24 special

வரலாற்றில் முதல் முறை 90 நாடுகளில் இந்திய ராணுவம்! மோடியின் ஒரு தீர்மானம்! உலக அரசியலில் இந்தியாவின் விஸ்வரூபம்

PMMODI,
PMMODI,

ஒரு காலம் இருந்தது… இந்தியா என்றால் அமைதி, பொறுமை, சகிப்புத்தன்மை என்று சொல்லி உலகம் நம்மை புறக்கணித்தது. எல்லையில் தாக்கப்பட்டாலும் பதில் இல்லை, உலக அரசியலில் நம்முடைய குரல் மென்மையாகவே இருந்தது. “பெரிய நாடுகள் பேசும்… இந்தியா கேட்கும்” என்ற மனநிலையில்தான் உலகம் நம்மைப் பார்த்தது. ஆனால் அந்த இந்தியா இப்போது இல்லை. அந்த காலம் முடிந்துவிட்டது.


இன்று உலகம் ஒரு விஷயத்தை தெளிவாக உணர ஆரம்பித்திருக்கிறது – இந்தியா இனி பின்னால் நிற்கும் நாடு அல்ல. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இந்தியா தன்னுடைய பாதுகாப்பு, அரசியல், பொருளாதாரம் அனைத்திலும் தன்னம்பிக்கையோடு முன்னேறுகிறது. அதன் வெளிப்பாடுதான் உலகின் சுமார் 90 நாடுகளில் இந்தியப் பாதுகாப்புப் பிரிவுகள் அமைக்கும் முடிவு. இது ஒரு நிர்வாக முடிவு அல்ல… இது இந்தியாவின் புதிய அடையாளம்.

இந்தியா இனி தன் எல்லைக்குள் மட்டும் பாதுகாப்பை நினைக்கும் நாடு இல்லை. இந்தியாவின் பாதுகாப்பு இன்று உலகளாவிய அளவில் யோசிக்கப்படுகிறது. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா என பல நாடுகளில் இந்திய ராணுவ அதிகாரிகள் இருப்பது, “இந்தியா இங்கேயும் இருக்கிறது” என்ற வலுவான செய்தி. இது யுத்தம் அல்ல… ஆனால் யுத்தத்தைத் தடுக்கும் சக்தி.

தென் சீனக் கடலில் சீனா தன்னிச்சையாக நடக்கும் சூழலில், பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளுடன் இந்தியா கைகோர்ப்பது சாதாரண சம்பவம் இல்லை. இது சத்தமில்லாமல் வைக்கப்படும் ‘செக்’. துப்பாக்கி இல்லாமல், வியூகத்தால் எதிரியை கட்டுப்படுத்தும் அரசியல். இதுதான் புதிய இந்தியாவின் ஸ்டைல்.

ஒரு காலத்தில் இந்தியா ஆயுதங்களை இறக்குமதி செய்த நாடு. இன்று இந்தியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறுகிறது. பிரம்மோஸ் ஏவுகணை, தேஜஸ் போர் விமானம், துருவ் ஹெலிகாப்டர் – இவை இனி இந்தியாவின் பெருமை மட்டும் அல்ல… உலகத்தின் தேர்வாக மாறுகின்றன. ‘மேக் இன் இந்தியா’ என்பது விளம்பரம் இல்லை… அது உலக சந்தையில் இந்தியா பதிக்கும் முத்திரை. இதுவரை புறக்கணிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இந்திய ராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுவது, ஐநா போன்ற சர்வதேச மேடைகளில் இந்தியாவுக்கு ஆதரவான வாக்கு அரசியலை உறுதி செய்யும் வியூகம் என பார்க்கப்படுகிறது.பாதுகாப்பு உதவி, பயிற்சி, ஆயுத வழங்கல் – மூன்றையும் இணைத்து இந்தியா தனது செல்வாக்கை ஆழமாக பதியத் தொடங்கியுள்ளது.

உலக நிபுணர்களின் பார்வையில், இந்த நடவடிக்கை இந்தியாவை ‘Regional Power’ என்ற அடையாளத்திலிருந்து ‘Global Power’ என்ற உயரத்திற்கு நகர்த்தும் முக்கிய திருப்புமுனை.அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசுகளுடன் சமநிலையிலான ராணுவ–அரசியல் கட்டமைப்பை உருவாக்கி, உலக அரங்கில் இந்தியாவின் குரல் இனி அடக்க முடியாத அளவுக்கு ஓங்கி ஒலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இன்று இந்தியா யாரிடமும் அனுமதி கேட்கவில்லை. யாரையும் பின்தொடரவில்லை. தன் நலன், தன் பாதுகாப்பு, தன் மக்கள் – இதுதான் முன்னுரிமை. உலகம் மாறுகிறது… அதற்கு இணையாக இந்தியாவும் மாறுகிறது. பலவீனமான இந்தியா என்ற படம் உலகத்தின் நினைவிலிருந்து அழிகிறது. இது பழைய இந்தியாவும்  இல்லை.பயந்த இந்தியாவும்  இல்லை.மௌனமான இந்தியா இல்லை.இது தன்னம்பிக்கையுடன் நிற்கும் பாரதம் .தலைநிமிர்ந்து பேசும்பாரதம் . உலகம் கணக்கில் எடுக்க வேண்டிய பாரதம் மோடி தலைமையில்…பாரதம்  மீண்டும் அல்ல முதன்முறையாக உலக சக்தியாக மாறுகிறது.