24 special

இந்த நடிகர் அரசியலுக்கு வந்தா நல்லா இருக்கும்!!! அதிமுக தலைமை இவரிடம் செல்கிறதா...

ajith ,admk
ajith ,admk

சினிமாவில் ஒரு பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பல நடிகர்கள் பொது அரசியலுக்கு வருவது என்பது ஒரு டிரெண்டாகவே மாறிவிட்டது. முதலில் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து சூப்பராக பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல புகழை பெற்று அதன் பிறகு அரசியலுக்கும் வந்து பல நல்ல விஷயங்களை செய்து வந்தவர் எம்ஜிஆர்!! இவருக்குப் பிறகு சினிமாவில் இருந்து அரசியலுக்கு ஜெயலலிதா வந்தார். இவர்கள் இருவருமே சினிமா மற்றும் அரசியல் ஆகிய இரண்டிலுமே அதிக அளவு மக்கள் மனதில்  இடத்தைப் பிடித்தவர்களாக இருந்தனர். 


அதன் பிறகு கடந்து 2005 ஆம் ஆண்டில்  சினிமாவில் இருந்து அரசியலுக்கு விஜயகாந்த் வந்தார். இவருக்கு சினிமாவில் இருந்த வரவேற்பு அரசியலில் கிடைக்கவில்லை என்றே கூறலாம். அதன் பிறகு உடல்நிலை காரணமாக அரசியலில் பெற்று விலகிய இருந்து தற்போது சமீபத்தில் இறந்துவிட்டார். இவரைத் தொடர்ந்து அதன் பிறகு கமலஹாசன் 2018 ஆம் ஆண்டில் அரசியலுக்கு வந்தார். இவருக்கும் சினிமாவில் இருந்த அளவிற்கு வரவேற்பு அரசியலில் கிடைக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து மக்கள் மத்தியில் இடம்பெற வேண்டும் என்று அரசியல் வாழ்வில் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்.

இவரைத் தொடர்ந்து இப்போது நடிகர் விஜய்யும் கடந்த பிப்ரவரி மாதம் அரசியலுக்கு வந்து தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிட்டுள்ளார். வரப்போகும் 2026ம் ஆண்டில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், கடைசியாக இரண்டே திரைப்படங்கள் மட்டும் நடித்த முடித்து அதன் பிறகு முழுமையாக அரசியலையே கவனிக்க போவதாகவும் அறிவித்ததோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அவரின் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். மேலும் சமீபத்தில் கூட நடிகர் விஷாலின் அரசியலுக்கு வரப்போவதாக  அறிவுத்திருந்தார். இது குறித்த செய்திகளும் சமீபத்தில் வெளியாகி வைரலாக ஆனது. மேலும் ஏற்கனவே குஷ்பூ, ரோஜா, சரத்குமார் மற்றும் ராதிகா போன்ற பல திரையுலக பிரபலங்கள் அரசியலில் இருந்து வருகின்றனர். 

இந்த நிலையில் தொடர்ந்து பல நடிகர்கள் அரசியலுக்கு வந்து கொண்டு இருக்கும் சமயத்தில் பிரபல நடிகர் ஒருவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று இணையத்தில் ஒருவர் வீடியோ ஒன்றினை பதிவு செய்துள்ளார்!! அந்த பிரபல நடிகர் யார்?? மற்றும் எதற்காக அவரை அரசியலுக்கு வர சொல்கிறார்கள்?? என்று விரிவாக காணலாம்...

சினிமா துறையில் உள்ள பல பிரபலமான நடிகர்கள் தொடர்ந்து அரசியலுக்கு வந்து அவற்றில் சிலர் அரசியலில் வெற்றியை கண்டுள்ளனர். மேலும் சிலர் தொடர்ந்து வெற்றி அடைய வேண்டும் என்று முயற்சித்து வருகின்றனர். ஆனால் இந்த நிலையில்  நடிகர் அஜித் குமார் அரசியலுக்கு வர வேண்டும் என்று இணையத்தில் ஒருவர் வீடியோ ஒன்றினை பதிவு செய்துள்ளார். தற்போது இருக்கும் கட்சிகள் இணைந்து கிடப்பதாகவும் மக்களை காப்பாற்றுவதற்கு அரசியலுக்கு வர வேண்டும் என்றும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அந்த பதிவில் அஜித் பேனா வைத்து எழுதுவது போன்ற வீடியோவும், நான் ஆணையிட்டால்!! அது நடந்து விட்டால் என்ற பாடலும் அந்த வீடியோவினை பதிவு நெட்டிசன் பதிவு செய்துள்ளார். இயல்பாகவே அஜித் திரைப்படங்களில் மட்டுமே நடித்து எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார் என்பது நமக்கு தெரிந்ததே!! மேலும் புகழ்ச்சியை பெரிதும் விரும்பாத நடிகராகவும் இவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவரை அரசியலுக்கு வரவேற்பதாக இணையத்தில் வீடியோ ஒருவர் பதிவிட்டுள்ளார். இது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தை பெறுவதோடு மட்டுமல்லாமல் தல அஜித் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று அவரை ரசிகர்களும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.ஏற்கனவே எடப்பாடி தலைமையில் அதிமுக சரிவை சந்தித்திருப்பதால் அஜித் வந்தால் கூட கட்சியை காப்பாற்ற முடியும் எனவும் இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளது...