24 special

உங்க கிட்ட ஒரு ஆடியோ என்றால், எங்ககிட்ட 30 ஆடியோ தயாரா இருக்கு..அதே பாணியில் திருப்பி அடிக்கும் பாஜக!

Stalin ,Annamalai
Stalin ,Annamalai

அரசியலில் நாகரீகமான விமர்சனம் வைப்பது ஒரு வகை என்றால் எதிர் தரப்பை வீழ்த்த எந்த நிலைக்கும் செல்வது மற்றொரு வகை, அந்த வகையில் சமீபத்தில் பாஜக மீது ஒரு பிம்பம் கட்டமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அங்கு பலரது பேச்சுக்கள் ரெகார்ட் செய்யப்பட்டது என்றெல்லாம் ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மிக பெரிய அளவில் பேசுப்பொருளாக மாற்றினர்.


இது முதலில் மக்கள் மத்தியில் பேசுப்பொருளாக மாறினாலும் நாளைடைவில் பாஜகவை பெண்களுக்கு எதிரான கட்சி என்ற தோற்றத்தை திட்டமிட்டு உருவாக்க சிலர் நினைப்பதை பாஜக எளிதில் கடந்து செல்ல விரும்பவில்லை, இந்த நிலையில் ஆடியோ விவகாரம் என்பது இரு பக்கமும் கூர்மையான ஆயுதம் என்பதை நிரூபிக்க பாஜக தயாராகி இருக்கிறதாம்.

பாஜக கொடுக்க இருக்கும் பதிலடி மிக பெரிய அளவில் இருக்கும் வகையில் எந்த ஆயுதத்தை கொண்டு தங்கள் மீது சேற்றை வாரி இறைத்தார்களோ அதே ஆயுதத்தை கொண்டு மிக பெரிய அளவில் பதிலடி கொடுக்க மாவட்ட வாரியாக தயாராகி இருக்கிறதாம். தங்கள் மீது சேற்றை வாரி இறைத்த 30 நபர்களின் உண்மையான தோற்றத்தை அம்பல படுத்த போகிறார்களாம்.

பலரது ஆடியோ உரையாடல்கள் பலவும் பாஜகவினரிடம் சிக்கி இருக்கிறதாம், முறையான நேரத்தில் அந்த ஆடியோகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது, நாகரீகமான அரசியலை முன்னெடுக்கும் நபர்களிடம் நாகரீகமான வழியிலும், அநாகரிகமான அரசியலை முன்னெடுக்கும் நபர்களிடம் அவர்கள் பாணியில் பதிலடி கொடுக்க அதே வழியை தேர்வு செய்ய இருக்கிறார்களாம்.

இந்த தகவல் கசிய விடப்பட பல கட்சியை சேர்ந்த நபர்களும் கப் சுப் ஆகி இருக்கிறார்களாம், இதில் சிலர் தமிழக அரசியல் களத்திற்கு ஆடியோ கலாசாரம் தேவையில்லாத வேலை பாஜகவை விமர்சனம் செய்ய எத்தனையோ வழிகள் இருக்கு ஏன் தேவையில்லாமல் ஆடியோ விவாகரத்தை முன்னிலை படுத்த வேண்டும் என நல்லவர்கள் போல் பல்டி அடித்து இருக்கிறார்களாம்.

சமீபத்தில் விஜி பழனிசாமி என்ற பெண் குறித்த சர்ச்சை செய்தி வெளியான நிலையில் அவர் பேசிய ஆடியோகள் பலவும் ஊடகங்களில் இருக்க இவை அனைத்தையும் மனதில் வைத்து செயல்படுங்கள் என தங்கள் பாணியில் பதிலடி கொடுத்து இருக்கிறார்கள் பாஜகவினர்.

மொத்தத்தில் தான் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என எதிரி தான் தீர்மானிக்க வேண்டும் என்ற கணக்கை கன கட்சிதமாக நிறைவேற்றி பலரை ஆப் செய்து இருக்கிறதாம் பாஜக.

மத்திய உளவுத்துறை முதல் பல்வேறு ஏஜென்சிகளை கையில் வைத்துள்ள பாஜக இந்த அற்ப ஆடியோ விவாகரத்தை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது கூட தெரியாமலா இத்தனை மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறார்கள் என கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.