24 special

பானு கோம்ஸ் சூசக கருத்து எதிரொலிக்கிறதா?

Banugomes, annamalai
Banugomes, annamalai

அரசியல் விமர்சகர் பானு கோம்ஸ் சமூக வலைத்தளத்தில் சூசகமாக கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தார் அதில், கிரிக்கெட் விளையாட்டில் ...நேரடியாக எதிர்கொண்டு விளையாடும் மட்டையடி வீரருக்கு ..பந்தை எவ்வாறு அடித்திருக்க வேண்டும் என்று வண்டி வண்டியாக அறிவுரை சொல்வது அபத்தம்.


நெருக்கடியான & மோசமான சூழல்களையும் நேரடியாக எதிர்கொண்டு செயல்படவேண்டும் என்று களத்தில் இறக்கிவிட்ட பின்...ஒவ்வொரு தருணத்திலும் வெளியிலிருந்து பார்த்து  அறிவுரைகள் கொடுத்தால்..அந்த அறிவுரைகள் இடையூறுகளாக மாறும் சாத்தியங்கள் தான்  அதிகம். வீரரின் செயல்படும் வேகம் குறைந்து, ஒரிஜினாலிட்டியை இழக்க செய்யும்.

தனித்துவமான மட்டையடி பாணி எனும் ஒரிஜினாலிட்டிக்கு தான் மக்களின் ஆதரவும், மரியாதையும் என குறிப்பிட்டு இருந்தார். அவரது கருத்து என்பது பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிலர் கொடுக்கின்ற அறிவுரையின் தேவையில்லாத வேலை என்பதன் பொருளாகவே பார்க்க படுகிறது.

இந்த சூழலில் பானு கோம்ஸ் கருத்தை குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் விளக்கம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது அதில், இந்திய கிரிக்கெட் அணியில் ஸ்ரீகாந்த் விளையாடும் போது, ஒவ்வொரு போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவு டீம் மீட்டிங்கில்,  யார் யார் எந்தெந்த பொசிஷனில் எப்படி எல்லாம் விளையாட வேண்டும்,  யார் யார் பந்துக்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று சுமார் ஒரு  மணி நேரம் விவாதிப்பார்களாம் இறுதியில், "

Srikanth, it doesn't apply to you, you can play your own game", என்று அணி தலைவரும் கோச்சும் சொல்லிவிடுவார்களாம்.அதுபோலத்தான் திரு அண்ணாமலை அவர்களுடைய அரசியலும், அவர் தனது 100 சதவீத உழைப்பை இந்த கட்சிக்காக போடுகிறார் அதுவும் மிகவும் அறிவுபூர்வமாக, உணர்வுபூர்வமாக.

மிகவும் திட்டமிட்டு தொலைநோக்கு பார்வையோடு அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளுக்கான அரசியலை செய்து கொண்டிருக்கிறார் இன் நிலையில் அவருக்கு கிட்டத்தட்ட அறிவுரை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

சிலர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பை கொஞ்சம் குறைக்க வேண்டும் அல்லது செய்தியாளர் சந்திப்பின்போது நேரத்தை குறைக்க வேண்டும் அல்லது சில கேள்விகளை தவிர்க்க வேண்டும் என்றும் அவருக்கு அறிவுரை கூறுகிறார்கள் இந்த அறிவுரையெல்லாம் ஓரளவு ஏற்றுக் கொள்ளக் கூடியது என்றாலும் அவரை அவரின் பாணியில் அரசியல் செய்ய விடுவது தான் நல்லது.

இதற்கு முன்னரும் தமிழ்நாட்டில் பாஜக என்னும் கட்சி இருந்தது அதிலும் தலைவர்கள் இருந்தார்கள் ஆனால் அவர்கள் செயல்பட்டதை விட அல்லது அந்த கட்சி அந்த காலத்தில் செயல்பட்டதை விட இப்போது இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு வேகமாக அல்லது விவேகமாக செயல்படுகிறது என்னும் நிலையில் ஏன் மாறுதலை கொண்டு வர வேண்டும். 

நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் எந்த ஒரு சிஸ்டத்தையும் இடைஞ்சல் செய்யக்கூடாது, தமிழ்நாடு பாஜக சார்பாக தொலைக்காட்சி விவாதங்களுக்கு ஆள் அனுப்பவில்லை என்னும் நிலையில் தமிழ்நாடு பாஜகவினுடைய நிலைப்பாட்டை அதன் தலைவர் அடிக்கடி பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்படுத்தி சொல்ல வேண்டும் என்பது அவருடைய நிலைப்பாடாக இருக்கலாம்.

அண்ணாமலை அவர்கள் செய்வது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான அரசியல் அல்ல அடுத்த 30 ஆண்டுகளுக்கான அரசியல் என்னும் நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவிப்பது மட்டும்தான் நமது கடமை என பானு கோம்ஸ் கருத்திற்கு விளக்கம் ஒன்றும் வைரலாகி வருகிறது.

செயல்படுபவர்களுக்கு அறிவுரை என்ற ஒன்றை வழங்காமல் இனியாவது சிலர் உண்மையான கள நிலவரத்தை புரிந்து கொள்வார்களா என பலரும் தங்கள் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.