24 special

முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லாத காவல்துறை...!யார் மதிப்பார்கள்

Mk stalin,tamilnadu police
Mk stalin,tamilnadu police

முதல்வர் ஸ்டாலின் உத்தரவை அவரது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை கடைபிடிக்காமல் இருப்பதுடன் அடுத்த சர்ச்சையில் சிக்கியது கடும் விமர்சனத்தை உண்டாக்கி இருக்கிறது.கடந்த வருடம் பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் ஐந்து பெண் கவுன்சிலர்கள் கலந்து கொள்ளாமல் அவர்களுக்கு பதிலாக அவர்களது கணவர்களை கலந்து கொள்ளவைத்து ஒவ்வொருவரும் தலா 2000 ரூபாய் பயணப்படி வாங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பல கவுன்சிலர்கள் மீதும் புகார்கள் எழுந்த வண்ணமே இருந்தது. பணியை மேற்கொள்ளும் கவுன்சிலர்கள் அதிகாரிகள் தங்களது குடும்பங்களை பணிகளில் ஈடுபட வைப்பதாகவும் கமிஷன்கள் அதிகளவில் பெறுகிறார்கள் எனவும் புகார்கள் அடுக்கப்பட்டன.


இதனால் கடும் கோபம் அடைந்த முதல்வர் மு க ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். ஒரு பொறுப்பு உங்களிடம் கொடுக்கப்படுகிறது என்றால் அதனை பாதுகாத்து நமது கடமைகளை திறம்பட செய்ய வேண்டும்.

நம்மிடம் கொடுக்கப்படும் பதவிகளும் பொறுப்புகளும் முக்கியமில்லை அதை எவ்வளவு கவனமாக கையாளுகிறோம் கடமைகளை ஆற்றுகிறோம் என்பதே முக்கியம், புதிதாக பொறுப்பில் இருக்கும் பெண்கள் தங்கள் பணிகளை செய்ய தயக்கமும் பயமும் காட்டாமல் உங்களுக்கு கொடுக்கப்படும் பொருட்களை நீங்களே கையாள வேண்டும். எந்த ஒரு பொறுப்பின்மை, ஒழுங்கீன தன்மை தலை தூக்கினால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கையை மேற்கொள்வேன் என்பதை கூறிக் கொள்கிறேன் என்று ஆவேசமாக மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளிடம் உரையாடினார். 

சர்வாதிகாரியாக மாறுவேன் என்று கூறிய முதல்வரது நேரடி கட்டுப்பாட்டில் காவல்துறை வருகிறது. இருப்பினும் சமீபகாலமாக காவல்துறையில் பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்கள் மற்றும் மக்கள் பலர் பாதிப்படையும் சம்பவங்கள் அரங்கேறி வருவது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறை லாக்கப் மரணங்கள்!  காவல்துறை அதிகாரி கைதியின் பல்லை பிடுங்கியது போன்ற சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து! திருச்சியில் ஒரு காவல் அதிகாரி பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டு whatsappலும் அவருக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக புகார் ஒன்றை கூறிய அந்தப் பெண் அழுத நிலையில் பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

மேலும் ஒரு பெண் போலீஸ் ஒரு கடைக்கு சென்று பிரட் ஆம்லெட் ஓசியில் தர வேண்டும் என மிரட்டிய சம்பவம் வேறு காவல்துறையை மக்கள் மத்தியில் தலைகுனிய வைத்துள்ளது.கூடுவாஞ்சேரி பகுதியில் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் விஜயலட்சுமி மற்றும் ஜெயமாலா இருவரும் இரவு பணிகளை மேற்கொண்டு விட்டு அருகில் இருந்த தேநீர் கடையில் தேனீர் அருந்திவிட்டு அதற்கு பணம் தர மறுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. புகாருடன் இந்த விவகாரம் நிற்காமல், காவல்துறையினர் தேனீர் அருந்தி அதற்கு பணம் தர மறுத்த வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அந்த வீடியோ பதிவில் கடைக்காரரிடம் அந்த போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார், உணவக ஊழியரிடம் கடையின் உரிமையை ரத்து செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

இதற்குப் பிறகு தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமலராஜ் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு விஜயலட்சுமி மற்றும் ஜெயமாலா இருவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளார். முறைகேடுகள் மற்றும் ஒழுங்கினங்கள் தலை தூக்கினால் நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று முதல்வர் கூறியதை நினைவுபடுத்தி எப்போ முதல்வரே சர்வாதிகாரியாக மாறுவீர்கள் என எதிர்கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும் கேள்வி எழுப்பிவருகின்றனர். இப்படி முதல்வரது கட்டுப்பாட்டில் வந்த காவல்துறையிலே இவ்வளவு ஒழுங்கினங்கள் மற்றும் அதிகார மீறல்கள் நடைபெற்று வருவது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் காவல்துறை முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதால் அவரே இதனை தட்டி கேட்காமல் இருக்கிறாரோ?

அதோடு சர்வாதிகாரியாக மாறுவேன் என்று கூறுவதெல்லாம் வெறும் மேடைக்காக மட்டும் தானா என இணையவாசிகள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையே முதல்வர் பேச்சை கேட்கவில்லை என்றால்  யார் தான் மதிப்பார்கள் எனவும் திராவிட மாடல் கனவு என்பது இரண்டாக போனதாக விமர்சனங்கள் அதிகரிக்க தொடங்கி இருக்கின்றன.