24 special

தீபாவளியில் உலகிற்கு இந்தியா சொன்ன விஷயம்! உலகின் தலைப்பு செய்தியே இதுதான்

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

அமெரிக்கா, இந்தியாவை பொருளாதார ரீதியில் கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வரி விதிப்புகளையும், வணிகத் தடைகளையும் உருவாக்கி வருகிறது. ஆனால், அவை எதுவும் இந்தியாவின் வளர்ச்சியையும் மக்களின் உற்சாகத்தையும் கொஞ்சம் கூட தளரச் செய்யவில்லை. ஏனென்றால் இந்த வருடம்கொண்டப்பட்ட  தீபாவளி  வெளிப்படுத்தியுள்ளது.


இந்த ஆண்டில் நாடெங்கிலும் தீபாவளி கொண்டாட்டம் வழக்கத்தை விட பல மடங்கு அதிகம். சிறிய கிராமத்திலிருந்து பெரிய நகரம் வரை பட்டாசு வெடிப்புகளும் விளக்குத் தொடர்களும் வானத்தையே ஒளிரச் செய்தன. விலைவாசி, வரிகள், உலக சந்தை சிக்கல்கள் எதுவும் இந்த மகிழ்ச்சியை குலைக்கவில்லை.

இந்திய மக்கள் மனதில் ஒளிர்ந்தது ஒரு உணர்வு மட்டுமே  “நாம் வளர்கிறோம், எங்களை யாராலும் தடுக்க முடியாது.”

இந்தியாவின் இந்த வளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் பார்த்து “உலக நாடுகளே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.  இதில் முக்கியமாக அமெரிக்கா சற்றே நிலை குழைந்து தான் போயுள்ளது என்றே சொல்லலாம். அவருக்கு இந்தியா இவ்வளவு தன்னம்பிக்கையுடன் “சவாலாக” நிற்கிறது என்று பார்த்து டிரம்ப் அதிர்ச்சியில் தான் இருந்திருப்பார்.  . தன் வணிக நலன்களை முன்னிலைப்படுத்தி உலகத்தை அழுத்தும் அமெரிக்கா, இந்தியாவிடம் அந்த ஆட்டம் நடக்காது என்பதை இப்போது உணர ஆரம்பித்திருக்கிறது

இந்திய அரசு தனது வெளிநாட்டு கொள்கையில் தரமான செய்லபாடுகளை செய்துவருகிறது. .அமெரிக்கா,  ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுக்குறது கொடுக்கின்றன.ஆனால் இந்தியா, தனது நாட்டு நலனுக்கு முடிவு எடுக்கிறது..தீபாவளி பண்டிகை காலத்திலேயே, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து மிக அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கி சாதனை படைத்துள்ளது.அந்த செய்தி வெளிவந்ததும், உலக பங்குச்சந்தை அதிர்ந்தது.இதைக் காணும் வெள்ளை மாளிகைக்கு அது ஒரு "பட்டாசு வெடிப்பு" போலிருந்தது!

டாலர் வீழ்ச்சி, ரூபாய் நிலைத்தன்மை, உற்பத்தித் துறை வளர்ச்சி, மற்றும் ‘Make in India’ எனும் சுயசார்பு இயக்கம் — இவை அனைத்தும் ஒன்றாக இணைந்து இந்தியாவை புதிய திசையில் இழுத்துச் செல்கின்றன.

தீபாவளி ஒளி இம்முறை எல்லைகளைத் தாண்டியுள்ளது.ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக அச்சத்தில் வாழ்ந்த சீக்கியர் மற்றும் இந்துக்கள், இம்முறை பயமின்றி தீபாவளி கொண்டாடினர்.அந்த நாட்டில் தாலிபான் அரசு, தீபாவளி கொண்டாட்டத்திற்கு “ஆதரவு” என அறிவித்தது! வரலாற்றில் முதன் முறையாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் தீபாவளி கொண்டாட்டம் நடந்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் தலைமையில் இந்த கொண்டாட்டம் நடந்தது. பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் தீபாவளி கொண்டாடுவது வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். விழாவின் தொடக்கத்தில், பிரதமர் ஷெரீப் இந்து சமூகத்தினருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.இது ஒரு சிறிய செய்தி போலத் தோன்றினாலும், அதன் பின்னணி மிகப் பெரியது. இந்தியாவின் பண்பாட்டு தாக்கமும், அதன் அமைதி தூதுவனத்தின் பாதிப்பும் தெற்காசிய நாடுகளின் மனநிலையையே மாற்றி வருகின்றது.

பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றதையொட்டி, 'பாகிஸ்தானில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்கள் பாதுகாப்புடன் இருக்கின்றனர் என்பதற்கு இதுவே சாட்சி' என்று சமூகவலைத்தளத்தில்கம்பு சுத்தினார்கள். இதற்கு பதில் அளித்த இந்திய நெட்டிசன்கள், ''பாகிஸ்தானில் எத்தனையோ இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எத்தனை இந்துக்கள் நாட்டை விட்டு விரட்டப்பனர்? என்பது தெரியுமா'' புள்ளி விவரங்களோடு பொளந்து கட்டி வருகிறார்கள். 

இதற்கிடையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கோவாவில் உள்ள இந்தியாவின் சொந்த தயாரிப்பு விமானம் தாங்கி கப்பல் ‘INS விக்ராந்தில்’, கடற்படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார்.

அந்த நேரத்தில், மேலே இந்தியாவின் முதல் போர்விமானமான தேஜஸ் வானில் பறந்தது 

இது உலகிற்கு ஒரு புதிய செய்தியை அனுப்பியது.இந்திய கடற்படை இன்று உலகின் மூன்றாவது வலிமையான கடற்படையாக உயர்ந்துள்ளது. இப்போது உலகம் இந்தியாவை தலைமை வகிக்கும் சக்தியாகப் பார்க்கிறது. ஆஸ்திரேலிய அமைச்சர்  சமீபத்தில் கூறியுள்ளார்: இன்னும் 30 ஆண்டுகளில் இந்தியா உலகின் தலைமைப்பண்பை  ஏற்கும்.”