24 special

நேரம் பார்த்து சிக்கிய ஜாக்டோ–ஜியோ.. அப்பான்னு நாடகமா போடுற இந்தா புடி! முடிந்தது திமுக சோலி

MKSTALIN
MKSTALIN

தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமைப்பான ‘ஜாக்டோ–ஜியோ’ தி.மு.க. ஆதரவாளர்களால் நிரம்பிய சங்கம் என்ற குற்றசாட்டுகள் பொதுவாக முன்வைக்கப்படுகிறது. அதிமுக ஆட்சி இருந்தால் தொடர் போராட்டங்கள், நடைபெறும் தேர்தல் வரை நீடிக்கும், மேலும் அவர்களின் ஓட்டுகள் மொத்தமாக திமுகவுக்கு தான் விழும். என்பது அனைவரூக்கும் தெரிந்த ரகசியம். இருந்தும், தி.மு.க. ஆட்சியை எதிர்த்து காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்போவதாக அறிவித்தபோதே மக்களிடையே  சந்தேகம் எழுந்தது — “உண்மையிலேயே போராடுவார்களா?” என்று. ஜாக்டோ–ஜியோ? ஆளுங்கட்சிக்கு  திமுகவின் அடிவருடிகளாக மாறிய பிறகு, போராட்டம் என்பதே ஒரு நாடகம் என்பதை இப்போது மீண்டும் நிரூபித்துள்ளனர்.என பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 


எதிர்பார்த்தது போலவே, காலவரையற்ற வேலைநிறுத்தம் தற்போது ‘வாபஸ்’ வாங்கப்பட்டுள்ளது.“நான் அடிப்பது போல அடிக்கிறேன்; நீ அழுவது போல அழு” — இந்த பழமொழிக்கே நேரடி உதாரணமாக ஜாக்டோ–ஜியோவின் இந்த நாடகப் போராட்டம் அமைந்துள்ளது. மேலும் இதை பெரிய அறிவிப்பாக ஊடகங்கள் 3 மணி நேரம் இந்த செய்தியைபோட்டு காட்டியது. திராவிட நாயகன் என ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் முதல்வரை புகழ்ந்து தள்ளி சுவீட்களை வழங்கி தீபாவளி போல் கொண்டாடினார்கள். அரசு ஊழியர்கள் குறிப்பாக  அரசு ஆசிரியர்கள் மீது பொதுமக்கள்  அதிருப்தியில் தான் உள்ளார்கள். அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதற்கு காரணம்யார் என்று அனைவருக்கும் தெரிந்தே. 

இந்த நிலையில்  தேர்தல் நெருங்கும் சமயங்களில் போராட்டம், பேச்சுவார்த்தை, சில வாய்மொழி வாக்குறுதிகள், பின்னர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாக்குகளை அறுவடை செய்வது — இது முன்னாள் முதல்வர் கருணாநிதி பயன்படுத்திய பழைய அரசியல் தந்திரம்.

அதே திரைக்கதை, அதே காட்சிகள், இப்போது நாயகன்  மட்டும் மாறி ஸ்டாலின்.

போராட்டக்காரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது போல நடத்தி, ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ என்ற பெயரில் ‘அல்வா’ கொடுக்கப்பட்டுள்ளது.இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும்?எப்படி அமல்படுத்தப்படும்?நிதி ஒதுக்கீடு எங்கே? எந்தக் கேள்விக்கும் தெளிவான பதில் இல்லை.மேலும், தொழிற்சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்கள் அனைத்தும் 2026 ஜூலை மாதம் தான் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதாவது சட்டசபை தேர்தல் முடியும் வரை பிரச்சினையை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது தான் திட்டம்.

டாப்ஸ் என் என்று பெயர் வைத்திருக்கக்கூடிய ஓய்வூதிய திட்டம் என்பது ஓய்வூதிய திட்டமே அல்ல. அது ஒரு சிறுசேமிப்பு திட்டம். சிறுசேமிப்பு திட்டம் கூட ஒரு அஞ்சல் துறையிலேயோ ஒரு வங்கியிலேயோ சிறுசேமிப்பு போட்டால் அவர்கள் வட்டியை கொடுப்பார்கள். அதுபோன்ற வட்டியை கூடம் கொடுக்காமல் இவர்கள் எப்படி அரசு ஊழியர்களிடம் இருந்து சுரண்ட முடியும் என்று ஒரு விஞ்ஞான பூர்வமான ஒரு கணக்கீடை செய்து 8 லட்சம் பேருடைய வயிற்றிலே அடிக்கப்பட்டிருக்கிறது. இது ஓய்வுதிய திட்டமே அல்ல. ஓய்வூதிய திட்டம் என்பது அரசு பணியாளரிடையே இருந்து ஒரு ரூபாய் கூட வாங்காமல் கொடுப்பதுதான் ஓய்வுதியம். 2003க்கு முன்புர லட்சம் பேர் அப்படித்தான் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தி.மு.க. மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால், 2021ல் கொடுத்த வாக்குறுதிகளுக்கு என்ன கதி ஆனதோ, அதே நிலை தான் இப்போது கொடுத்த உறுதிமொழிகளுக்கும்.ஆட்சியில் அமரவில்லை என்றால்?“அடுத்து வரும் ஆட்சியாளர்கள் பாடு… ஜாக்டோ–ஜியோ பாடு” என்று தப்பித்து விடும் கணக்கு.எப்படி பார்த்தாலும்,பயன் அடைந்தது தி.மு.க.ஏமாந்தது அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்.அரசியலில் மீண்டும் ஒருமுறை,வாக்குறுதி – நாடகம் – வாக்கு அறுவடைஇந்த மூன்றே நடந்துள்ளது.