24 special

மோடி சொன்ன ஒரு வார்த்தை ! பாகிஸ்தானை வைத்து சொல்லி அடித்த இந்தியா! சீனா கதை ஓவர்! ஒரே நாளில் ஏற்பட்ட தலைகீழ் திருப்பம்!

modi ,
modi ,

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிரான தனது பதிலடி மூலம் இனி இந்தியாவில் தீவிரவாதம் சகித்துக்கொள்ளப்படாது என்ற வலுவான மெசேஜை மத்திய அரசு உலகிற்கு தெளிவாக அனுப்பி உள்ளது. தீவிரவாதிகள் உள்ள கடைசி கட்ட தலைகளை மட்டும் குறி வைக்காமல்.. நேரடியாக தீவிரவாதிகளின் தலைமை இடங்களை, அவர்களின் தலைகளை குறி வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 



இந்தியாவின் ஆயுதப் படைகள் மூலம் கவனமாகத் திட்டமிடப்பட்டு, எந்த குறையும் இல்லாமல்  செயல்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரிட்டது.  இந்தியாவின் தாக்குதல்கள் முறையாக கணக்கிடப்பட்டது. பல பரிமாணங்கள் கொண்டது மற்றும் சரியான நேரத்தில் செய்யப்பட்டது. மே 10 அதிகாலையில், பாகிஸ்தானின் முக்கியமான விமானத் தளங்களில் 90 நிமிட துல்லியமான விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. எதிரி பிரதேசத்திற்குள் ஆழமாகத் சென்று தாக்கி பாகிஸ்தானை நிலை குலைய வைத்தது. இது பாகிஸ்தானின் வழக்கமான போர் தளவாடங்களை அழித்தது.மேலும் பாகிஸ்தானை ராஜதந்திர ரீதியாக ஓரங்கட்டி, ராணுவ ரீதியாக முடக்கி, சில நாட்களுக்குள்  அவர்களை அவசரமாக போர் நிறுத்தத்தை நாட வைத்தது..அடுத்தடுத்து விழுந்த அடியால் பாகிஸ்தான் கதற தொடங்கியது. பதற்றம் உச்சமடைந்த நிலையில் பாகிஸ்தான் போரை நிறுத்தும்படி நம் நாட்டிடம் கெஞ்சியது. அதன்பிறகு நம் நாடும் போரை நிறுத்துவதாக அறிவித்தது. தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது. ‛ஆபரேஷன் சிந்தூர்' பற்றி பிரதமர் மோடி மக்களுக்கு எடுத்துரைத்தார்.


அப்போது பிரதமர் மோடி, ‛‛அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது. பயங்கரவாதமும், வர்த்தகமும், பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக கொண்டு செல்ல முடியாது. பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் செயலிழந்து கீழே விழுந்ததை உலகம் கண்டது. நம் நாட்டின் வலுவான வான் பாதுகாப்பு அமைப்பு அவற்றை வானத்திலேயே அழித்துவிட்டது. பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்க நமது நாட்டின் முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளித்தோம். 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் மூலம் நமது வீரர்கள் ஈடு இணையற்ற வீரத்தைக் காட்டியுள்ளனர் என்றார்.


பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பேச்சை தொடர்ந்து ஜே 10 எனும் போர் விமானத்தை தயாரிக்கும் சீனாவின் அவிக் செங்டு ஏர்கிராப்ட் என்ற நிறுவனத்தின் பங்குகளின் விலை மளமளவென நேற்று சரிய தொடங்கியது. அவிக் செங்டு ஏர்கிராஃப்ட் பங்குவின் விலை நேற்று இண்ட்ராடே வர்த்தகத்தில் 9.31 சதவீதம் வரை சரிந்து 86.93 யுவானாக இருந்தது. அதேவேளையில் இந்திய பாதுகாப்பு துறை சார்ந்த பங்குகளின் விலை என்பது அதிரடியாக உயர்ந்தது. இதற்கு பிரதமர் மோடி சொன்ன ஒரு வார்த்தை தான் காரணமாகும்.


அதாவது நம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றியபோது, ‛‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்தது'' என்று கூறினார். இதுதான் சீனாவின் ஜே 10 போர் விமான நிறுவனத்தின் பங்குவின் மதிப்பை சரிய வைத்துள்ளது. ஏனென்றால் பாகிஸ்தான் சீனாவின் ஜே 10 போர் விமானத்தை பயன்படுத்தி வருகிறது. இந்த விமானத்தை நம் நாட்டுக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் பயன்படுத்தியது. இதனை அந்த நாட்டின் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் உறுதி செய்திருந்தார்.


இப்படியான சூழலில் தான் பாகிஸ்தானுக்கு எதிரான ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை வெற்றி என்று பிரதமர் மோடி கூறியதால் ஜே 16 ரக போர் விமானத்தை தயாரிக்கும் சீனாவின் அவிக் செங்டு ஏர்கிராப்ட்டின் பங்குகளின் விலை அதிரடியாக சரிந்தது. முன்னதாக கடந்த 7 ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நம் நாடு தொடங்கிய பிறகு தொடர்ந்து சில நாட்கள் ஜே 10 போர் விமானத்தின் பங்குகளின் விலை என்பது கிடுகிடுவென அதிகரித்தது.


இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஜே 10 விமானத்தை பயன்படுத்தும் என்பதால் அந்த பங்குகளின் விலை 60 சதவீதம் வரை எகிறியது. ஆனால் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நம் நாடு வென்றதால் ஜே 10 விமான நிறுவனத்தின் பங்குகள் சரிய தொடங்கி உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.