24 special

நீதிமன்றத்தில் அழாத குறையாக கெஞ்சும் செந்தில் பாலாஜி தரப்பு...! வெளிவந்த பரபர தகவல்...!

senthil balaji
senthil balaji

சட்டவிரோத பண பரிமாற்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டு நான்கு மாதங்களாக செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வருகிறார், செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து எவ்வளவு முயற்சி செய்து விட்டனர் இதுவரை செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு கிட்டத்தட்ட எட்டு முறை இதுவரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா அவர் வெளியில் வருவதற்கு வாய்ப்புகள் இருக்குமா என சில சட்ட வல்லுனர்களிடம் கேட்ட பொழுது, 'செந்தில் பாலாஜியின் வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 3000 பக்க குற்றத்தை மற்றும் அமலாக்கத்துறை கையில் சிக்கிய ஆவணங்கள் அனைத்தையும் வைத்து பார்க்கும் பொழுது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இல்லை' என கூறுகின்றனர். மேலும் இது குறித்து அரசியல் விமர்சகர்களிடம் கேட்ட பொழுது 'செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருக்கும் வரை செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் தலைமறைவாக இருக்கும் வரை செந்தில் பாலாஜி ஜாமீன் என்பதை நினைத்து பார்க்க முடியாது!


செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவியை பறித்துவிட்டு, செந்தில் பாலாஜி தம்பி அசோக் அமலாக்கத்துறை வசம் சரணடைந்தால் மட்டுமே தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் என்பதை எதிர்பார்க்க முடியும். அப்பொழுதும் அமலாக்கத்துறை மனது வைத்தால் தான் ஜாமின் கிடைக்கும்' என வேறு கூறுகின்றனர் அரசியலுக்கு விமர்சகர்கள். இந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது, இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த பொழுது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கிட்டத்தட்ட செந்தில் பாலாஜிக்காக கெஞ்சும் நிலைக்கு வந்து விட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விசாரணையின் போது வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த அறிக்கையை குறிப்பிட்டு வாதிட்டுள்ளார், அப்பொழுது என் ஆர் இளங்கோ குறிப்பிடும் பொழுது செந்தில் பாலாஜி அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் நீதிமன்றமே ஏதாவது ஒரு மருத்துவரை வைத்து நியமித்து செந்தில் பாலாஜி உடல்நிலையை பரிசோதித்து அதன் பிறகு ஜாமீனை பரிசீலியுங்கள் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.இது மட்டுமல்லாமல் விசாரணையின் போது சிறை மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனையில் குறிப்பிட்ட சிகிச்சை வசதி இல்லை செந்தில் பாலாஜியின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசம் அடைகிறது அவரை வெளியில் அழைத்து வந்து ஒரு நல்ல வசதிகள் நிரம்பிய மருத்துவமனையில் வைத்து பார்த்தால் அவரது உடல்நிலை தேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் வேறு கூறியுள்ளார். 

மேலும் செந்தில் பாலாஜியின் கால் மரத்துப் போவது இப்பொழுது ஏற்பட்ட குறைபாடு அல்ல செந்தில் பாலாஜிக்கு எப்பொழுது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தார்களோ அப்பொழுது முதலே இந்த பிரச்சனை இருந்து வருவதாக குறிப்பிட்டு அந்த வாதத்தின் போது எடுத்துரைத்தார். இது மட்டுமல்லாமல் மேலும் என் ஆர் இளங்கோ வாதிடும் பொழுது உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அது சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் 45 வது பிரிவுக்கு பொருந்தாது என வாதிட்டு செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் அமலாக்கத்துறை வசம்தான் இருக்கிறது அவரால் எப்படி சாட்சியங்களை கலைக்க முடியும்? அவர் இப்பொழுது இருக்கும் உடல் நிலைக்கு சாட்சியங்களை கலைப்பது என்பது வாய்ப்பே கிடையாது எப்படியாவது அவருக்கு ஜாமீன் கொடுங்கள் என வாதிட்டுள்ளார். எப்படியும் ஜாமீன் கிடைத்தால் போதும் என்கின்ற நிலைக்கு செந்தில்பாலாஜி தரப்பு வந்துவிட்டது, ஆனால் இதற்கான தீர்ப்பை நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.