
இந்தியாவில் தற்போது சூழ்நிலையில் இந்தியாவில் வெளிநாட்டு சக்திகள் ஊடங்கங்கள் மற்றும் தேசத்திற்கு எதிராக உள்ள அரசியல்வாதிகள் மூலம் நுழைந்துள்ளார்கள். இந்தியாவை சீர்குலைக்க முயற்சியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் சொரோஸ், அமெரிக்காவின் சில ஏஜென்சிகள் இருக்கின்றன. OCCRP பெரிய செய்தி போர்டல். ஆகியோருடன் அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் உலகின் முன்னணி ஊடகங்களில் ஒன்றான பிபிசி, பத்திரிகை தர்மம், பேச்சு சுதந்திரம், நீதி, நேர்மை பற்றி நீட்டி முழங்கும் வழக்கம் கொண்டது. உலகுக்கே தாங்கள் தான் வழிகாட்டி என்பது போல், அவ்வப்போது பெருமை பீற்றிக்கொள்வதும், கிழக்கத்திய நாடுகளை மட்டம் தட்டிப் பேசுவதும் பிபிசிக்கு வழக்கமான ஒன்று. தொடர்ந்து இந்தியாவை பற்றி விமர்சிப்பதும் இந்தியாவில் கிளர்ச்சியை தூண்டும் வகையிலும் செய்திகள் பரப்புவத்தை வழக்கமாக கொண்டுள்ளது. ஏற்கனவே எதோ ஊடகங்களுக்கு தலைவன் என்ற தோரணையில், இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியிடம் பேட்டி எடுத்தார், அதன் நட்சத்திர தொகுப்பாளர் ஸ்டீபன்.அவரது மட்டம் தட்டும் நோக்கம் கொண்ட கேள்விக்கு நெத்தியடி பதில் தந்தார், ஹர்தீப் சிங் புரி.
மேலும் இந்தியாவில் எப்படியாவது எதாவது செய்துவிடவேண்டும் என பாஜக ஆளாத மாநிலங்களில் மோடிக்கு எதிராக புரட்சி செய்ய தூண்டும் வகையில் சில ஊடகங்கள் வேலை செய்து வருவதாக NIAவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதில் முன்னணியில் இருப்பது தமிழகம் தானம்.
இதன் ஒருபகுதியாக தான் சில நாட்களுக்கு பிபிசியில் ஒரு கட்டுரை வந்தது அதில்இந்தியாவில் ஜென் ஸி (Gen Z) தலைமுறையினரின் எண்ணிக்கை மிகப்பெரியது. இவர்கள் துறுதுறுப்பானவர்களாகவும், ஒருவருக்கொருவர் இணைக்கப்பட்டும் உள்ளனர். நாட்டின் மக்கள் தொகையில் கால்பங்காக இருக்கும் கிட்டத்தட்ட 25 வயதுக்குட்பட்ட 370 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தான் இவர்கள்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அவர்கள் அரசியல், ஊழல் மற்றும் சமத்துவமின்மை பற்றித் தொடர்ந்து அறிந்தே இருக்கிறார்கள்.இருப்பினும், வீதியில் இறங்கிப் போராடுவது என்பது ஆபத்தானது மற்றும் தங்களுக்கு தொடர்பில்லாதது என அவர்கள் உணர்கிறார்கள். என இளைஞர்களை தூண்டும் விதமாக கட்டுரையை வெளியிட்டிருந்தது இது பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கின.
மேலும் இதே போன்ற கட்டுரைகள் கடந்த சிலமாதங்களாக சில ஊடகங்களும் வெளியிட்டன. இதனை தொடர்ந்து விஷயத்தை கையில் எடுத்துள்ளது NIA. குறிப்பாக தமிழ் மீடியாக்களில் உள்ள சில முக்கிய எடிட்டர்களை வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளது. அவர்களின் சொத்துக்கள் வங்கி பரிமாற்றம் அவர்களின் உறவினர்கள் உள்ளிட்டவர்களையும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
நமது நாட்டில் உள்ள பன்முகத் தன்மையை நம்மிடையே இருக்கும் வேறுபாடுகளாக சித்தரித்து பிரிவினையை உருவாக்க முயல்கிறார்கள். ப. அப்படிப்பட்ட சக்திகளை அரசு உடனுக்குடன் களையெடுக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. மேலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தூண்டிவிட முயற்சிப்பது, பலத்தை காட்டுவது என்பன போன்ற விஷயங்களை குறித்தும் விசாரிக்க தொடங்கி உள்ளது.
அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் அதிக அளவில் தேசத்திற்கு எதிரான குரல்கள் எழுவதால் அதையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது உளவுத்துறை. இதில் 7 அரசியல் தலைவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் இருந்து வந்த நிதி தமிழக பத்திரிக்கையாளர்களுக்கு நிதி வந்தது என தகவல்களும் உளவுத்துறைக்கு கிடைத்துள்ளதால் நிதி பெற்று பத்திரிக்கையாளர்கள் கதற ஆரம்பித்துள்ளார்கள்
