gandhi ,smiriti rani
Rahul gandhi ,smiriti rani

பல கேள்விகளுடன் ஸ்மிருதி ராணி.., பதில் அளிப்பாரா ராகுல் காந்தி? மோடியின் குடும்ப பெயர் குறித்து அதூறாக பேசிய ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி.கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடியை விமர்சிப்பதாக கூறி ஒட்டுமொத்த மோடி சமூகத்தையே ராகுல் காந்தி அவதூறாக பேசினார். இதற்காக குஜராத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. 


அதனைதொடர்ந்து, மக்களவை செயலகம் அவருடைய எ ம்பி பதவியை தகுதி நீக்கம் செய்து அதிரடியாக உத்திரவிட்ட நிலையில், இதை எதிர்த்து நாடாளுமன்றத்திலும், இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ராகுல் காந்தியின் பதவி நீக்கத்தை எதிர்த்தும், அதானி விவகாரத்தை எதிர்த்தும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடியும், அதானியும் ஒன்றாக இருந்த புகைப்படத்தை காட்டி நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பிகிறார். நான் உங்களிடம் ஒன்றை காட்ட விரும்புகிறேன். 

2009 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவும், அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானியும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை காட்டினார். பின்பு  “ராபர்ட் வதேரா, அதானியுடன் கைகோர்த்து இருப்பது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.

“ராகுல் காந்திக்கு அதானியுடன் பிரச்சனை இருந்தால்,  ராபர்ட் வதேரா, அதானியுடன் கைகோர்த்து இருப்பது ஏன்? என செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பினார். மேலும் 

பிரதமர் நரேந்திர மோடியின் மீது, ராகுல் காந்தி எவ்வளவு வன்மத்தை வைத்துள்ளார் என்பது அவருடைய பிரிட்டன் பயணத்தில் வெளிப்பட்டதாக தெரிவித்தார்”.

“பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டு, ஒட்டுமொத்த ஓபிசி சமூகத்தையும் தாக்குவது தான் சரி என்று ராகுல் காந்தி நினைத்ததாக கூறினார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை ராகுல் காந்தி தாக்கி பேசியதாகவும், மே 4, 2019 அன்று பிரதமர் நரேந்திர மோடியின் சக்தியே தனது இமேஜ் என்றும் அந்த பிம்பத்தை சீர்குலைப்பதை உறுதி செய்வதில் பிரதமர் மோடியே பணியாற்றுவார் என்றும் ராகுல் காந்தி கூறியதாக தெரிவித்தார்”. 

மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை கிழித்து எறியுவதாக ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருக்கிறார். பிரதமர் மோடியின் உருவத்தை கிழித்து எறிய ராகுல் காந்தியால் ஒருபோதும் முடியாது, ஏனென்றால்  “நரேந்திர மோடியின் மிகப்பெரிய சக்தியே இந்திய மக்கள் தான்” என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார்.