24 special

அய்யய்ய... அட நீங்க வேற...! நாங்க எங்க நாட்டுக்கு கூப்பிடவே இல்லை.. கை விரித்த கத்தார்.. அசிங்கப்பட்ட மதபோதகர்!


உலக கோப்பை கால்பந்து போட்டி கோலாகலமாக கத்தாரில் தொடங்கி நடைபெற்று வருகிறது, இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் இருந்து தப்பி சென்று வெளிநாட்டில் தஞ்சம் புகுந்து இருக்கின்ற மத போதகர் சாகிர் நாயிக் கலந்து கொண்டது இந்தியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.


இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் தொடங்கி இந்தியாவில் உள்ள சிலர் என கத்தார் ஜாஹிர் நாயிக்கை கத்தார் அங்கிகரித்து விட்டது என்றெல்லாம் பாராட்டு பத்திரம் வாசித்தன

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தியாவின் கண்டனத்தை நேரடியாக தூதரகம் மூலம் பதிவு செய்தது அத்தனைதான் பாக்கி உடனடியாக வழிக்கு வந்த கத்தார், நாங்கள் சாகிர் நாயிக்கை அழைக்கவே இல்லை என பல்டி அடித்து இருக்கிறது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த மதபோதகரான ஜாகிர் நாயக், 'பீஸ் டிவி' மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக மத  பிரசாரம் செய்து வந்தார்.

இத்துடன்,  இளைஞர்களை பயங்கரவாத செயல்களுக்கு துாண்டியது உள்ளிட்ட காரணங்களால், இவரது  ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு 2016ல் மத்திய அரசு தடை விதித்தது.சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட இந்த தடை, 2021ல் மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்தியா வில் இருந்து தப்பி சென்ற ஜாகிர் நாயக் தற்போது தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில் அரசு ஆதரவுடன் வசித்து வருகிறார். அவரை நாடு கடத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய கிழக்கு நாடான கத்தார் தலைநகர் தோஹாவில் உலகப் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் கடந்த 21ல் துவங்கின. துவக்க விழாவில் ஜாகிர் நாயக் பங்கேற்றார். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது .

'கத்தாரின் இந்த செயலால், உலக கோப்பை போட்டியை காண, இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கத்தார் செல்லஇருந்ததை ரத்து செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுஉள்ளது' என அறிக்கை வெளியிடப்பட்டது.

இதற்கு உடனடியாக பதில் அளித்தது கத்தார்,  உலகக் கோப்பை போட்டியின் துவக்க விழாவில் பங்கேற்க, ஜாகிர் நாயக்குக்கு அரசு சார்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அழைப்பும் விடுக்கப்படவில்லை.

இந்த விவகாரத்தில் இந்தியா - கத்தார் நல்லுறவை சீர்குலைக்கும் நோக்கத்தில் சில மூன்றாம் நாடுகள் செயல்பட்டுள்ளன என்றும் இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் இந்தியாவின் நல்லுறவே முக்கியம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தற்போது கத்தார் இந்தியாவிற்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்து இருப்பதை பார்த்து பலரும் இது புதிய இந்தியா? அது கத்தாருக்கு நன்றாக தெரியும், ஏற்கனவே இந்தியாவின் உள் நாட்டு விவாகரத்தில் கருத்து தெரிவித்த அப்போதைய மலேஷியா பிரதமர் மகதீர் பதவி இழந்தது தொடங்கி மலேஷியாவில் இருந்து பாமாயில் இறக்கு மதிக்கு இந்தியா தடை விதத்த உடன் மலேஷியா பொருளாதாரம் ஆட்டம் கண்டது வரை அனைத்தையும் உலக நாடுகள் அறியும்.

இந்தியா நாளை பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு போன்றவற்றை இறக்குமதி செய்யும் அளவை குறைத்தால் பல அரபு நாடுகளின் நிலை என்ன ஆகும் என்பது கண் முன்னால் வந்து போகும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.