24 special

நன்றியை மறந்து பாக்குடன் சேர்ந்த துருக்கியை பிச்சையெடுக்கவிட்ட இந்தியர்கள்! ஒரே நாளில் ஏற்பட்ட திருப்பம்! சோலி முடிஞ்ச்


இந்தியாவுக்கு எதிரான மோதலில் பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு அளித்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அந்நாட்டுக்கு எதிராக இந்தியர்கள்  குரல் எழுப்பி வருகின்றனர். பாய்காட் துருக்கி என்ற ஹேஷ்டேக்கின் கீழ் பதிவுகள் சமூக தளங்களில் பரவி வருகின்றன. சில பயணச் சேவை நிறுவனங்கள் துருக்கிக்கான சேவையை நிறுத்தின. “இந்தியர்களின் சுற்றுலாவால், கடந்த ஆண்டு துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய இருநாடுகளும் ரூ. 4000 கோடிக்கும் மேலாக பெற்றது. இதனால், அவர்களின் வேலைவாய்ப்பு, சுற்றுலா, பொருளாதாரம், ஹோட்டல்கள், விமானங்கள் ஆகியவையும் கூட பலன் அடைந்தன. அனால் இன்று, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இருவரும் பாகிஸ்தானுடன் நிற்கிறார்கள். 


 துருக்கிக்கு நிலநடுக்கம் போன்ற இக்கட்டான காலகட்டங்களில் இந்தியா உதவியது என்றும், ஆனால் அதற்கான நன்றியை அந்நாடு நமக்கு காட்டவில்லை என்றும் பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் துருக்கி நாட்டில் தயாரான பொருட்களுக்கான முக்கியத்துவத்தை குறைத்துள்ளன. துருக்கிக்கு மார்பிள் கற்கள் ஏற்றுமதி செய்வதை நிறுத்த ராஜஸ்தான் மாநில வணிகர்கள் முடிவெடுத்துள்ளனர். மும்பையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகளை செலிபினாஸ் (CELEBINAS) என்ற துருக்கி நிறுவனம் கவனித்து வரும் நிலையில், அதனுடனான தொடர்புகளை 10 நாட்களுக்குள் கைவிடவேண்டும் எனவும் முடிவெடுத்துள்ளது இந்தியா 

ஏற்கனவே துருக்கிக்கு, பதிலடி கொடுக்கும் விதமாக துருக்கி ஆப்பிளை புனே வியாபாரிகள் புறக்கணித்துள்ளனர். இதன் காரணமாக துருக்கிக்கு 1000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.புனேவில் உள்ள வேளாண் விளைபொருள் சந்தைக் குழு , “ துருக்கியில் இருந்து ஆப்பிள்களை வாங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம், அதற்கு பதிலாக இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஈரான் மற்றும் பிற பிராந்தியங்களிலிருந்து ஆப்பிள்களை வாங்க இருக்கிறோம்.நாங்கள் எடுத்திருக்கும் இந்த முடிவு தேச பக்தி சார்ந்தது. துருக்கியில் பூகம்பம் ஏற்பட்டபோது, அவர்களுக்கு முதலில் உதவிய நாடு இந்தியா, ஆனால் அவர்கள் பாகிஸ்தானை ஆதரித்தனர்" என்று கூறினர்.

இந்நிலையில் சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனமான ' மேக் மை ட்ரீப்' வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்தவார நிகழ்வு காரணமாக இந்தியா சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.இதனால்,துருக்கி மற்றும் அஜர்பைஜான் செல்ல விரும்புபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது 60 சதவீதம் குறைந்துள்ளது.அதேபோல் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள், அதனை ரத்து செய்வதும் 250 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

நமது நாட்டிற்கு ஆதரவாக நிற்கவும், ஆயுதப்படைகளை மதிக்கும் வகையில், பொது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து, இந்த இரு நாடுகளுக்கும் அத்தியாவசியம் அல்லாத பயணங்களை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.இந்த இரு நாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கான விளம்பரங்கள் மற்றும் சலுகைகளை நிறுத்திவிட்டோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. உ.பி., மாநில சுற்றுலா வழிகாட்டி கூட்டமைப்பு தலைவர் அஜய் சிங் கூறுகையில், அஜர் பைஜான் மற்றும் துருக்கிக்கு சுற்றுலா செல்ல முன்பதிவு செய்தவர்களில் 15 ஆயிரம் பேர் ரத்து செய்துவிட்டனர் என்றார். இதனால் துருக்கி கையேந்தும் நிலைக்கு சென்றுள்ளது. 

மேலும் , நாட்டில் மிக முக்கியமான கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், துருக்கி பல்கலைக்கழகத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜெ.என்.யு. தெரிவித்துள்ளது.

இந்தியா துருக்கியை நேரடியாக எதிர்த்தது இல்லை. நேரடியாக தாக்கியது இல்லை. ஏன் துருக்கி நிலநடுக்கத்திற்கு இந்தியா பணம் கூட அனுப்பி உள்ளது. ஆனால் இத்தனை இருந்தும், வரலாற்று ரீதியாக எதிரியாக இல்லாத இந்தியாவை துருக்கி எதிர்ப்பது ஏன்? போர் சமயத்தில் பாகிஸ்தான் போன்ற நாட்டிற்கு உதவுவது ஏன் என்ற கேள்வி பலருக்கு எழலாம். இதற்கு மதம் தான் காரணம்.. வலுவான இஸ்லாமிய பிணைப்பு: இரண்டும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் மற்றும் நீண்டகால மத மற்றும் கலாச்சார உறவைப் பகிர்ந்து கொள்கின்றன.