24 special

அந்த அரசியல் பிரபலம் பாஜகவில் இணைகிறாராமே? இணைப்பு டெல்லியிலா? தமிழகத்திலா?

Annamalai bjp
Annamalai bjp

தமிழகத்தில் பாஜகவை வளர்க்கவும் ஆட்சி கட்டிலில் அமர்த்தவும் தேசிய பாஜக தலைமை முழு வீச்சில் களமிறங்கி வருகிறது,  குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் தமிழகத்தில் மிக பெரும் தாக்கத்தை உண்டாக்கி வருகின்றன.


அண்ணாமலையின் பேச்சுக்கள் திமுகவை நோக்கி முன்வைக்கும் கேள்விகள் குறிப்பாக ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மீது முன்வைக்கும் ஊழல் குற்றசாட்டுகள் போன்றவை தமிழகத்தை தாண்டி தேசிய அளவிலும் எதிரொலிக்கின்றன, இந்த சூழலில் தான் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ராஜேந்திர பாலாஜியின் இந்த முடிவிற்கு காரணம் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சிவகாசி மற்றும் ராஜபாளையம் பகுதிகளில் பாஜக வாங்கிய வாக்கு சதவிகிதமும் ஒரு காரணமாக பார்க்க படுகிறது.பாஜக தமிழகத்தில் வளர்ந்து வரும் சூழலிலும் ஆளும் கட்சியான திமுகவின் பழிவாங்கும் நடவடிக்கையில் இருந்து மீளவும் ராஜேந்திர பாலாஜி தன்னை பாஜகவில் இணைத்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது,

ஏற்கனவே அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ சோழவந்தான் மாணிக்கம் பாஜகவில் இணைந்துள்ள சூழலில் தற்போது ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய இருப்பதாக பரவும் தகவல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மாவட்டம் தோறும் தலைவர்களை வலுப்படுத்தும் விதமாக பாஜகவில் நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருவதால் ராஜேந்திர பாலாஜியின் வருகை விருதுநகர் மாவட்டத்தில் பாஜகவை வலுபடுத்தும் என்று பாஜக கணக்குப்போட்டுள்ளதாம் அதற்கு ஏற்றார் போல் தமிழக பாஜக மாவட்ட. தலைவர்கள் விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் விரைவில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.