24 special

கருணாநிதி ஊரிலா இது நடக்க வேண்டும்? வேங்கைவயல்,வேடசந்தூரை தொடர்ந்து திருவாரூர்! திருமாவை தேடும் நெட்டிசன்கள்!

MKSTALIN,THIRUMAVALAVAN
MKSTALIN,THIRUMAVALAVAN

தமிழகத்தின் விளம்பர மாடல் ஆட்சி எப்போது தான் முடிவுக்கு வரும் என அனைவரும் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக திருக்குறளை சொல்ல தெரியாதவர் பக்கத்தில் திருவள்ளுவரை உட்கார வைத்து ஒரு AI  வீடியோவை வெளியிட்டி அதை பார்த்து ரசித்து கொண்டிருந்த முதல்வர் அவரின் தந்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரான திருவாருரில் ஒரு தொடக்கப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டுள்ளது. வேங்கை வயல் வேடசந்தூர், தற்போது திருவாரூர் என திராவிட மாடல் ஆட்சியில் தொடர்கதையாகி வருகிறது. எப்போது பார்த்தாலும் வீடியோ ஆடியோ திமுக உறுப்பினர் சேர்க்கை என பிசியாகி உள்ளார்  முதல்வர் ஸ்டாலின்.அதனால் அரசு நிர்வாகமும் முடங்கி போயுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். 


இதற்கிடையே திருவாரூர் காரியாங்குடியில் ஊராட்சியில் செயல்பட்டு வருகிறது ஒன்றிய துவக்கப்பள்ளி.. இங்கு 14 மாணவியர் உட்பட, 31 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியின் ஒரே ஆசிரியர் அன்புச்செல்வி, பொறுப்பு தலைமையாசிரியராக பணிபுரிகிறார்.கடந்த 11ந் தேதி அதாவது வெள்ளிக்கிழமை சாயங்காலம், பள்ளி முடிந்ததுமே மாணவர்கள் வீட்டுக்கு சென்றனர்... பிறகு சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், நேற்று திங்கட்கிழமை காலை 8 மணி அளவில் காலை உணவு திட்டத்திற்காக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர்.. அப்போது சமையலறை உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்..

அப்போதுதான், மாணவர்களின் குடிநீர் தொட்டியின் மூடியும் திறந்து கிடந்ததை கண்டு சந்தேகம் அடைந்து, உள்ளே எட்டிப்பார்த்தனர்.. அங்கே மனித கழிவுகள் மிதந்தை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிச்சனுக்கு வந்த ஊழியர்கள்தான் இதை முதலில் பார்த்து, பொறுப்பு தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.. அவர், கல்வி உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார். அவர்கள், திருவாரூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தனர். இதற்கு பிறகே வட்டார கல்வி அலுவலர் அறிவழகன், தாலுகா போலீசார் பள்ளிக்கே நேரடியாக வந்து விசாரணையை மேற்கொண்டனர்.. மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது... அந்த நாய், பள்ளி அருகே உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து குரைத்ததோடு அங்கேயே படுத்தும் கொண்டது..

பள்ளிக்கு உள்ளேயே மது அருந்தியிருக்கிறார்கள்.. கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட கோழி, கீரிப்பிள்ளையை போதையிலேயே சமைத்து சாப்பிட்டுள்ளனர்.. போதை தலைக்கேறியதால், குடிநீர் தொட்டியில் மனித கழிவையும் கலந்துள்ளனர்.. தற்போது விசாரணைக்குள்ளாகியிருக்கும் விஜயராஜ், விமல்ராஜ் இருவருமே, திருவாரூர் டிஎஸ்பி அலுவலக போலீஸ்காரரின் சகோதரர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. பள்ளி கல்வி துறை அமைச்சர் உதயநிதி ரசிகர் மன்ற தலைவராக செயல்பட்டால் இப்படித்தான் நடக்கும் என மக்கள் புலம்ப ஆர்மபித்துவிட்டார்கள். 

இது குறித்து பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் அவர்கள் கூறியதாவது : பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி முதல், பச்சிளம் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் குடிநீர் தொட்டி வரை சமூக விரோதிகளால் மலம் கலக்கப்படும் அவலம் தொடர்ந்து வரும் நிலையில், இது குறித்து எப்போது வாய் திறப்பார் மாண்புமிகு முதல்வர் திரு. முக ஸ்டாலின் அவர்கள்? சட்டம் ஒழுங்கைச் சீரழித்து சமூக விரோதிகளின் அழிச்சாட்டியத்தை நிலைநாட்டுவது தான் திராவிட மாடல் ஆட்சியா?தொடக்கப்பள்ளி சிறுவர் சிறுமியரின் உயிரின் மீதும், சமூக நீதியின் மீதும் சிறிதும் அக்கறை இருந்தால், உடனடியாக தீவிர விசாரணை நடத்தி குற்றம் புரிந்த சமூக விரோதிகளைக் கைது செய்ய வேண்டும் என 

திராவிடமாடல் அரசை வலியுறுத்துகிறேன் என கண்டனத்தை தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி கட்சிகள் இதுகுறித்து ஒரு கண்டனத்தை தெரிவிக்கவில்லை . குறிப்பாக நெட்டிசன்கள் திருமாவளவனை தேடிவருகிறார்கள்.